Story Of Song : எம்ஜிஆர் வாலிக்கு கொடுத்த பாயாசம்.. படகோட்டி படத்தில் கொடுத்ததெல்லாம் கொடுத்தான் பாடல் பிறந்த கதை!
Story Of Song : படகோட்டி படத்தில் இடம்பெற்ற ”கொடுத்ததெல்லாம் கொடுத்தான், அவன் யாருக்காகக் கொடுத்தான்?” பாடல் உருவான கதை குறித்து பார்க்கலாம்.

மீனவர்கள் கூட்டத்தில் இருக்கக்கூடிய வாழ்வியலை திரைப்படமாக அனைத்து மக்களுக்கும் காட்டிய திரைப்படம் தான் படகோட்டி. இப்படத்தில் இடம்பெற்ற ”கொடுத்ததெல்லாம் கொடுத்தான், அவன் யாருக்காகக் கொடுத்தான்?” பாடல் உருவான கதை குறித்து பார்க்கலாம்.
எம்ஜிஆரின் படகோட்டி திரைப்படத்தின் படப்பிடிப்பு சத்யா ஸ்டுடியோவில் நடைபெற்றது. இப்படத்திற்கு பாடல் எழுதுவதற்காக கவிஞர் வாலி அங்கு வந்திருந்தார். ஆனால் கவிஞர் வாலிக்கு பாடல் வரிகள் சரியாக வராமல் இருந்தது. அப்போது அங்கு வந்த எம் ஜி ஆர் என்ன கவிஞரே பாடல் ரெடியா என கேட்க இன்னும் சரியான வரிகள் கிடைக்கவில்லை என வாலி சொல்ல எல்லாம் சரியா வரும் நீங்கள் இந்த அவள் பாயாசத்தை குடியுங்கள் என வாலியிடம் எம்ஜிஆர் கொடுக்கிறார்.
பாடல் பிறந்த கதை
அப்போது அங்கு வேலை செய்யும் டெக்னீசியன் அங்கு வருகிறார்கள். அவர்களிடம் வாலி பாயாசம் சாப்பிட்டீர்களா என கேட்கிறார். அதற்கு ஒருவர் எம்ஜிஆர் உங்களுக்கு மட்டுமா பாயாசம் கொடுத்தார் எங்கள் அனைவருக்கும் தான் கொடுத்தார் என்ன சொன்னார். இதை கேட்ட வாலி இதை வைத்து ஒரு பாடலை எழுதி விட்டார். அந்த பாடல் தான் ”கொடுத்ததெல்லாம் கொடுத்தான், அவன் யாருக்காகக் கொடுத்தான்? ஒருத்தருக்கா கொடுத்தான் - இல்லை ஊருக்காகக் கொடுத்தான்” என்ற பாடல்.
இந்த பாடலைக் கேட்ட ஆரூர் தாஸ் கண்ணதாசன் எழுதிய இந்த பாடல் அருமையாக இருக்கிறது என எம்ஜிஆரிடம் சொல்ல எம்ஜிஆர் இது கண்ணதாசன் எழுதவில்லை வாலி எழுதியது என கூறுகிறார். எல்லாரும் அப்போது ரொம்ப ஆச்சரியப்பட்டார்கலாம்.
படகோட்டி திரைப்படத்தின் கதை
மீனவர்கள் கூட்டத்தில் இருக்கக்கூடிய வாழ்வியலை திரைப்படமாக அனைத்து மக்களுக்கும் காட்டிய திரைப்படம் தான் படகோட்டி. ஒரு மீனவனாக நடித்து எம்ஜிஆர் அவர்களின் வாழ்வியலை அனைவரிடத்திலும் எளிமையாக கொண்டு சேர்த்து இருப்பார். மீனவ மக்களிடையே பல பிரிவுகள் இருக்கும் அதுபோல இந்த திரைப்படத்தில் இரண்டு பிரிவுகளாக பிரிந்து வாழக்கூடிய மக்களுக்கு இடையே நடக்கக்கூடிய சிக்கல்கள் தான் திரைப்படத்தின் அடித்தளமாகும். இந்த இரு கூட்டத்தையும் சேர விடாமல் தனது சுயலாபத்திற்காக பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஜமீன்தார் வேடத்தில் நம்பியார் நடித்திருப்பார்.
இந்த திரைப்படத்தில் மொத்தம் ஒன்பது பாடல்கள். மொத்த பாடல்களுமே பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. தரை மேல் பிறக்க வைத்தான் எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான் என்ற பாடல் மீனவர்களின் வாழ்வியலை அப்படியே எடுத்துரைத்திருக்கும். திரைப்படத்தின் கடைசியில் தங்களை ஆளக்கூடிய ஜமீன்தாரை அழித்து இரண்டு கூட்டத்தையும் ஒன்று சேர்த்து எம்ஜிஆர் வெற்றி கொள்வார். படம் அதிரபுதிரியான ஹிட்.
கொடுத்ததெல்லாம் கொடுத்தான் என்று பாடல் கடின உழைப்பை கொடுத்து கடைசி வரை வறுமையில் வாழக்கூடிய மக்களின் மனக்குமுறலை எடுத்துரைக்கும் பாடலாக வாலி எழுதியிருப்பார். இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற தொட்டால் பூ மலரும் என்ற பாடல் மிகப்பெரிய காதல் பாடலாக கொண்டாடப்பட்டது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்