Tamil Movies Rewind: தமிழ் புத்தாண்டு நாளில் வெளியாகி கோடிகளில் வசூலை அள்ளிய படங்கள்.. மறக்க முடியாத சினிமாக்கள் லிஸ்ட்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Movies Rewind: தமிழ் புத்தாண்டு நாளில் வெளியாகி கோடிகளில் வசூலை அள்ளிய படங்கள்.. மறக்க முடியாத சினிமாக்கள் லிஸ்ட்

Tamil Movies Rewind: தமிழ் புத்தாண்டு நாளில் வெளியாகி கோடிகளில் வசூலை அள்ளிய படங்கள்.. மறக்க முடியாத சினிமாக்கள் லிஸ்ட்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Apr 14, 2025 05:30 AM IST

பிளாக் அண்ட் ஒயிட் காலம் முதல் தற்போது வரை தமிழ் புத்தாண்டு நாளான ஏப்ரல் 14ஆம் தேதி முந்தைய ஆண்டுகளில் வெளியாகி ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த படங்கள் ஏராளமாக உள்ளன. அந்த படங்கள் பற்றிய சிறிய பிளாஷ்பேக்கை பார்க்கலாம்

தமிழ் புத்தாண்டு நாளில் வெளியாகி கோடிகளில் வசூல் அள்ளிய படங்கள்.. மறக்க முடியாத சினிமாக்கள் லிஸ்ட்
தமிழ் புத்தாண்டு நாளில் வெளியாகி கோடிகளில் வசூல் அள்ளிய படங்கள்.. மறக்க முடியாத சினிமாக்கள் லிஸ்ட்

கிளாசிக் படங்கள்

1950 முதல் 1975 காலகட்டத்தில் ஏப்ரல் 14 தேதி வெளியான படங்களில் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பற்றி மறக்க முடியாத தமிழ் சினிமாக்களாக சிவாஜி கணேசன் நடிப்பில் 1958இல் வெளியான சம்பூர்ன ராமயணம், 1962இல் வந்த படித்தால் மட்டும் போதுமா, 1965இல் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான வெண்ணிற ஆடை, 1966இல் ஜெய்சங்கர், ஜெயலலிதா நடிப்பில் வெளியான திகில் படமான யார் நீ?, 1967இல் ஜெய்சங்கர் நடிப்பில் வெளியான பட்டணத்தில் பூதம் போன்ற படங்கள் உள்ளன. இந்த படங்கள் எல்லாம் மிஸ் செய்யாமல் பார்த்து ரசிக்ககூடிய கிளாசிக் படங்களாக உள்ளன.

நினைத்தாலே இனிக்கும்

பாலசந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஜெயப்பிரதா, கீதா இணைந்து நடித்து சுஜாதா திரைக்கதை எழுதி 1979இல் வெளியாகி ஹிட்டான படம் நினைத்தாலே இனிக்கும். கண்ணதாசன் பாடல் வரிகளில் எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகின. நம்ம ஊரு சிங்காரி, எங்கேயும் எப்போதும், சிவசம்போ, பாரதி கண்ணம்மா போன்ற பாடல்கள் இன்றும் பலராலும் கேட்டு ரசிக்கப்படும் பாடலாக உள்ளது

இதே நாளில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான புதிய வார்ப்புகள், கமல்ஹாசனின் தாயில்லாமல் நானில்லை படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

1980 முதல் 1990 வரை

1982இல் பாக்யராஜ் இயக்கி நடித்து வெளியான தூரல் நின்னு போச்சு, சி.வி. ராஜேந்திரன் இயக்கத்தில் சிவாஜி கணேசன், ஸ்ரீபிரியா, பிரபு நடித்த சங்கிலி (1982) , ஆர். தியகராஜன் இயகத்தில் ரஜினிகாந்த் நடித்த ரங்கா (1982), தாய்வீடு (1983), சி.வி. ராஜேந்திரன் இயக்கித்தில் 1984இல் வெளியான வாழ்க்கை, கார்த்திக் ரகுநாத் இயக்கத்தில் சத்யராஜ் நடித்த மக்கள் என் பக்கம் போன்ற படங்கள் வெளியாகியுள்ளன

அபூர்வ சகோதரர்கள்

சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கமல்ஹாசன், கெளதமி, நாகேஷ், நாசர், ஜெய்ஷங்கர், டெல்லி கணேஷ் நடித்து கிரேஸி மோகன் வசனத்தில் 1989இல் வெளியாகி தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் அபூர்வ சகோதரர்கள். பிலிம் பேர் விருது, தமிழ்நாடு அரசின் விருதுகளை வென்றதோடு சர்வதேச திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்டது. இன்றளவும் படத்தில் தோன்று குள்ள கமலின் தோற்றம் ரகசியமான புதிராகவே இருந்து வருகிறது. கமலின் சினிமா கேரியரில் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது அபூர்வ சகோதரர்கள்

1990 முதல் 2000 வரை

விசு இயக்கி நடித்து 1990இல் வெளியான வரவு நல்ல உறவு, விக்ரமன் இயக்கிய புதுவசந்தம் (1990), ராஜ்கபூர் இயக்கத்தில் பிரபு நடித்த உத்தம ராசா (1993), ஜி.பி. விஜய் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த கலைஞன் (1993), சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த வீரா (1994), வி. சேகர் இயக்கிய வரவு எட்டணா செலவு பத்தணா (1994), கே.எஸ். ரவி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த ஹனாஸ்ட் ராஜ் (1994), பாரதிராஜா இயக்கத்தில் சிவாஜி கணேசன், சிவக்குமார், பிரபு நடித்த பசும்பொன் (1995) போன்ற படங்கள் வெளியாகியுள்ளன

கேப்டன் பிரபாகரன்

ஆர்.கே. செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த், ரூபிணி, மன்சூர் அலிகான் நடித்த ஆக்சன் த்ரில்லர் படமான கேப்டன் பிரபாகரன் 1991இல் வெளியானது. விஜயகாந்தின் 100வது படமான இது சூப்பர் டூப்பர் ஹிட்டானதுடன் தமிழ் சினிமாவின் கல்ட் அந்தஸ்தை பெற்ற படமாகவும் உள்ளது. தெறிக்கவிடும் வசனங்களோடு இருக்ககூடிய இந்த படம் விஜயகாந்தின் சிறந்த படங்களில் ஒன்றாக உள்ளது.

2000 முதல் தற்போது வரை

மகாராஜன் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த வல்லரசு (2000), மணிரத்னம் இயக்கத்தில் மாதவன் நடித்த அலைபாயுதே (2000), சுசி கணேசன் இயக்கத்தில் ஜீவன் நடித்த திருட்டுபயலே (2006), ஜான் மகேந்திரன் இயக்கத்தில் விஜய், ஜெனிலியா நடித்த சச்சின் (2005), பேரரசு இயக்கத்தில் அஜித் நடித்த திருப்பதி (2006) ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற ஹிட் படங்களாக உள்ளன

சந்திரமுகி

பி. வாசு இயக்கித்தில் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா நடித்து கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான ஆப்தமித்ரா படத்தின் ரீமேக்காக உருவாகி 2005இல் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் சந்திரமுகி. ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இந்த படம் பல திரையரங்குகளில் 200 நாள்களுக்கு மேல் ஓடியது. அத்துடன் கோடிகளிலும் வசூலை அள்ளியது. ரஜினியின் சினிமா கேரியரில் வெற்றிகரமான படங்களில் ஒன்றாக சந்திரமுகி இருந்து வருகிறது

தெறி

அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன், இயக்குநர் மகேந்திரன் உள்பட பலர் நடித்த ஆக்சன் த்ரில்லர் திரைப்படமான தெறி 2016இல் வெளியானது. படத்தின் டைட்டிலுக்கு ஏற்ப தெறிக்க விடும் சம்பவமாக இருந்த விஜயக்கு ரூ. 150 கோடிக்கு மேல் வசூலை பெற்ற தந்த படமாக உள்ளது.

தனுஷ் இயக்குநராக அறிமுகமான பவர் பாண்டி என்ற படமும் 2017இல் ஏப்ரல் 14ஆம் தேதி தான் வெளியானது. ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா, சாயா சிங் உள்பட பலர் நடித்த இந்த படம் ரசிகர்களை கவர்ந்த் ஃபீல் குட் படமாக இருந்ததுடன் நல்ல வசூலையும் பெற்று தந்தது.

Muthu Vinayagam Kosalairaman

TwittereMail
கோ. முத்து விநாயகம், இளங்கலை காட்சிவழி தொடர்பியல், முதுகலை மின்னணு ஊடகம் பிரிவில் பட்டம் பெற்றவர். 2007 முதல் ஊடகத்துறையில் இருந்து வருகிறார். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அணுபவம் மிக்கவர். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளிட்ஸ், ஈடிவி பாரத் என 16 ஆண்டுகளுக்கு மேல் அனுபவத்துடன் ஹிந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் அனைத்து பிரிவுகளிலும் கட்டுரை எழுதுபவர். விளையாட்டு, கிரிக்கெட், சினிமா, லைப்ஸ்டைல் பிரிவுகளில் தனித்துவமான பங்களிப்பை அளித்து வருகிறார். விளையாட்டு, சினிமா, பயணம், சமைத்தல் பிடித்தமான பொழுபோக்கு
Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.