தமிழ் செய்திகள்  /  Entertainment  /  List Of Films Releasing On Ott This Week

OTT Releases :நச்சுன்னு நாலு படம்.. இந்த வார ஓடிடி ரிலீஸ் திரைப்படங்கள் இதோ!

Divya Sekar HT Tamil
Mar 06, 2024 09:14 AM IST

இந்த வாரம் ஓடிடியில் வெளியாக உள்ள திரைப்படங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம். தியேட்டரில் இந்த படத்தை தவறவிட்ட சினிமா பிரியர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

லால் சலாம் மற்றும் லவ்வர்
லால் சலாம் மற்றும் லவ்வர்

ட்ரெண்டிங் செய்திகள்

ஹிந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையிலான நட்பைச் சுற்றி வரும் இப்படம், மெத்தனமான கதையாக இருந்தாலும், படம் ஒரு நல்ல செய்தியைக் கொண்டு உள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் சில பகுதிகள், க்ளைமாக்ஸ் போன்றவற்றில் சிறப்பாக எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. லால் சலாம் திரைப்படம் மார்ச் 8 ஆம் தேதி நெட்ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

லவ்வர் (lover) - Hot star

குட் நைட் படத்தைத் தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்.ஆர்.பி என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்த புதிய படத்திலும் நடிகர் மணிகண்டன் கதாநாயகனாக நடித்துள்ளார். ''லவ்வர்'' எனப் பெயரிடப்பட்டிருக்கும், இப்படம் பிப்ரவரி 9ஆம் தேதி திரையரங்கில் வெளியானது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை சிம்பு தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்திருந்தார். இப்படத்தை அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் என்பவர் இயக்கியிருக்கிறார். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையையும், பாடல்களை மோகன்ராஜனும் கொடுத்திருக்கின்றனர். அதேபோல் ஒளிப்பதிவு பணியினை ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவும், படத்தொகுப்பினை விக்ரமனும் செய்துள்ளனர்.

இப்படமும் குட்நைட் படத்தைப்போன்று ஒரு இளைஞருக்கும் இளம்பெண்ணுக்கும் இடையிலான காதலை மையமாகக் கொண்ட படமாக இருக்கிறது. குறிப்பாக ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் பிரச்னைகள், சிக்கல்கள் ஆகியவற்றைப் பற்றிப்பேசும் ஒரு ரொமான்டிக் டிராமாவாக உள்ளது. இப்படம் மார்ச் 8-ஆம் தேதி டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

மெரி கிறிஸ்துமஸ் (merry christmas) - Netflix

விஜய் சேதுபதி, கத்ரி கைஃப் நடிப்பில் கடந்த டிசம்பர் 12 ம் தேதி மெரி கிறிஸ்துமஸ் படம் வெளியானது. த்ரில்லர் படங்களில் தனி முத்திரைப் பதித்த ஸ்ரீராம் ராகவன் படத்தை எழுதி, இயக்கியிருந்தார். ஒருநாள் இரவில் நடைபெறும் கதையாக இது தயாராகியிருந்தது.

கேத்தரினா கைஃப் மற்றும் விஜய் சேதுபதி பிரதான வேடங்களில் நடித்திருக்கும் 'மெரி கிறிஸ்துமஸ்' திரைப்படம் ஹிந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் வெளியானது. ரமேஷ், துரானி, சஞ்சய் ரவ்ட்ராய், ஜெயா துரானி, மற்றும் கேவல் கார்க் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கி இருக்கிறார். விநாயகர் பிரதிமா கண்ணன் மற்றும் டினு ஆனந்த் (நாயகன் புகழ்) ஆகியோர் இந்திப் பதிப்பில் நடித்து இருக்கிறார்கள். இதேபோல் தமிழ்ப் பதிப்பில் ராதிகா சரத்குமார், சண்முகராஜா, கவின் ஜெபாபு மற்றும் ராஜேஷ் வில்லியம்ஸ் ஆகியோர் நடித்து தங்கள் பங்களிப்பை செய்திருக்கிறார்கள்.

ராதிகா ஆப்தே மற்றும் அஸ்வின் கலாசேகர் ஆகியோர் இரண்டு பதிப்புகளிலும் தங்கள் முத்திரை பதிக்கும் வண்ணம் நடித்து இருக்கிறார்கள். இப்படம் மார்ச் 8-ஆம் தேதி நெட்ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

ஹனுமான் (Hanu-man) - zee 5

ஹனுமான் சஜ்ஜா, வரலட்சுமி சரத்குமார், அம்ரிதா ஐயர், வினய் ராய் நடிப்பில் கடந்த ஜனவரி 12-ம் தேதி தெலுங்கு, இந்தி, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இப்படம் வெளியானது. ஹனுமான் வெளியானவுடன் விமர்சகர்களால் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக புராணங்களின் கதையோடு கிளாசிக் நல்ல கதையம்சம் மற்றும் சூப்பர் ஹீரோ கதையைத் தொட்டமைக்காக இப்படம் பெரும் வரவேற்பினைப் பெற்றது. உலக பாக்ஸ் ஆபிஸில் மகேஷ் பாபுவின் குண்டூர் காரம், வெங்கடேஷின் சைந்தவ் மற்றும் நாகார்ஜுனாவின் ’நா சாமி ரங்கா’ ஆகியவற்றுடன் ரிலீஸ் ஆன போதிலும், ஹனுமான் பாக்ஸ் ஆபிஸில் பட்டையைக் கிளப்பியது. இப்படம் மார்ச் 8-ஆம் தேதி zee 5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

உன்வேஷிப்பின் கண்டேதும்

மலையாளத்தில் இந்த வருடத்தின் முதல் வெற்றிப் படம் உன்வேஷிப்பின் கண்டேதும் . டோவினோ தாமஸ் நடித்துள்ள இந்த கொலை மர்ம திரைப்படம் மார்ச் 8 முதல் நெட்ஃபிளிக்ஸ் இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாகவுள்ளது.

மகாராணி சீசன் 3

மகாராணி சீசன் 3 பீகாரில் 1990 களில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் கருப்பொருளைக் கொண்டுள்ளது. இந்த வெப் சீரிஸில் ஹுமா குரேஷி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சோஹும் ஷா, அமித் சீல், கனி குஸ்ருதி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த வெப் சீரிஸ் மார்ச் 7 ஆம் தேதி சோனி லிவில் ஒளிபரப்பாகும்.

யாத்ரா 2

யாத்ரா 2 திரைப்படம் பிப்ரவரி 8 அன்று திரையரங்குகளில் வெளியானது. சரியாக ஒரு மாதம் கழித்து ஓடிடிக்கு வருகிறது. முன்னாள் முதல்வர் ஒய்.எஸ் மறைவுக்குப் பிறகு, அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டி இந்தப் படத்தில் முதல்வர் நாற்காலியில் ஏறினார். இது 2019 யாத்திரையின் தொடர்ச்சியாகும்.cச்

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point