"என் நெஞ்சில் குடியிருக்குமா?.. நேற்று கட்சி தொடங்கி நாளைக்கு சி.எம்.சீட்டா? விஜய் எப்ப வேணாலும் ஓடிருவார்..." - லியோனி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  "என் நெஞ்சில் குடியிருக்குமா?.. நேற்று கட்சி தொடங்கி நாளைக்கு சி.எம்.சீட்டா? விஜய் எப்ப வேணாலும் ஓடிருவார்..." - லியோனி

"என் நெஞ்சில் குடியிருக்குமா?.. நேற்று கட்சி தொடங்கி நாளைக்கு சி.எம்.சீட்டா? விஜய் எப்ப வேணாலும் ஓடிருவார்..." - லியோனி

Kalyani Pandiyan S HT Tamil
Dec 09, 2024 05:13 PM IST

நேற்று கட்சி தொடங்கி நாளைக்கு சி.எம்.சீட்டா? விஜய் எப்ப வேணாலும் ஓடிருவார்..." - லியோனி பரபரப்பு பேச்சு

"என் நெஞ்சில் குடியிருக்குமா?.. நேற்று கட்சி தொடங்கி நாளைக்கு சி.எம்.சீட்டா? விஜய் எப்ப வேணாலும் ஓடிருவார்..." - லியோனி
"என் நெஞ்சில் குடியிருக்குமா?.. நேற்று கட்சி தொடங்கி நாளைக்கு சி.எம்.சீட்டா? விஜய் எப்ப வேணாலும் ஓடிருவார்..." - லியோனி

இந்த கூட்டத்தில் பாடநூல் நிறுவன தலைவரும், திமுக கொள்கை பரப்புச் செயலாளருமான திண்டுக்கல் ஐ. லியோனி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் விஜயை கடுமையாக தாக்கி பேசி இருக்கிறார்.

விஜயை தாக்கிய லியோனி

இது குறித்து அவர் பேசும் போது, "நேற்று கட்சி ஆரம்பித்தவரெல்லாம்

இன்னும் இரண்டு வருடத்தில் முதலமைச்சர் ஆகப்போகிறேன் என்று கூறி வருகிறார். "நெஞ்சில் குடியிருக்கும்" என்று அவர் பேசுகிறார். என் நெஞ்சில் குடியிருக்கும் என்று கூறுபவர் எப்போது வேண்டுமென்றாலும் காலி செய்து ஓடி விடுவார். என்னுடைய தலைவர் கருணாநிதி தான் "என் உடன்பிறப்புகளே" என்று பேசி பேச்சை தொடங்குவார். உடன்பிறப்புகளே என்ற வார்த்தை ஆணுக்கும் பொருந்தும் பெண்ணுக்கும் பொருந்தும்.

விஜய் ஓடி விடுவார்

குடியிருப்பவர் வாடகைக்கு, ஒத்திக்கு அல்லது ஓசியில் கூட குடியிருப்பார். சில நேரங்களில் எங்கு குடியிருக்கிறேன் என்று தெரியாமல் கூட குடியிருப்பார். அவர் என்றைக்கு வேண்டுமென்றாலும் குடிலை காலி செய்து ஓடிவிடுவார். பணம் கொடுத்தால், மீண்டும் வருவார். பணம் இல்லையென்றால் மீண்டும் ஓடி விடுவார்.

அவர் அவ்வகையில் பேச்சை தொடங்கியதே மிகவும் தவறான விஷயமாகும். இரண்டு வருடத்தில் முதல்வர் ஆகி விடுவேன் என்று அவர் கூறுகிறார். சினிமாவிற்கு வேண்டுமென்றால் சாத்தியமாகலாம்; ஆனால் நிஜத்தில் சாத்தியமாகாது.

அரசியல் இயக்கம்

அரசியல் இயக்கம் தொடங்கப்பட்டால் அது எவ்வளவு பெரிய பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்பது தெரியுமா? சூழ்நிலை இப்படி இருக்கும் நிலையில், இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தை கைநீட்டி பேசுகிறார். அவருக்கு நான் இந்த இடத்தில் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். ரோம் கட்டிடம் ஒரே நாளில் கட்டப்பட்டது அல்ல

;பல ஆண்டுகளாக கட்டப்பட்டது. அப்படி, பல ஆண்டுகளாக பல வரலாற்று திருப்புமுனைகளை பார்த்து கட்டப்பட்ட இரும்பு கோட்டை தான் திராவிட முன்னேற்ற கழகம். அப்படிப்பட்ட இரும்பு கோட்டை பற்றி பேசுகிறவர்களை பற்றி, இந்த மேடையில் பேசுவதற்கு எனக்கு கேவலமாக இருக்கிறது. எல்லோரும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் உதயநிதியை தாக்கி பேசுகிறார்கள். எங்கு சக்தி அதிகமாக இருக்கிறதோ அங்குதான் அவர்கள் அம்புகளை விடுவார்கள். அப்படித்தான் எடப்பாடி பழனிச்சாமி,.பாஜக புதிதாக கட்சி தொடங்கி இருப்பவர் என எல்லோரும் பேசுகிறார்கள்." என்று பேசினார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.