‘நான் தவறு செய்திருக்கலாம்… நான் அதிபுத்திசாலி கிடையாது’ -சஞ்சய் தத் கருத்துக்கு லோகேஷ் பதிலடி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘நான் தவறு செய்திருக்கலாம்… நான் அதிபுத்திசாலி கிடையாது’ -சஞ்சய் தத் கருத்துக்கு லோகேஷ் பதிலடி!

‘நான் தவறு செய்திருக்கலாம்… நான் அதிபுத்திசாலி கிடையாது’ -சஞ்சய் தத் கருத்துக்கு லோகேஷ் பதிலடி!

HT Tamil HT Tamil Published Jul 15, 2025 12:56 PM IST
HT Tamil HT Tamil
Published Jul 15, 2025 12:56 PM IST

சமீபத்தில், சஞ்சய் தத் வெளிப்படையாக லோகேஷ் கனகராஜ் தன்னை லியோவில் வீணடித்ததற்காக அவர் மீது கோபமாக இருக்கிறார் என்று கூறினார். அதற்கு இயக்குனர் எப்படி பதிலளித்தார் என்பது இங்கே.

‘நான் தவறு செய்திருக்கலாம்… நான் அதிபுத்திசாலி கிடையாது’ -சஞ்சய் தத் கருத்துக்கு லோகேஷ் பதிலடி!
‘நான் தவறு செய்திருக்கலாம்… நான் அதிபுத்திசாலி கிடையாது’ -சஞ்சய் தத் கருத்துக்கு லோகேஷ் பதிலடி!

லோகேஷ் பேசியது என்ன?

டி.எச்.ஆர் இந்தியாவுக்கு லோகேஷ் அளித்த பேட்டியில், ‘அன்று சஞ்சய் தத் பேசிய உடனயே எனக்கு போன் செய்தார். அப்போது அவர் தான் வேடிக்கையாக பேசியதை மக்கள் திரித்து, வெட்டி ஒட்டி சமூகவலைதளங்களில் பதிவிட்டு விட்டனர். அதை பார்ப்பதற்கு அருவருப்பாக இருந்தது என்றார். அதற்கு நான் அதெல்லாம் ஒன்று பிரச்சினை இல்லை என்று கூறினேன்.

மேலும் பேசிய லோகேஷ், ‘ நான் அவர் கதாபாத்திரத்தில் தவறு செய்திருக்கலாம். தவறே செய்யாமல் இருக்க நான் தலைசிறந்த இயக்குநரோ அல்லது அதிபுத்திசாலியோ இல்லை. நான் எனது திரைப்படங்களில் நிறைய தவறுகளை செய்திருக்கிறேன். ஆனால் எல்லாமே எனக்கு பாடம்தான். சஞ்சய் தத்துடன் நான் ஒரு சிறந்த கதாபாத்திரத்தில் வேலை பார்ப்பேன்’ என்று பேசினார்.

சஞ்சய் தத் பேசியது என்ன?

கடந்த வாரம், ஷில்பா ஷெட்டி மற்றும் துருவா சர்ஜா இணைந்து நடித்த கன்னட படமான KD – The Devil படத்தை புரோமோட் செய்யும் போது சஞ்சய் தத் இது குறித்து லோகேஷ் கனகராஜ் பேசினார்.

அப்போது பேசிய சஞ்சய் தத், ‘ லியோ படத்தில் தளபதி விஜயுடன் பணியாற்றியது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்தப்படத்தில் லோகேஷ் எனக்கு பெரிய கதாபாத்திரம் கொடுக்காததால் அவர் மீது எனக்கு கோபம் இருக்கிறது. அவன் என்னை வீணாக்கி விட்டார்.’ என்றார்.

அஜித்தை எனக்கு மிகவும் பிடிக்கும்

மேலும் பேசிய அவர், ‘ ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனை மதிக்கிறேன். நான் அவர்களைப் பார்த்து அவர்களிடமிருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்கிறேன். ரஜினியுடன் பல படங்களில் பணியாற்றியுள்ளேன். அவர் மிகவும் பணிவான மனிதர். அஜித்தை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் என்னுடைய நெருங்கிய நண்பர்’ என்று பேசினார்.

லோகேஷ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாஹிர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான், ஜூனியர் எம்.ஜி.ஆர், மோனிஷா பிளெஸ்ஸி, காளி வெங்கட் ஆகியோர் நடித்துள்ள 'கூலி' திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இது அயன் முகர்ஜியின் ஹிருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடித்த வார் 2 உடன் மோதுகிறது.