மறைந்த நடிகர் மனோஜ் பாரதிராஜாவின் சூப்பர் ஹிட் பாடல்களை கேட்டு இருக்கீங்களா? இதோ முழு லிஸ்ட் உள்ளே!
நடிகரும், இயக்குனரும் ஆன மனோஜ் பாரதிராஜா அவரது 48 ஆவது வயதில் நேற்று (25/03/2024) மாரடைப்பால் காலமானார். தமிழ் சினிமாவில் இவர் நடித்துள்ள படங்கள் சில இன்றளவும் பேசப்படுகிறது. அந்த வரிசையில் இவர் நடிப்பில் உருவான பல பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. அந்த பாடல்களின் பட்டியலை இங்கு காண்போம்.

நடிகரும் இயக்குனரும் ஆன மனோஜ் பாரதிராஜா நேற்று மாரடைப்பால் காலமானார். இது திரையுலகினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு முதலே மனோஜிற்கு பல பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த ஈடு செய்ய முடியாத இழப்பால் இயக்குனர் பாரதிராஜா மீளா துயரத்தில் ஆழ்ந்துள்ளார். மேலும் மகனின் இழப்பால் வாடும் அவருக்கு பல திரையுலக பிரபலங்களும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். மனோஜிற்கு 48 வயதே ஆன நிலையில் இந்த எதிபாரா இழப்பு அவரது மனைவி மற்றும் மகள்களுக்கு பெரும் அதிர்ச்சியாக வந்துள்ளது. தமிழ் திரையுலகில் நன்கு அறியப்படும் நடிகர்களில் ஒருவராக வலம் வந்த மனோஜ் நடிப்பில் உருவான பாடல்களில் இன்று வரை சூப்பர் ஹிட்டாக ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல்களின் பட்டியலை இங்கு காண்போம்.
பாடல்களால் நினைவுக்கூறப்படும் மனோஜ்
நடிகர் மனோஜ் நடித்த படங்களில் இடம்பெற்ற பல பாடல்கள் ரசிகர்களின் மனதில் இன்று வரை ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதில் அவரது முதல் படமான தாஜ்மஹால் படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் இன்று வரை பலரது பேவரைட் பாடல்களாக இருந்து வருகிறது. அதில், “ஈச்சி எலுமிச்சி”, “சொட்ட சொட்ட நனையது”, “திருபாச்சி அருவாள” ஆகிய மூன்று பாடல்களும் எவர்கிரீன் பாடல்களாக இருந்து வருகிறது. தென் மாவட்டங்களில் ஏதேனும் கொண்டாட்ட நிகழ்வுகளில் நிச்சயம் இந்த பாடல்கள் இருக்கும். இவரது இரண்டாவது படமான சமுத்திரம் திரைபடத்தில் வரும் “விடிய விடிய பேசிக் கொண்டே இருக்கலாம்” என்ற பாடல் ஒரு சூப்பர் டூயட் ரகமாக இருக்கும். ஒரு 90 ஸ் கிட்ஸ் ஆக இருந்தால் இந்தப் பாடல் நிச்சயம் கேட்டிருப்பார்கள்.
அடுத்ததாக அல்லி அர்ஜுனா படத்தில் இடம் பெற்றிருக்கும் “சொல்லாயோ சோலைக்கிளி”பாடல் எஸ்.பி.பி மற்றும் சுவர்ணலதா குரலில் இனிமையான ஒரு காதல் பாடலாக அமைந்தது. இப்படத்திற்கும் ஏ.ஆர்.ரகுமானே இசையமைத்துள்ளார். ஒரு தலைக் காதலர்களின் மனதில் இருக்கும் காதலி தேடலை விவரிக்கும் “எங்கே அந்த வெண்ணிலா” பாடல் ஓஹோ ரகம் தான். இப்பாடல் வருஷமெல்லாம் வசந்தம் படத்தில் இடம்பெற்றிருக்கும். இப்படத்திற்கு இசையமைப்பாளர் சிற்பி இசையமைத்துள்ளார். மனோஜின் இந்த பாடல்கள் என்றும் ரசிகர்களால் கேட்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.
இடைவிடாமல் போராடிய மனோஜ்
தமிழ் சினிமா ரசிகர்களைப் பொறுத்த வரை நடித்தது ஒரு படமாக இருந்தாலும் அதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தால் அந்த நடிகரை நீண்ட நாட்கள் நினைவில் வைத்திருப்பார்கள். அந்த வரிசையில் சினிமாவில் சில படங்களில் நடித்து இருந்த போதும் இன்றும் அவரது நடிப்பிற்காக பரவலாக அறியப்படுபவராக நடிகர் மனோஜ் பாரதிராஜா இருந்து வந்தார். தமிழ் சினிமாவின் இயக்குனர் இமயம் என அழைக்கப்படும் பாரதிராஜாவின் மகனாக இருந்ததே மனோஜிற்கு ஒரு தடையாக இருந்தது எனக் கூறலாம். இயக்குனர் பாரதிராஜாவின் இயக்கத்தில் முதல் உருவான மனோஜின் முதல் படமான தாஜ்மஹால் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்க வில்லை.
தொடர்ந்து மனோஜ் நடித்த படங்களும் அவருக்கு கைகொடுக்க வில்லை. ஆனால் மனோஜ் நடிப்பை விட்டு தனது தந்தை பாரதிராஜாவை வைத்து மார்கழி திங்கள் என்ற படத்தையும் இயக்கியுள்ளார். மேலும் எந்திரன் படத்தில் ரஜினிக்கு டூப், பல படங்களில் முக்கியமான ரோல் என நடித்து இருந்தாலும் பாரதிராஜா போல தமிழ் திரையுலகில் ஜொலிக்க வில்லை.

டாபிக்ஸ்