தியேட்டர்களுக்கு டஃப் கொடுக்கும் ஓடிடி திரைப்படங்கள்! இன்று வெளியான படங்களின் லிஸ்ட் இதோ!
திரையங்குகளை முந்தும் வகையில் இன்று ஓடிடி தளங்களில் பல படங்கள் வெளியாகி உள்ளன.இன்று ஓடிடியில் வந்து உங்களை மகிழ்விக்க காத்திருக்கும் படங்களின் பட்டியலை இங்கு காண்போம்.

மனிதர்களுக்கு பொழுதுபோக்கு என்றாலே ஆடுவதும், பாடுவதும் என்ற இருந்த காலங்கள் மாறி படிப்படியாயக பரிணாம வளர்ச்சி அடைந்து தற்போது நாம் பார்த்து வரும் திரைப்படங்களில் வந்து நிற்கிறது. திரைப்படங்களின் ஆதாரமாக விளங்கும் தியேட்டர்களில் பல படங்கள் வெளியாகி மக்களின் மனதை கவர்வது வழக்கமான ஒன்றாகும். இந்தியாவில் வெள்ளிக் கிழமை என்றால் எதேனும் ஒரு புது படம் வெளியாக்குவது வழக்கமான நடைமுறையாகும். இன்றும் திரையரங்குகளில் சில படங்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் திரையங்குகளை முந்தும் வகையில் இன்று ஓடிடி தளங்களில் பல படங்கள் வெளியாகி உள்ளன. மேலும் கரோனா காலக்கட்டத்திற்கு பின்னர் இந்த ஓடிடி தளங்களின் வளர்ச்சி மிகப் பெரியதாக இருந்தது.
குறிப்பாக தற்போது விற்கும் படங்களின் டிக்கெட்டுகள் அதிக விலையில் இருப்பதால், படம் ஓடிடி யில் வந்ததும் பார்த்துக் கொள்ளலாம் எனவும் பலர் காத்திருந்து பார்க்கின்றனர். ஏனெனில் படத்தின் டிக்கெட் விலை அதிகமானதே இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இன்று ஓடிடியில் வந்து உங்களை மகிழ்விக்க காத்திருக்கும் படங்களின் பட்டியலை இங்கு காண்போம்.
நிறங்கள் மூன்று
நடிகர் அதர்வா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் கடந்த நவம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் நிறங்கள் மூன்று. வெளியாகி ஒரு மாதம் கூட நிறைவேறாத நிலையில் இப்படம் இன்று ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் சிறப்பாக செல்லவில்லை. கலவையான விமர்சனங்களையே பெற்று இருந்தது.