Story Of Song : அரைகுறை மனதுடன் ஒத்து கொண்டு எஸ்பிபி பாடிய பாடல்.. செம ஹிட் ஆன கதை.. டி. ராஜேந்தர் பகிர்ந்த தகவல்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Story Of Song : அரைகுறை மனதுடன் ஒத்து கொண்டு எஸ்பிபி பாடிய பாடல்.. செம ஹிட் ஆன கதை.. டி. ராஜேந்தர் பகிர்ந்த தகவல்!

Story Of Song : அரைகுறை மனதுடன் ஒத்து கொண்டு எஸ்பிபி பாடிய பாடல்.. செம ஹிட் ஆன கதை.. டி. ராஜேந்தர் பகிர்ந்த தகவல்!

Divya Sekar HT Tamil
Feb 05, 2025 06:45 AM IST

Story Of Song : மைதிலி என்னை காதலி படத்தில் இடம்பெற்ற ’சலங்கை இட்டால் ஒரு மாது’ பாடலை எஸ் பி பாலசுப்பிரமணியம் பாட தயங்கியது குறித்தும் அதற்கான காரணம் குறித்தும் நிகழ்ச்சி ஒன்றில் டி.ராஜேந்தர் பேசியுள்ளார். அதுகுறித்து இதில் பார்க்கலாம்.

Story Of Song : அரைகுறை மனதுடன் ஒத்து கொண்டு எஸ்பிபி பாடிய பாடல்.. செம ஹிட் ஆன கதை.. டி. ராஜேந்தர் பகிர்ந்த தகவல்!
Story Of Song : அரைகுறை மனதுடன் ஒத்து கொண்டு எஸ்பிபி பாடிய பாடல்.. செம ஹிட் ஆன கதை.. டி. ராஜேந்தர் பகிர்ந்த தகவல்!

அதில் ”எஸ் பி பாலசுப்பிரமணியம் என்னிடம் ஒரு பொன்மானை நான் காண பாடலின் பல்லவியை கேட்டார். பாலு அண்ணன் என்னிடம் எப்போதும் பாடலின் லிரிக்ஸ் கேட்க மாட்டார். பல்லவியை தான் கேட்பார். அப்படி இந்த பாடலை கேட்கும்போது நான் இந்த பாடலை பாடி காட்டினேன்.

”ஒரு பொன்மானை நான் காண தகதிமிதோம்

ஒரு அம்மானை நான் பாட தகதிமிதோம்

சலங்கை இட்டால் ஒரு மாது சங்கீதம் நீ பாடு

சலங்கை இட்டால் ஒரு மாது சங்கீதம் நீ பாடு

அவள் விழிகளில் ஒரு பழரசம்

அதை காண்பதில் எந்தன் பரவசம்” என பாடினேன். அப்போது இப்பாடலில் வரும் தகதிமிதோம் தேவையா என அவர் கேட்கிறார் நான் அதற்கு இது கண்டிப்பாக தேவை என சொல்ல அவர் ஓகே நான் இதை நோட் செய்து கொள்கிறேன் என எஸ்பிபி சொன்னார்.

அப்போது நான் அண்ணா இது கண்டிப்பாக எனக்கு தேவை. இதை நீங்கள் தான் பாட வேண்டும். ஒரு காதலி கேட்டால் காதலன் செய்ய வேண்டும். அவள் என்ன கேட்டாலும் வாங்கி தர வேண்டும் என நான் சொன்னதும் அவர் சரி நான் பாடுகிறேன் என சொன்னார்.

பின்னர் அவர் என்னிடம் சரணம் சொல்லு தம்பி என கேட்டார். அப்போது நான் ”தடாகத்தில் மீன் ரெண்டு காமத்தில் தடுமாறி

தாமாரை பூமீது விழுந்தனவோ

இதைக்கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில்

படைத்திட்ட பாகம் தான் உன் கண்களோ

காற்றில் அசைந்து வரும் நந்தவனத்துகிறு

கால்கள் முளைத்ததென்று நடைபோட்டாள்

ஜாதி எனும் மழையினிலே ரதி

இவள் நனைந்திடேவே” என வரிகளை சொல்லி காட்டினேன். இதைக் கேட்ட அவர் இது தாளத்தில் உட்காருமா? என கேட்டார். நான் அதற்கு உட்காரும் அண்ணா என சொல்லி அந்த பாடலுக்கான தாளத்தை பாடி காட்டினேன்.

அந்த குரல் அழகனை புள்ளாங்குழலை இப்படி செதுக்கி செதுக்கி உள்ளத்தில் இருந்ததை எல்லாம் பதுக்கி பதுக்கி வேலை வாங்கி இருப்பேன். எனக்காக வந்து இந்த பாடலை தேன் போன்ற குரலால் குரல் அரசன் எஸ்பிபி பாடியிருப்பார் என அந்த நிகழ்ச்சியில் டி. ராஜேந்தர் பேசியிருப்பார்.

மைதிலி என்னை காதலி

1986 ஆம் ஆண்டு வெளியான படம் மைதிலி என்னை காதலி. இத்திரைப்படத்தை டி.ராஜேந்தர் இயக்கினார். உஷா ராஜேந்தர் தயாரித்தார். இத்திரைப்படத்தில் டி.ராஜேந்தர் , ஸ்ரீவித்யா , அமலா, செந்தாமரை ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 1985 இல் டி.ஆர். இயக்கிய படங்கள் எதுவும் வரவில்லை. பூக்களை பறிக்காதீர்கள் உள்பட மூன்று படங்கள் அவரது இசையில் வெளிவந்தன.

1986 இல் மைதிலி என்னை காதலி வெளியானது. அமலா நாயகியாக தமிழில் அறிமுகமான படம். அட பொன்னான மனசே, எங்கும் மைதிலி, என் ஆசை மைதிலியே, கண்ணீரில் மூழ்கும் ஓடம், ஒரு பொன் மானை நான் தேடி, ராக்கால வேளையில, நானும் உந்தன் உறவை உள்பட அனைத்துப் பாடல்களும் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது. படமும் மெகா ஹிட். சென்னையில் வெளியான ஐந்து திரையரங்குகளில் நான்கில் 100 நாள்கள் ஓடியது இப்படம்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.