தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ott Release: இறைவன் முதல் சந்திரமுகி 2 வரை.. இந்த வாரம் ஓடிடியில் வரிசைகட்டும் படங்கள்

OTT Release: இறைவன் முதல் சந்திரமுகி 2 வரை.. இந்த வாரம் ஓடிடியில் வரிசைகட்டும் படங்கள்

Aarthi V HT Tamil
Oct 26, 2023 10:20 AM IST

ஓடிடியில் இந்த வாரம் வெளியாக உள்ள படங்கள் என்னென்ன என பார்க்கலாம்.

இந்த வாரம் ஓடிடி
இந்த வாரம் ஓடிடி

ட்ரெண்டிங் செய்திகள்

இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்த ‘சந்திரமுகி 2’ படம் கடந்த மாதம் 28 ஆம் தேதி வெளியானது. சந்திரமுகி படத்தில் ரஜினி நடித்திருந்த நிலையில் சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து இருந்தார். அவருடன் கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா, லஷ்மி மேனன் என பலர் நடித்துள்ளனர். திகில் கிளப்பும் சந்திரமுகி 2 வரும் 27 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

இறைவன்

அஹமது இயக்கத்தில் சைக்கோ கில்லர் ஜானரில் உருவான படம், இறைவன். ஜெயம் ரவி, நித்யா மேனன் நடித்துள்ள இப்படம் கடந்த 28 ஆம் தேதி திரைக்கு வந்தது. இறைவன் படம் வரும் 27ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

பரம்பொருள்

அரவிந்த் ராஜ் இயக்கத்தில் சரத்குமார் நடித்து இருக்கும் படம், பரம்பொருள். அமிதாஷ் பிரதான் நடித்த பரம்பொருள் திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் ரிலீஸானது. க்ரைம் தில்லர் பாணியில் எடுக்கப்பட்ட பரம்பொருள் திரைப்படம், வரும் 27 ஆம் தேதி ஆஹா மற்றும் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸாக உள்ளது.

கூழாங்கல்

2021 ஆம் ஆண்டு ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ' கூழாங்கல் ' திரைப்படம் இரண்டு வருட காத்திருப்புக்குப் பிறகு இறுதியாக ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளத்திற்கு வருகிறது.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கிய இப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் பாராட்டுகளைப் பெற்றாலும், அதன் திரையரங்கு வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டது.

இப்போது அக்டோபர் 27 தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்