JioHotstar: புதிதாய் உதயமான ஜியோஹாட்ஸ்டார்.. பெருசா.. புதுசா.. என்னென்ன பாக்கலாம்.. இதோ லிஸ்ட்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Jiohotstar: புதிதாய் உதயமான ஜியோஹாட்ஸ்டார்.. பெருசா.. புதுசா.. என்னென்ன பாக்கலாம்.. இதோ லிஸ்ட்..

JioHotstar: புதிதாய் உதயமான ஜியோஹாட்ஸ்டார்.. பெருசா.. புதுசா.. என்னென்ன பாக்கலாம்.. இதோ லிஸ்ட்..

Malavica Natarajan HT Tamil
Published Feb 18, 2025 09:38 PM IST

JioHotstar: புதிய ஓடிடி தளமான ஜியோ ஹாட்ஸ்டார், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ சினிமா ஆகிய இரண்டு தளங்களின் இணைப்பாக உருவாகியுள்ளது. இதில் கூடுதலாக என்னென்ன திரைப்படங்கள், தொடர்கள் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள் உள்ளன என்பதைப் பார்ப்போம்.

JioHotstar: புதிதாய் உதயமான ஜியோஹாட்ஸ்டார்.. பெருசா.. புதுசா.. என்னென்ன பாக்கலாம்.. இதோ லிஸ்ட்..
JioHotstar: புதிதாய் உதயமான ஜியோஹாட்ஸ்டார்.. பெருசா.. புதுசா.. என்னென்ன பாக்கலாம்.. இதோ லிஸ்ட்..

அப்டேட் செய்வது எப்படி?

பிப்ரவரி 14 அன்று அறிமுகமான ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி சேவைகள் இப்போது கிடைக்கின்றன. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ சினிமா ஆகியவற்றின் உள்ளடக்கங்கள் ஒரே தளமான ஜியோ ஹாட்ஸ்டாரில் கிடைக்கின்றன. இதனால் இப்போது ஒரே ஓடிடியில் இரட்டை பொழுதுபோக்குக்கு கேரண்டி கிடைத்துள்ளது. இதற்கு, ஆண்ட்ராய்டு பயனர்கள் பிளே ஸ்டோரிலும் அல்லது ஆப்பிள் பயனர்கள் ஆப்பிள் ஸ்டோர் சென்று ஹாட்ஸ்டார் ஆப்பை அப்டேட் செய்ய வேண்டும்.

சர்வதேச ஸ்டூடியோ நிகழ்ச்சிகள்

இந்த ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள், தொடர்கள் மற்றும் பல்வேறு வகையான உள்ளடக்கங்கள் உள்ளன. ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் சொந்த உள்ளடக்கங்களுடன், பல சர்வதேச ஸ்டூடியோக்களின் ஷோக்களும் இதில் கிடைக்கின்றன.

கூடுதல் நிகழ்ச்சிகள்

ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்கள், டிஸ்னி, மார்வெல், பிக்சர், ஸ்டார் வார்ஸ் உள்ளடக்கங்களுடன், கூடுதலாக HBO, NBC யுனிவர்சல் பீகாக்க், பாராமவுண்ட் பிளஸ், வார்னர் பிரதர்ஸ், டிஸ்கவரி, நேஷனல் ஜியோகிராஃபிக் போன்ற சர்வதேச நிகழ்ச்சிகளையும் பார்க்கலாம்.

ஜியோஹாட்ஸ்டாரில் என்னென்ன புதுசாக பார்க்கலாம்?
ஜியோஹாட்ஸ்டாரில் என்னென்ன புதுசாக பார்க்கலாம்?

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு நிகழ்வுகள்

IPL, WPL, உள்ளூர் போட்டிகள் உட்பட பல முக்கிய ICC நிகழ்வுகள், இங்கிலீஷ் பிரீமியர் லீக், விம்பிள்டன், புரோ கபடி லீக், ISL, ஹோ ஹோ உலகக் கோப்பை 2025 போன்றவையும் ஹாட்ஸ்டார் ஆப்பில் கிடைக்கின்றன. ஸ்டார் மா தொடர்கள் மற்றும் கலர்ஸ் சேனலின் தொடர்களையும் இனி ஜியோஸ்டார் ஓடிடியில் பார்க்கலாம்.

மாஸ் ஆன வீடியோக்கள

முன்னர் ஹாட்ஸ்டாரில் இருந்து நீக்கப்பட்டு ஜியோ சினிமாவுக்கு மாற்றப்பட்ட கேம் ஆஃப் த்ரோன்ஸ், ஹவுஸ் ஆஃப் தி டிராகன்ஸ், தி லாஸ்ட் ஆஃப் அஸ் போன்ற சூப்பர் ஹிட் தொடர்களையும் இங்கு பார்க்கலாம். 50 கோடிக்கும் அதிகமான பயனர் அடிப்படை மற்றும் 3 லட்சம் மணிநேரத்திற்கும் அதிகமான வீடியோக்களுடன், இந்த புதிய ஓடிடி தளமான ஜியோ ஹாட்ஸ்டார் இந்திய டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் சந்தையில் மிகப்பெரியதாக களமிறங்கி உள்ளது.

ஜியோஹாட்ஸ்டார் விளம்பரங்கள்

ஜியோ ஹாட்ஸ்டார் மாற்றத்தை மக்களுக்கு தெரிவிக்கும் பொருட்டு 'இன்ஃபினிட்டி பாசிபிலிட்டிஸ்' என்ற வீடியோவை வெளியிட்டுள்ளது. ஜியோஸ்டார் ஓடிடியின் இந்த வீடியோவில் சல்மான் கான், நாகார்ஜுனா, மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், ரன்பீர் கபூர், ஜான்வி கபூர், ஹிருத்திக் ரோஷன், ராணா டகுபதி, அனில் கபூர், மாதுரி தீட்சித், உர்பி ஜாவேத், தமிழ் நடிகர் கார்த்தி, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் பிக் பாஸ் போட்டியாளர்கள், விஜய் டிவி சீரியல் நடிகர்கள், இயக்குனர் கரண் ஜோஹார் ஆகியோர் ஜியோ ஹாட்ஸ்டாரைப் ப்ரோமோட் செய்துள்ளனர்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Malavica Natarajan

TwittereMail
மாளவிகா நடராஜன், 2017ம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். காட்சி (விஷூவல்), டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். பெரியார் பல்கலைகழகத்தில் பட்டம் பெற்ற இவர், சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். தமிழ் இந்துஸ்தான் டைம்ஸ் தளத்தில் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சினிமா, புகைப்படத்தொகுப்பு சார்ந்த செய்திகளில் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார்.
Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.