தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Lord Murugan Changed The Decision Of Sandow Chinnappa Thevar Who Climbed The Mountain To Commit Suicide

Sandow Chinnappa Thevar: தற்கொலை செய்ய மலை ஏறிய சாண்டோ சின்னப்ப தேவர்.. முடிவை மாற்றிய முருகன்!

Marimuthu M HT Tamil
Jan 21, 2024 04:30 AM IST

தற்கொலைக்கு முயன்ற சாண்டோ சின்னப்பதேவரின் முடிவை மாற்றிய அந்த தருணம் இதுதான்!

தற்கொலை செய்ய மலை ஏறிய சின்னப்ப தேவர்.. முடிவை மாற்றிய முருகன்
தற்கொலை செய்ய மலை ஏறிய சின்னப்ப தேவர்.. முடிவை மாற்றிய முருகன்

ட்ரெண்டிங் செய்திகள்

அப்படிப்பட்ட சாண்டோ சின்னப்ப தேவர் தற்கொலைக்கு முயன்றார் என்றால் நம்பமுடிகிறதா,  அதில் இருந்து அவர் எப்படி தப்பினார் என்பது குறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் சபீதா ஜோசப், டவர் நியூஸ் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் விரிவாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மூத்த பத்திரிகையாளர் சபீதா ஜோசப் அளித்த பேட்டியில், ''எம்.ஜி.ஆரை வைத்து 16 வெற்றிப்படங்களைக் கொடுத்தவர் சாண்டோ சின்னப்ப தேவர். ஒரு வறுமையான காலத்தில் தற்கொலைக்கு முயன்றால் என்றால் நம்பமுடிகிறதா?. அது நடந்தது. சாண்டோ சின்னப்ப தேவர், தனது இளம் வயதில் இரும்பு பட்டறையில் மாதம் ஒன்பது ரூபாய் சம்பளத்துக்கு வேலை செய்துகொண்டு இருந்தார். அவரது குடும்பத்தில் ஆறு குழந்தைகள். அப்போது அவரது குடும்பம் வறுமையில் தவித்தது. தேவருக்கு, அரிசி சாப்பாடே அரிதாக இருந்துள்ளது. களியும் நீர் ஆகாரமும் தான் கிடைத்துள்ளது. வறுமையை விரட்டணும் என்கிற எண்ணம் சாண்டோ சின்னப்பதேவருக்கு இருந்தது. ஆனால், நன்கு கறி சாப்பாடு சாப்பிடவேண்டும் என்றும் அடிக்கடி தோன்றுமாம். அப்போது பணிபுரியும் இடத்துக்குப் பக்கத்தில் மதியம் கடன் வைத்து கறி சோறு சாப்பிட்டுட்டு இருந்திருக்கார். கடன் ஆறு ரூபாய் வரை ஏறிடுச்சு. அப்போது கடை ஊழியர் கடன் பாக்கியைக்கேட்டு, பொதுமக்கள் முன்பு சின்னப்பதேவரை அவமானப்படுத்தியுள்ளார். உடனே, இரண்டு நாட்களில் தருவதாக சொல்கிறார், சின்னப்பதேவர். அதற்கு கடை ஊழியர் நக்கலாக சிரித்திருக்கிறார். அப்போது வெளியில் இருந்து உள்ளே வந்த முதலாளி, ‘என்னடா பெரிய சண்டியர்னு நினைச்சிட்டீயா? அதையெல்லாம், அந்த கோதாக்குள்ள வைச்சுக்கோ. இங்கெல்லாம் அப்படி வைச்சுக்கக்கூடாது. தினமும் வந்து கறியும் சோறுமா சாப்பிடத்தெரியுது. பணம் கொடுக்கத்தெரியல உனக்கு’என்று சொல்லி கடை முதலாளி சின்னப்பதேவரை தள்ளுகிறார். அப்போது கீழே விழுந்துவிடுகிறார், தேவர். இதனால் அவருக்கு மிகவும் அவமானமாகப் போய்விடுகிறது.

'என்னடா நம்மளை ஒரு ஆறு ரூபாய்க்கு அவமானப்படுத்திட்டாங்களேன்னு’ மருதமலை முருகன் கோயிலுக்குப் போகிறார்.

அங்கு சென்று அமர்ந்து, மனதுக்குள்ளேயே மருதமலை முருகனோடு தர்க்கம்பண்ணி சண்டைபோட்டுக்கொண்டே இருந்திருக்கிறார். அவரை அடிப்பதற்காக ஒரு கட்டையையும் கையில் கொண்டு சென்றிருக்கிறார்.

அப்போது, ‘முருகா நீ என்னதான் பண்ணப்போற. எப்படி ஏன் எதிர்காலத்தை அமைக்கப்போற. உனக்குத் தான் தெரியும். நீ என்ன பண்ணுவ ஏது பண்ணுவன்னு எனக்குத் தெரியாது. எனக்கு இப்ப இந்த அவமானத்தில் இருந்து என்னை காப்பாத்துணும். இந்த அவமானத்தில் இருந்து என்னைக் காப்பாத்திவிட்டேன்னா நான் காலம் முழுக்க உனக்கு அடிமையாக இருந்து, இந்தக் கோயிலுக்கு நல்லகாரியங்கள் செய்வேன். இல்லைன்னா, உன் முன்னாடியே மலைமீது இருந்து கீழே குதிச்சு செத்துப் போயிடுவேன்’அப்படின்னு கண்கலங்கி வேண்டுகிறார், சின்னப்பதேவர்.

இப்படி சொல்லிக்கொண்டே ஒரு புலம்பலோடு வரும்போது, அவரது கால் அடியில் ஒரு சிகரெட் பாக்கெட் தென்படுகிறது. மறுபடியும் புலம்பிக்கொண்டே நடக்கிறார். மீண்டும் அவர் காலுக்கு முன்பே வருகிறது, அந்த சிகரெட் பாக்கெட். அதை எடுத்துப் பார்த்தால் அதில் 10 ரூபாய் இருக்கிறது. உடனே ஆச்சரியப்பட்ட சாண்டோ சின்னப்பதேவர் ''முருகா நீ என்னை காப்பாத்திட்டேன்னு'' சொல்லி கண்கலங்கியிருக்கார். பின்னர், அந்தப் பணத்தை வைத்து, கடனை அடைத்திருக்கார். பிற்காலத்தில் சினிமா தயாரிப்பாளர் ஆனபின், இறுதிவரை நன்றி மறக்காத தேவர் ஒவ்வொரு படத்திலும் தனக்கு கிடைக்கும் ஒரு லாபத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை, மருதமலை முருகன் கோயிலுக்குக் கொடுத்து விடுவாராம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.