தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Fathers Day Songs: தந்தையர் தின ஸ்பெஷல் ஸ்டேட்டஸ் வைக்கணுமா?அப்பா பாசத்தை உருக வைக்கும் பாடல்கள் இதோ!

Fathers Day Songs: தந்தையர் தின ஸ்பெஷல் ஸ்டேட்டஸ் வைக்கணுமா?அப்பா பாசத்தை உருக வைக்கும் பாடல்கள் இதோ!

Aarthi Balaji HT Tamil
Jun 16, 2024 09:45 AM IST

Fathers Day Songs: தந்தையர் தினமான இன்று ( ஜூன் 16) தந்தை பாசத்தை வெளிக்காட்டும் விதமாக வந்த பாடல்கள் பற்றி பார்க்கலாம்.

Fathers Day Songs:  அப்பா பாசத்தை உருக வைக்கும் பாடல்கள் இதோ!
Fathers Day Songs: அப்பா பாசத்தை உருக வைக்கும் பாடல்கள் இதோ!

ட்ரெண்டிங் செய்திகள்

வா வா என் தேவதை

அபியும் நானும் படத்தில் வா வா என் தேவதை பாடல் பெரும் வெற்றி பெற்றது. மது பாலகிருஷ்ணன் பாடிய இப்பாடலுக்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.

ஆரிரோ

2011 ஆம் ஆண்டு வெளிவந்த தெய்வ திருமகள் திரைப்படத்தின் இந்தப் ஆரிரோ பாடல் பெரும் வெற்றி பெற்றது. இந்தப் பாடலுக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த பாடலை நா. முத்துக்குமார் எழுதினார்.

உனக்கென்ன வேணும் சொல்லு

என்னை அறிந்தால் படத்தில் உனக்கென்ன வேணும் சொல்லு என அப்பா தன் மகளை பார்த்து பாடும் பாடல் மாயாஜாலம் ஏற்படுத்தும். தாமரையின் பாடல் வரிகள் உணர்வுகளை கச்சிதமாக வெளிப்படுத்தும்.

ஆனந்த யாழை

தந்தைக்கு ஒரு மகளின் சிறப்பு என்ன என்பதை தங்க மீன்கள் படத்தில் வரும் ஆனந்த யாழை பாடல் சிறப்பாக சித்தரிக்கிறது. ஸ்ரீராம் பார்த்தசாரதியின் குரலிலும், நா. முத்துக்குமாரின் வரிகளிலும் இந்தப் பாடல் ஒவ்வொரு பெற்றோரின் கண்களிலும் கண்ணீரை வர வைக்கும்.

வாயாடி பெத்த புள்ள

அருண்ராஜா காமராஜா இயக்கிய கனா திரைப்படத்தின் மிகவும் அபிமான பாடல்களில், வாயாடி பெத்த புல்ல பாடல் ஒன்று. ஜிகேபியின் வரிகளுடன், ஆராதனா சிவகார்த்திகேயன் மற்றும் வைக்கம் விஜயலட்சுமி பாடிய இந்தப் பாடல் கேட்போரை மகிழ்விக்கும். சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா பாடிய முதல் பாடல் இதுவாகும்.

விஸ்வாசம்

இமான் இசையில் தாமரை வரிகளில் வெளியான பாடல், கண்ணான கண்ணே. சிறந்த மெலோடியாக தேர்வான இந்த பாடல் தமிழ் ரசிகர்களின் இல்லங்களில் ஒளிபரப்பானது. சித் ஸ்ரீராம் குரலில் வெளியான இந்த பாடல் பலரின் கண்களில் நீர் வர வைத்தது.

பாப்பா நான் இருக்கேன்பா

கவிஞர் வாலி எழுதிய பாடல், பாப்பா நான் இருக்கேன்பா. போடா போடி படத்தில் இடம் பெற்ற இந்த பாடலுக்கு தரண் இசையமைத்தார்.

குறும்பா

டிக் டிக் டிக் படத்தில் இடம்பெற்ற குறும்பா பாடல், தந்தை, மகனின் பாசத்தை வெளிப்படுத்தியது. சித் ஸ்ரீராம் பாடலை பாடினார். ஜெயம் ரவி மற்றும் அவரின் மகன் இந்த படத்தில் நடித்து இருந்தார்கள்.

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்

கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் பாடல் இடம் பெற்று இருக்கும். தந்தை இறந்த பிறகு அவரின் கஷ்டங்களை மகன் எப்படி உணர்கிறேன் என்பதை இந்த பாடலின் வரிகள் உணர்த்தும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9  

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.