Love Story: டைட்டானிக் ஹீரோவுடன் பார்ட்டியில் பங்கெடுத்த 25 வயது புதிய காதலி
ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோவும் அவரது 25 வயது காதலி விட்டோரியா செரெட்டியும் ஒரு ஹாலோவீன் விருந்தில் கலந்து கொண்டனர்.

உலகப்புகழ்பெற்ற டைட்டானிக் பட ஹீரோ லியோனார்டோ டிகாப்ரியோ மற்றும் அவரது காதலி விட்டோரியா செரெட்டி ஆகியோர் ஹாலோவீன் விருந்து விழாவில் பங்கெடுத்தனர்.
25 வயதான மாடல், விட்டோரியா செரெட்டி கடந்த 28ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த ஹாலோவீன் திருவிழாவில், காதலன் லியோனார்டோ டிகாப்ரியோவுடன் இருந்த நெருக்கமான படத்தைப் பகிர்ந்தார். இவர்கள் இருவரின் புகைப்படங்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஒன்றாக லியோனார்டோ மற்றும் விட்டோரியா
சனிக்கிழமை இரவு லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த ஒரு பார்ட்டியில், லியோனார்டோ டிகாப்ரியோ, தனது காதலி விட்டோரியா செரெட்டியுடன் நெருக்கமாக இருந்தார். அப்போது, காதலி விட்டோரியா ஒரு மேல் ஆடை மற்றும் சிவப்பு விக் அணிந்து சிரித்துக் கொண்டிருந்தார். நடிகர் லியோனார்டோ, வெள்ளை டி-சர்ட் மற்றும் கருப்பு பேண்ட் அணிந்து இருந்தார்.
இருவரின் உறவு: நடிகர் லியோனார்டோ மற்றும் மாடல் விட்டோரியா சில காலமாக ஒருவருக்கொருவர் சேர்ந்து வாழ்கின்றனர். சில மாதங்களுக்கு முன்பு செப்டம்பரில், லியோவின் தாயார் இர்மெலினுடன் இத்தாலியின் மிலனில் உள்ள பினாகோடெகா அம்ப்ரோசியானா அருங்காட்சியகத்திற்கு வெளியே இந்த ஜோடிகள் ஒன்றாக சுற்றித்திரிந்தனர்.
காதல் வதந்திகளுக்கு இருவரும் பதிலளிக்கவில்லை என்றாலும், லியோனார்டோ விட்டோரியா செரெட்டியை லிப் லாக் செய்யும் படங்கள் வைரல் ஆகின.
கடந்த சில மாதங்களாக, லியோனார்டோ பல பெண்களுடன் காதலில் இருந்தார். லவ் தீவின் நட்சத்திரமான 32 வயதான அரபெல்லா சி மத்தியதரைக் கடலில் பயணம் செய்தபோது லியோனார்டோ உடன் இருந்தார். அவர்களுடன் லியோவின் நீண்டகால நண்பரான Tobey Maguire மற்றும் பலர் இருந்தனர்.
லியோனார்டோ கடைசியாக கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன் என்னும் படத்தில் நடித்து இருந்தார். இதில் ராபர்ட் டி நீரோ மற்றும் லில்லி கிளாட்ஸ்டோன் ஆகியோரும் நடித்துள்ளனர். இது அக்டோபர் 20அன்று திரையரங்குகளில் வெளியானது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்