ஓடிடி ரசிகர்களுக்கு விருந்து..லக்கி பாஸ்கர், பிரதர் மற்றும் பல..வரிசை கட்டி வந்திருக்கும் தீபாவளி ரீலிஸ் படங்கள் லிஸ்ட்
இந்த வாரம் ஓடிடி ரசிகர்களுக்கு சிறந்த விருந்தாக அமைந்துள்ளது. லக்கி பாஸ்கர், பிரதர் மற்றும் பல தீபாவளி ரீலிஸ் படங்கள் வரிசை கட்டி வந்திருக்கின்றன. தமிழில் வந்திருக்கும் படங்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்
ottஇந்த வாரம் ஓடிடி ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வாரமாக அமைந்துள்ளது. தீபாவளி நேரத்தில் வெளியான படங்கள் ஒவ்வொன்றாக இந்த வாரத்தில் ஓடிடியில் வெளியாகியுள்ளது. இந்த வார விடுமுறையை சிறப்பாக பொழுதுபோக்குவதற்கு பிரபல ஓடிடிகளில் வந்திருக்கும் புதிய படங்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்
லக்கி பாஸ்கர்
துல்கர் சல்மான், மீனாட்சி செளத்ரி நடித்து, தனுஷ் நடித்த வாத்தி படத்தை இயக்கிய வெங்கட் அட்லூரி இயக்கத்தில் உருவாகியிருந்த பீரியட் க்ரைம் ட்ராமா படம் லக்கி பாஸ்கர். தெலுங்கில் உருவாகியிருந்த இந்த படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகியுள்ளது.
தீபாவளி ரிலீஸ் படங்களில் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 100 கோடி மேல் வசூலித்த இந்த படம் தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த 28ஆம் தேதி முதல் ஸ்டீரிமிங் ஆகி வருகிறது. இந்த படம் ஓடிடியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
பிளடி பக்கர்
கவின் நடிப்பில் தீபாவளி ரிலீசாக வெளியான பிளாக் காமெடி படம் பிளடி பக்கர். நெல்சன் திலிப்குமாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சிவபாலன் முத்துகுமார் இயக்கியிருந்த இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்சயா ஹரிஹரன் உள்பட பலரும் நடித்துள்ளனர். இந்த படம் அமேசான் ப்ரைம், சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ஸ்டிரீமிங் ஆகி வருகிறது
தீபாவளி போனஸ்
விக்ராந்த், ரித்விகா நடிப்பில் தீபாவளிக்கு முந்தைய வாரம் வெளியான படம் தீபாவளி போனஸ். ஜெயபால் ஜே என்ற புதுமுக இயக்குநர் இயக்கியிருந்த இந்த படம் விமர்சிக ரீதியாக பாராட்டை பெற்றது. தற்போது படம் ஆஹா தமிழ் ஓடிடியில் ஸ்டிரீமிங் ஆகி வருகிறது.
பிரதர்
ராஜேஷ் எம் இயக்கத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா, நட்ராஜ் சுப்பிரமணி உள்பட பலர் நடித்து காமெடி கலந்த பேமிலி படமாக பிரதர் உருவாகியுள்ளது. தீபாவளி ரிலீசாக வெளியான இந்த படம் ரசிகர்களை பெரிது கவரவில்லை. தற்போது இந்த படம் ஜீ5 ஓடிடி தளத்தில் நவம்பர் 29 முதல் ஸ்டிரீமிங் ஆகி வருகிறது.
அந்தகன்
பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியிருக்கும் படம் அந்தகன். படத்தில் பிரசாந்த், பிரியா ஆனந்த், சிம்ரன், கார்த்திக், சமுத்திரகனி, ஊர்வசி, யோகி பாபு, வனிதா விஜயகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து நல்ல வசூலையும் பெற்ற இந்த படம் தற்போது மூன்று மாதங்கள் கழித்து அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
பாராசூட்
ராசு ரஞ்சித் இயக்கத்தில் கிஷோர், கனி திரு, இயல், கிருஷ்ணா, பாவா செல்லத்துரை, காளி வெங்கட் உள்பட பலர் நடித்துள்ள புதிய வெப்சீரிஸ் பாராசூட். த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இந்த சீரிஸ் ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடியில் நவம்பர் 29ஆம் தேதி ஸ்டிரீமிங் ஆகி வருகிறது. மொத்தம் 5 எபிசோட் கொண்ட இந்த சீரிஸ்க்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.