Leo FDFS: ‘விஜய் படம் என்றாலே பிரச்னைகள் வருகிறது!’ லோகேஷ் கனகராஜ் பரபரப்பு பேட்டி!
“அந்த வார்த்தையை பேசியது நடிகர் விஜய் அல்ல; அந்த கதாப்பாத்திரம்”
லியோ திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் அப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.
கேள்வி:- நடிகர் விஜயை கையாள்வதில் முதல் படத்திற்கும் இரண்டாவது படத்திற்கும் என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள்?
லியோ படத்திற்கு காரணமே மாஸ்டர்தான். இதற்கு முழுக்காரணமும் விஜய் கொடுத்த சுதந்திரம்தான். எனக்கும் விஜய் அண்ணாவுக்கும் புரிதல் அதிகமாகி உள்ளது.
கேள்வி:- விஜய் திரைப்படம் என்றாலே பிரச்னை வருகிறது
விஜய் படம் என்றாலே ஏதாவது பிரச்னை இருந்து வருகிறது. யாரோ ஒருத்தருக்கு ஒரு வருத்தம் இருந்து கொண்டிருக்கும். உதாரணமாக ட்ரைலரில் வந்த கெட்டவார்த்தை அவ்வுளவு பெரிய பிரச்னையாக மாறியது. விமர்சனங்கள் வந்த உடனே அதை எடுத்துவிட்டோம். அவர் படங்களுக்கு இது நடக்கிறது.
கெட்டவார்த்தைகளை மக்கள் மத்தியில் கொண்டு போய் காண்பித்து என்ன சந்தோஷத்தை அனுபவிக்கப்போகிறோம் என்பதல்ல, அந்த வார்த்தையை பேசியது நடிகர் விஜய் அல்ல; அந்த கதாப்பாத்திரம்.
கேள்வி:- திரைநட்சத்திரங்களோடு லோகேஷ் கனகராஜ் சிக்கிவிட்டாரா?
ஒரு யூனிவர்ஸையே உருவாக்கும் அளவுக்கு சுதந்திரம் இருக்கும்போது நான் சிக்க முடியாது. இந்த சுதந்திரம் எல்லாமே சுற்றி இருக்கும் ஸ்டார்ஸ் கொடுத்ததுதான். நான் பணியாற்றிய எல்லோ ஹீரோக்களும் முழு சுதந்திரமும் கொடுத்தார்கள்.
கேள்வி:- காலையில் உதயநிதி ஸ்டாலின் போட்ட ட்விட்டில் LCU என சொல்லப்பட்டு இருக்கிறதே?
LCU-வுக்கு பக்கத்தில் கண் அடித்த மாதிரி ஒரு எமோஜி போட்டு இருந்ததை பார்த்தீர்களா?, அது நாளை காலையில்தான் தெரியும்.
கேள்வி:- ஆடியோ லாஞ்ச் இல்லை ஏன்?
ஆடியோ லாஞ்ச் நடைபெறாததற்கு காரணத்தை நான் ஏற்கெனவே சொல்லிவிட்டேன். ப்ரீ பாஸ் என்றால் எப்படி அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவீர்கள். நாளை ஏதாவது பிரச்னை என்றால் அது படத்திற்கு எதிர்மறையாகிவிடும். அதனால்தான் ஆடியோ லாஞ்ச் இல்லாமல் போக காரணம். இன்றைக்கு தேதிக்கு இந்த படத்திற்கான விளம்பரம் போதும் என்று நினைக்கிறேன்.