தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Leo Kannada Poster Thalapathy Vijay Lokesh Kanagaraj Anirudh Ravichander Trisha

Leo: ‘தப்பிக்க திட்டமிடு’.. பொறி வைக்கும் லோகேஷ்.. லியோ கன்னட போஸ்டர் இங்கே!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 18, 2023 06:33 PM IST

லியோ திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி இருக்கிறது.

லியோ போஸ்டர்!
லியோ போஸ்டர்!

ட்ரெண்டிங் செய்திகள்

இதில், பல ஆண்டுகளுக்கு பிறகு விஜய்-க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்கிறார். கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட பலர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்து வரும் இத்திரைப்படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைத்துள்ளார். விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும், ‘நாரெடி தான் வரவா’ பாடலும் வெளியிடப்பட்டது.

இதனையடுத்து கடந்த செப்டம்பர் 15ம் தேதி லியோ படத்தில் இருந்து அப்டேட் வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தார்கள். ஆனால் எந்த அப்டேட்டும் வெளியாக வில்லை. இதனால் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். 

இதனையடுத்து சைமா விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற லோகேஷ் கனகராஜ் படத்தின் அப்டேட்கள் செப்டம்பர் 17ம் தேதியிலிருந்து வெளியாகும் என்று கூறி இருந்தார். அதன் படி நேற்றைய தினம லியோ திரைப்படத்தின் தெலுங்கு போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் இன்றைய தினம் லியோ திரைப்படத்தின் கன்னட போஸ்டர் வெளியாகி இருக்கிறது

முன்னதாக நேற்று வெளியான தெலுங்கு போஸ்டரில் ‘Keep calm and avoid the battle’ என்ற வாசகம் இடம் பெற்ற நிலையில் இன்று வெளியான கன்னட போஸ்டரில்  ‘KEEP CALM AND PLOT YOUR ESCAPE' என்ற வாசகம் இடம் பெற்று இருக்கிறது.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்