Story Of Song : எவர்கிரீன் ஹிட் பாடல்.. ஐந்து நிமிடத்தில் கம்போசிங் செய்த இளையராஜா.. முத்து மணி மாலை பாடல் பிறந்த கதை!
Muthu Mani Maala Song : ஆர்.வி. உதயகுமார் இயக்கத்தில் விஜயகாந்த் நாயகனாக நடித்த திரைப்படம் சின்ன கவுண்டர். இப்படத்தில் இடம்பெற்ற முத்து மணி மாலை என்ற பாடல் பிறந்த கதை குறித்து பார்க்கலாம்.

Muthu Mani Maala Song : ஒரு எவர்கிரீன் ஹிட் பாடல் ஐந்து நிமிடத்தில் கம்போசிங் செய்துள்ளனர். அந்த பாடல் தான் விஜயகாந்த் நடித்த சின்ன கவுண்டர் படத்தில் இடம் பெற்ற முத்துமணி மாலை என்ற பாடல். இந்தப் பாடல் பிறந்த கதை குறித்து இப்போது பார்க்கலாம்.
ஆர்.வி. உதயகுமார் இயக்கத்தில் விஜயகாந்த் நாயகனாக நடித்த திரைப்படம் சின்ன கவுண்டர். இப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த படம். சின்ன கவுண்டர் படத்திற்கான கதையை ஆர்.வி. உதயகுமார் இளையராஜாவிடம் சொல்லிவிட்டு அடுத்த நாள் அவரை சந்திக்கிறார். இளையராஜா ஒரு பாடலை கம்போஸ் செய்து வைத்திருக்கிறார். ஆனால் அந்தப் பாடல் ஆர்.வி. உதயகுமாருக்கு பிடிக்கவில்லை. இந்தப் பாடல் தன் படத்திற்கு செட் ஆகாது எனவே நீங்கள் வேறு ஒரு பாடலை கம்போஸ் செய்து கொடுங்கள் என ஆர்.வி. உதயகுமார் இளையராஜாவிடம் கேட்கிறார்.
ஐந்தே நிமிடத்தில் கம்போசிங்
கோபம் அடைந்த இளையராஜா இந்த பாட்டுக்கு என்னய்யா குறைச்சல் என கேட்கிறார். என் படத்துக்கு இந்த பாடல் சரி வராது முத்து மணி, பாசிமணி எனவருவது போல எனக்கு ஒரு கிராமத்து சாயலில் ஒரு பாடல் வேண்டும் என கேட்கிறார் ஆர்.வி. உதயகுமார்.
உடனே இளையராஜா ஆர்மோனிய பெட்டியை சட்டென இழுத்து முத்துமணி மாலை என பாடி டியூன் போட அவர் டியூன் வாசிக்க வாசிக்க ஆர்.வி. உதயகுமார் வரிகள் எழுத உருவான பாடல் தான் முத்துமணி மாலை என்ற பாடல்.
ஐந்தே நிமிடத்தில் கம்போசிங் செய்து 15 நிமிடத்தில் பாடல்களை எழுதி உருவான பாடல் தான் இந்த ”முத்து மணி மாலை.. உன்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட.. வெட்கத்துல சேலை.. கொஞ்சம் விட்டு விட்டுப் போராட..”இப்படி தான் இப்பாடல் உருவானது.
பாடல் அனைத்தும் எவர் கிரீன்
1992 ஆம் ஆண்டு பொங்கல் திருநாளன்று வெளிவந்த படம் சின்ன கவுண்டர். ஆர். வி. உதயகுமார் படத்தின் இயக்குனர். விஜயகாந்த் சின்ன கவுண்டர் தவசி ஆகவும் மனோரமா அவரின் அம்மாவாகவும், சுகன்யா தெய்வானை ஆகவும் சலீம் கௌஸ் சர்க்கரை கவுண்டராகவும் சத்யபிரியா சுந்தரியாகவும், இவர்களோடு கவுண்டமணி, வடிவேலு, செந்தில், கமலா காமேஷ் ஆகியோர் நடித்த படம்.
இளையராஜா இசையில் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம் தான். படம் ஆரம்பிக்கும் போதே கண்ணுபடப்போகுதய்யா சின்ன கவுண்டரே பாடல் நம்மை வசப்படுத்தி விடும். எஸ்.பி.பி. சுசிலா குரலில் "முத்துமணி மாலை" அத்தனை இதம். "அந்த வானத்தை போல" விஜயகாந்தின் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் அத்தனை பொருத்தம். "உன் வாலை கொஞ்சம் சுருட்டி கொள்ளடி' பாடலில் குறும்பு. "கூண்டுக்குள்ள உன்னை வச்சி " பாடலில் உருக்குவதாகட்டும்.. அது இளையராஜா இசையில் மட்டுமே சாத்தியம் ஆகும். படம் எப்படி எவர் கிரீன் மூவியாக பார்க்கப்படுகிறதோ அதுபோல் தான் பாடல் அனைத்தும் எவர் கிரீன் என்று சொல்லும் அளவிற்கு அமைந்தது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்