தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Lokesh Kanagarajs First Film.. This Is A Film That Gives You The Feeling Of Witnessing A Day's Experience In The City

7 Years of Maanagaram: லோகேஷ் கனகராஜின் முதல் படம்.. மாநகரில் ஒரு நாள் அனுபவத்தை உடனிந்து பார்த்த உணர்வு தந்த படம் இது!

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 10, 2024 06:30 AM IST

Lokesh Kanagaraj: சென்னை போன்ற ஒரு மாநகரில் தப்பு செய்பவனும் எந்தவித தவறும் செய்யாமல் இருப்பவனும் ஒரு சூழலில் இன்ட்டர் லிங்க் ஆகிவிடும் சுவாரஸ்யமான கதை நம்மை ஈர்க்கிறது. இந்த படம் 2017 மார்ச் 10ல் வெளியாகி இன்று ஏழு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. எஸ்.ஆர்.பிரபு தயாரித்த படம். இசை ஜாவேத் ரியாஸ்.

மாநகரம் திரைப்படம்
மாநகரம் திரைப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

சென்னை போன்ற ஒரு மாநகரில் தப்பு செய்பவனும் எந்தவித தவறும் செய்யாமல் இருப்பவனும் ஒரு சூழலில் இன்ட்டர் லிங்க் ஆகிவிடும் சுவாரஸ்யமான கதை நம்மை ஈர்க்கிறது. இந்த படம் 2017 மார்ச் 10ல் வெளியாகி இன்று ஏழு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. எஸ்.ஆர்.பிரபு தயாரித்த படம்.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசை ஜாவேத் ரியாஸ்.

சந்தீப் கிஷன், ஶ்ரீ ரெஜினா, சார்லி, மதுசூதனராவ், முனிஸ்காந்த், ராம்தாஸ் ரவிவெங்கட், அருண், அலெக்சாண்டர், தீனா, வினோத், ஆகியோர் நடித்துள்ளனர்.

சென்னை மாநகரில் வெவ்வேறு திசையில் பயணம் செய்யும் மனிதர்கள். ஒவ்வொருவருக்குமான வேலைகளும் பிரச்சினைகளும் வேறு. ஆனால் சந்தர்ப்பமும் சூழலும் எப்படி ஒவ்வொருவருக்கும் தொடர்பு ஏற்படுத்துகிறது என்று சொல்லக்கூடிய இன்ட்டர் லிங்க் ஸ்டோரியை பரபரவென்று தொய்வு இல்லாமல் திரைக்கதை வசனம் எழுதி அமைத்திருப்பதிலேயே இயக்குநர் வெற்றி பெறுகிறார்.

 அவருடைய கதைக்கு வசதியாக எடிட்டர் காட்சிகளை அழகாக அடுக்கி நமக்கு புரிய வைக்கிறார். திருச்சியில் இருந்து ஐ.டி. நிறுவனம் ஒன்றுக்கு நேர்காணல் வரும் ஶ்ரீ. அந்த நிறுவனத்தில் ஆட்களை தேர்வு செய்யும் பொறுப்பில் இருக்கும் ரெஜினா. ரெஜினாவுக்கு பிடிக்காத போதிலும் விரட்டி விரட்டி தன்னை காதலிக்க வற்புறுத்தும் சந்தீப் கிஷன். இன்னொரு புறம் மகனுடைய மருத்துவம் பார்க்க சென்னை வந்து டாக்சி வாடகைக்கு எடுத்து ஓட்டி வரும் சார்லி. வாடகை கார் நிறுவனம் மட்டும் அல்லாமல் உள்ளூர் தாதாவாக மதுசூதனராவ்.

கடத்தல் கும்பலாக அருண் அலெக்சாண்டர், சதீஷ், முனிஸ்காந்த். இவர்கள் அனைவரும் ஒரு புள்ளியில் இணைவது எப்படி என்று காட்சிகள் எல்லாம் அடுக்கடுக்காக விரிகிறது. படம் ஆரம்பித்த முதல் பதினைந்து நிமிடங்களில் ஶ்ரீ நேர்முக தேர்வில் ரெஜினா சந்திப்பு முடிந்த பிறகு சந்தீப் கிஷனை தாக்குதல் நடத்த வந்த கும்பல் ஆள் மாறி ஶ்ரீ யை தாக்குகின்றனர். இதில் சான்றிதழ்களை இழந்து மயங்கிய நிலையில் டைட்டில் விறுவிறுப்பாக நகரின் ஒரு இரவுப் பொழுதை உணர்த்தும். 

அடுத்த நாள் காலே சுந்தீப் ரெஜினா மீது ஆசிட் ஊற்றி விடுவேன் என்று மிரட்டியவன் முகத்தில் ஆசிட் வீச நடக்கும் சண்டையில் ஶ்ரீ கையால் ஆசிட் பாட்டிலை எடுத்து கொடுக்க சம்பவத்தில் தொடர்பே இல்லாத ஶ்ரீ போலிஸ் விசாரணையில் மாட்டுகிறார். மறுபுறம் வட்டி தராத நபரை மிரட்டுகின்றனர். இதனால் அந்த நபரின் மகனை கடத்தி கொண்டு வர சென்ற ராம்தாஸ் வேறு ஒரு பையனை அதுவும் தாதா மதுசூதனன் பையனை கடத்தி வந்து சிக்கலை உருவாக்குகிறார். கார் ஓட்டும் சார்லி அவரது வண்டியில் கிடக்கும் சான்றிதழ்களை போலிஸிடம் ஒப்படைக்கிறார்.

இதற்கு பின் கடத்தப்பட்ட பையன் மூலம் எல்லோரும் கனெக்ட் செய்யப்படுவார்கள். கடத்தி வந்த பையனை திரும்பி தர ஒரு கோடி ரூபாய் பணம் கேட்கும் போது சாமர்த்தியமாக பையன் தப்பி ஓடி லாரியில் மறைந்து இருப்பான். மறைந்து இருக்கும் பையனை ரெஜினா தன்னுடன் அழைத்து செல்லும் போது சுந்தீப் காவல் நிலையத்தில் அந்த பையனை ஒப்படைப்பார். 

அதன் பின்னர் விறுவிறுப்பாக பையன் ஒப்படைக்க பட்டானா..கடத்தல் கும்பல் என்ன ஆனது.ஶ்ரீ க்கு சான்றிதழ் கிடைத்ததா. சுந்தீப் ரெஜினா காதல் என்ன ஆயிற்று என்ற முடிச்சுகள் விடுவிக்கப்படும். படத்தில் வரும் அடுக்கடுக்காக வரும் காட்சிகள் நமக்கு ஒரு பதற்றத்தை உருவாக்கும். 

சந்திப்கிஷன் துணிச்சலாக அலட்டல் இல்லாத இளைஞராகவும், ஶ்ரீ தனது இயல்பான நடிப்பாலும் நம்மை கவர்கிறார். அதேபோல் ரெஜினா பாத்திரத்துக்கு ஏற்ப மிளிர்கிறார். காமெடியூட்டும் சார்லி குணச்சித்திர வேடத்தில் முதிர்ந்த நடிப்பை தருகிறார். முனிஸ்காந்தின் அப்பாவி தனம் நமக்கு சிரிப்பூட்டுகிறது. மொத்தத்தில் அனைத்து நடிகர்களுமே யதார்த்தமாக நடித்து இருப்பது சிறப்பு.

மொத்தத்தில் மாநகரில் ஒருநாள் அனுபவத்தை நாமும் உடனிருந்து பார்த்தது போன்ற விறுவிறுப்பை மாநகரம் நமக்கு தருகிறது. ஒரு வித்தியாசமான படத்தை தந்த லோகேஷ் அவர்களுக்கு தொடர்ந்து படங்களை இயக்குவார் என்ற அன்றைய கணிப்பு இன்று நிறைவேறியிருக்கிறது. இதற்கு மாநகர வெற்றி ஆரம்ப புள்ளி என்றால் மிகையல்ல

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்