Top Tamil Ott Movies: தனுஷ், கார்த்தி, விஜய் சேதுபதி..ஓடிடியில் கெத்து காட்டிய தமிழ் படங்கள் லிஸ்ட் இதோ-look out the list of top tamil ott movies reaches fans all over india - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Top Tamil Ott Movies: தனுஷ், கார்த்தி, விஜய் சேதுபதி..ஓடிடியில் கெத்து காட்டிய தமிழ் படங்கள் லிஸ்ட் இதோ

Top Tamil Ott Movies: தனுஷ், கார்த்தி, விஜய் சேதுபதி..ஓடிடியில் கெத்து காட்டிய தமிழ் படங்கள் லிஸ்ட் இதோ

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 21, 2024 11:01 AM IST

Top Tamil Ott Movies: தனுஷ், கார்த்தி, விஜய் சேதுபதி உள்பட தமிழில் வெளியாகி ஓடிடியில் கெத்து காட்டிய தமிழ் படங்கள் லிஸ்ட் பற்றி பார்க்கலாம்

Top Tamil Ott Movies: தனுஷ், கார்த்தி, விஜய் சேதுபதி..ஓடிடியில் கெத்து காட்டிய தமிழ் படங்கள் லிஸ்ட் இதோ
Top Tamil Ott Movies: தனுஷ், கார்த்தி, விஜய் சேதுபதி..ஓடிடியில் கெத்து காட்டிய தமிழ் படங்கள் லிஸ்ட் இதோ

இவ்வாறு உருவாகும் பான் இந்தியா படங்கள் அந்தந்த மொழிகளில் இருக்கும் மாஸ் ஹீரோ, முன்னணி ஹீரோக்களை வைத்து உருவாகும் படங்களாக இருக்கின்றன. சமீப காலமாக பான் இந்திய படங்கள் வரவு இந்திய சினிமாவை ஆக்கிரமித்து கொண்டிருக்கின்றன.

ஆனால் பான் இந்தியா படங்களின் வருகைக்கு முன்னரும், அவ்வாறு வெளியாகாத சில படங்களும் குறிப்பிட்ட மொழிகளில் ரிலீசாகி பின்னர் இந்தியா முழுவதும் பிரபலமாகியுள்ளது. அதற்கு முக்கிய காரணமாக ஓடிடி தளங்கள் அமைந்துள்ளன. ஓடிடியில் வெளியாகும் படங்கள் பிற மொழிகளிலும் டப் செய்யப்படுவது அந்த மொழி படங்களின் ரசிகர்களை கவந்திழுக்க காரணமாக அமைகிறது.

அந்த வகையில் தமிழில் வெளியாகி, ஓடிடி ரிலீஸுக்கு பின் பான் இந்தியா அளவில் ரீச் ஆன டாப் சினிமாக்கள் ஏராளமாக உள்ளன. இந்த படங்கள் ஓடிடியில் கெத்து காட்டிய தமிழ் படங்களாகவே இருக்கின்றன. அவற்றின் டாப் லிஸ்ட் படங்கள் பற்றி பார்க்கலாம்

வட சென்னை

தனுஷ் - வெற்றி மாறன் கூட்டணியில் 2018இல் வெளியான க்ரைம் ட்ராமா படம் வடசென்னை. அமீர், டேனியல் பாலாஜி, சமுத்திரகனி, கிஷோர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் இந்த படத்தின் நான் லீனியர் திரைக்கதை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

வட சென்னை 2 பட ரிலீஸுக்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கும் நிலையில், நார்த் செண்ட்ரல் என்ற பெயர் இந்த படம் வட இந்தியா ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.

அமேசான் ப்ரைம் ஓடிடியில் இருக்கும் இந்த படம் டாப் தமிழ் பட லிஸ்டில் உள்ளது.

கைதி

கார்த்தி - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் 2019இல் வெளியான ஆக்‌ஷன் த்ரில்லர் படமான கைதி தமிழ் மொழியையும் கடந்த இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்ட படமாக உள்ளது. ஹீரோயின் இல்லாமல் விறுவிறுப்பான திரைக்கதையுடன் அமைந்திருக்கும் இந்த படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் உள்ளது. இதுவும் ஓடிடி படங்களில் டாப் 10 லிஸ்டில் உள்ளது

பரியேறும் பெருமாள்

இயக்குநர் மாரிசெல்வராஜ் அறிமுகம படமான பரியேறும் பெருமாள் படத்தில் கதிர், கயல் ஆனந்தி உள்பட பலரும் நடித்திருப்பார்கள். கிராமத்து பின்னணியில் ஒடுக்கப்பட்ட நாயகன், உயர் வகுப்பு சேர்ந்த நாயகி இடையிலான உறவு பற்றி பேசி இந்த படம் பான் இந்தியா அளவில் ரீச் ஆனது.

இந்த படமும் அமேசான் ப்ரைம் ஓடிடியில் ரிலீசான நிலையில், இந்தியா முழுவதும் பல மொழி ரசிகர்களால் பார்க்கப்பட்டு பாராட்டுகளையும் பெற்றது

சூப்பர் டீலக்ஸ்

தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் நான்கு கதைகளை கொண்ட படமாக உருவாகியிருந்த சூப்பர் டீலக்ஸ் தமிழில் வித்தியாசமான படைப்பாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், சமந்தா, காயத்ரி, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின் உள்பட பலரும் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் பாடல்கள் ஏதும் இல்லாமல் பின்னணி இசையில் மிரட்டிய படமாக இருந்த சூப்பர் டீலக்ஸ் பிற மொழி ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்த படமாக உள்ளது.

தமிழில் கல்ட் கிளாசிக் படமாக மாறியிருக்கும் சூப்பர் டீலக்ஸ் நெட்பிளிக்ஸ், ஆப்பிள் டிவி ஓடிடி தளத்தில் உள்ளது.

அசுரன்

தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியின் மற்றொரு படைப்பாக அசுரன் உள்ளது. 1980 காலகட்டத்தில் நடக்கும் கதையாக, பிரபல எழுத்தாள் பொன்மனி எழுதிய வெக்கை என்ற புத்தகத்தை அடிப்படையாக கொண்டு படம் உருவாகியிருக்கும். பஞ்சமி நிலம் தொடர்பான அரசியலை குடும்ப செண்டிமென்ட் உடன் பேசிய இந்த படம் ஹிட்டானதுடன் தெலுங்கிலும் வெங்கடேஷ் - பிரியாமணி நடிப்பில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றது.

அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் இந்த படம் பாலிவுட் ரசிகர்களாலும் கொண்டாடப்பட்ட படமாக மாறியது. தனுஷின் நடிப்பை இந்திய முழுவதும் ரசிகர்கள் பாராட்டி தள்ளினர்

விக்ரம் வேதா

புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் மாதவன் - விஜய் சேதுபதி பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக வெளியாகி வசூலை குவித்தது விக்ரம் வேதா. போலீஸ் மற்றும் கேங்ஸ்டர்களுக்கு இடையிலான மோதலை விக்ரமாதித்தன் - வேதாளம் கதை பாணியில் சொல்லியிருக்கும் திரைக்கதை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. படத்தில் ஷரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார், கதிர் உள்பட பலரும் நடித்திருப்பார்கள்.

இந்த படத்தின் இந்தி ரீமேக் இதே பெயரில் சயீப் அலிகான் - ஹிர்திக் ரோஷன் நடிப்பில் 2022இல் வெளியானது. ஆனால் தமிழுக்கு கிடைத்த வரவேற்பு இந்தியில் கிடைக்கவில்லை. அத்துடன் இந்தி வெளியிட்டுக்கு முன் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட படங்களின் லிஸ்டில் ஒன்றாக விக்ரம் வேதா உள்ளது.

பார்க்கிங்

ஹரீஷ் கல்யாண், எம்.எஸ். பாஸ்கர் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க கடந்த ஆண்டு வெளியான படம் பார்க்கிங். அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியிருக்கும் இந்த படம் ஒரே காம்பவுண்டில் வசிக்கும் இளைஞர், முதியவர் ஆகியோருக்கு இடையே காரை பார்க்கிங் செய்வதில் ஏற்படும் ஈகோ பிரச்னையை அடிப்படையாக கொண்டு படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.

டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியான இந்த படம் மொழிகளை கடந்த வரவேற்பை பெற்றது. தெலுங்கு, இந்தி ரசிகர்களாலும் படம் வெகுவாக கொண்டாடப்பட்டது.

துருவங்கள் பதினாறு

அறிமுக இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியான க்ரைம் த்ரில்லர் படமான துருவங்கள் பதினாறு ஓடிடியில் கொண்டாடப்பட்ட படங்களில் ஒன்றாக உள்ளது.

ரகுமான் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த படம் கன்னடத்தில் ரீமேக் ஆனது. இந்தியிலும் வருண் தவான் நடிப்பில் ரீமேக் செய்யப்படவுள்ளது. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இந்த படம் இடம்பிடித்துள்ளது

விசாரணை

வெற்றிமாறன் இயக்கத்தில் பான் இந்தியா அளவில் பேசப்பட்ட படமாக விசாரணை உள்ளது. உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட லாக்கப் என்ற நாவலை அடிப்படையாக கொண்டு இந்த படம் அமைந்திருக்கும்.

நெட்பிக்ஸ் ஓடிடி தளத்தில் இருக்கும் விசாரணை நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய படமாக உள்ளது

மகாராஜா

விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா கடந்த ஜூன் மாதம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து ஹிட்டானதுடன், தற்போது ஓடிடியில் கலக்கி கொண்டிருக்கிறது. இந்த படத்தை நிதிலன் சுவாமிநாதன் இயக்கியுள்ளார்.

அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இருக்கும் இந்த படம் மொழிகளை கடந்து வரவேற்பை பெற்று வருகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.