Sasikumar: ஊர் என்றால் கோயிலை போல் பள்ளியும் இருக்க வேண்டும்.. கைவிட்டு விடாதீர்கள் - சசிகுமார் மாஸ் பேச்சு
Sasikumar Speech: ஊர் என்றால் கோயில் இருப்பதை போல் பள்ளியும் இருக்க வேண்டும். பள்ளியை கைவிட்டுவிடக்கூடாது என்று தேனியின் நடைபெற்ற அரசு பள்ளி நிகழ்ச்சியில் நடிகர் சசிகுமார் பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத்துடன் வலம் வருபவர் நடிகர் சசிகுமார். கிராமத்து கதைகளின் ஹீரோவாக கலக்கி வரும் இவர் தனக்கென ரசிகர் கூட்டத்தையும் கொண்டவராக உள்ளார்.
இதையடுத்து தேனி மாவட்டம் கருவேல்நாயக்கன்பட்டி பகுதியில் செயல்படும் அரசு கள்ளர் நடுநிலை பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். பள்ளிக்கு நன்கொடை வழங்கியவர்களை பாராட்டி விருது வழங்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் சசிக்குமார் ஆசிரியர் மற்றும் நன்கொடையாளர்களை பாராட்டி பேசினார்.
ஆங்கிலம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கு பாராட்டுகள்
நிகழ்ச்சியில் நடிகர் சசிகுமார் பேசியதாவது, "அரசு பள்ளியை மேம்படுத்த எடுத்த முயற்சிகள் பற்றி தெரிந்து கொண்டேன். இதற்காக தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கு நன்றிகள். அரசு பள்ளியை மேம்படுத்தி மாணவர்களுக்கு ஆங்கில மொழியை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கு பாராட்டுகள்.