Actress Latha: 'ஜெயலலிதாவுக்கு தனிப்பட்ட வாழ்க்கை இருந்தா என்ன? நான் சோபன் பாபுகிட்டயே கேட்டேன்'- நடிகை லதா கேள்வி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actress Latha: 'ஜெயலலிதாவுக்கு தனிப்பட்ட வாழ்க்கை இருந்தா என்ன? நான் சோபன் பாபுகிட்டயே கேட்டேன்'- நடிகை லதா கேள்வி

Actress Latha: 'ஜெயலலிதாவுக்கு தனிப்பட்ட வாழ்க்கை இருந்தா என்ன? நான் சோபன் பாபுகிட்டயே கேட்டேன்'- நடிகை லதா கேள்வி

Malavica Natarajan HT Tamil
Published Feb 08, 2025 07:00 AM IST

Actress Latha: நடிகை ஜெயலலிதாவிற்கும் சோபன் பாபுவிற்கும் குழந்தை இருப்பதாக சொல்வது பொய். அவர்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கை இருந்தால் என்ன தவறு என நடிகா லதா பேட்டி ஒன்றில் கேள்வி எழுப்பி உள்ளார்.

Actress Latha: 'ஜெயலலிதாவுக்கு தனிப்பட்ட வாழ்க்கை இருந்தா என்ன? நான் சோபன் பாபுகிட்டயே கேட்டேன்'- நடிகை லதா கேள்வி
Actress Latha: 'ஜெயலலிதாவுக்கு தனிப்பட்ட வாழ்க்கை இருந்தா என்ன? நான் சோபன் பாபுகிட்டயே கேட்டேன்'- நடிகை லதா கேள்வி

நடிகை லதாவின் பயணம்

1973ம் ஆண்டு வெளியான எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் அறிமுகமான இவர், முதல் படத்திலேயே பல நாடுகள் சுற்றி வந்து, மெகாஹிட் கொடுத்து அசத்தினார்.

பின் இவரது நடிப்பு பாராட்டப்பட்டு பிலிம்பேர், கலைமாமணு உள்ளிட்ட விருதுகளும் அவருக்கு வழங்கப்பட்டது. சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் சமயத்திலேயே அம்மாவின் ஆசைக்காக தொழிலதிபரை திருமணம் செய்து சினிமா வாழ்க்கையுடன் குடும்ப வாழக்கையையும் கவனித்துக் கொண்டார். இந்நிலையில், அவர் தன் திரையுலக அனுபவங்கள் குறித்து சில மாதங்களுக்கு முன் சினிமா பிரபலம் சித்ரா லட்சுமணனின் டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார்.

9வது படிக்கும் போது பட வாய்ப்பு

அந்தப் பேட்டியில், " நான் ஸ்கூல் படிக்கும் போது டிராமா கம்பெனிக்கு போட்டோ எடுக்குறவங்க என்ன போட்டோ எடுத்தாங்க. அத தற்செயலா எம்ஜிஆர் உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்கு புதுமுகம் தேடிட்டு இருக்கும் போது அவர் கையில என் போட்டோவும் போகுது. உடனே என் வீட்டுக்கு போன் வருது.எங்க அம்மா அவ சின்ன பொன்னு இப்போ தான் 9வது முடிச்சு 10வது போகபோறா. அதுனால அவ நடிக்க மாட்டான்னு சொன்னாங்க.

எம்ஜிஆர்கிட்ட ஓகே சொன்னேன்

ஆனா, எம்ஜிஆர் தொடர்ந்து கேட்டதால எங்க அம்மா நேர்ல போய் நடிக்க விருப்பம் இல்லன்னு சொல்ல போனாங்க. எம்ஜிஆர பாக்க போனப்போ எனக்கு நடிக்க விருப்பம் தான். ஆனா நடிக்கத் தெரியாதுன்னு நான் சொல்லிட்டேன். அதுக்கு அப்புறம் எம்ஜிஆர் பிலிம்ஸ் தான் எனக்கு நடிப்பு சொல்லி கொடுத்தது. நான் 5 வருஷம் அக்ரிமெண்ட்ல நடிக்க போனேன்.

எச்சரித்த எம்ஜிஆர்

நான் சினிமாவுக்குள்ள வரும்போது, உன்கிட்ட எல்லாம் சிரிச்சு சிரிச்சு பேசுவாங்க. பழக ஆசப்படுவாங்க. நீ ஜாக்கிரதையா இருக்கனும். நான் தான் உன் அம்மாவுக்கு வாக்கு கொடுத்திருக்கேன்னு எல்லாம் எம்ஜிஆர் சொல்லுவாரு. அவங்க வீட்டு பொன்னு மாதிரி பாத்துகிட்டாரு. நானும் அவர்கிட்ட கேட்டு தான் மத்த படங்களும் பண்ணுனேன்.

எம்ஜிஆர் கட்சி தொடங்கும்போது 3வதா போய் சேர்ந்த ஆளு நான் தான். நீங்க சொன்னா கட்சிக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவேன். ஆனா நடிப்ப மட்டும் விட்டுடுன்னு சொல்லிடாதிங்கன்னு சொன்னேன். ஊர் ஊரா நாடகம் போட்டு காசு சேர்த்து கட்சிக்கு காசு கொடுத்தேன். அவர் முதல்வரானதுக்கு பிறகு அவர முதல் முதல்ல பேட்டி எடுத்தது நான் தான்.

எம்ஜிஆரால மரியாதை

நான் எம்ஜிஆர் அறிமுகப்படுத்தின கதாநாயகிங்குறதால பெரிய நடிகர்கள் கூட எனக்கு மரியாதை கொடுத்து கொஞ்சம் தள்ளியே தான் இருப்பாங்க. அதேசமயம், நான் எம்ஜிஆர் கட்சிக்காக ஜெயலலிதா நான் நடிக்க வந்த கொஞ்ச நாள்லயே சினிமாவில இருந்து விலகிட்டாங்க. அதுனால அவங்களோட சேர்ந்து நடிச்சது இல்லன்னாலும் நல்ல பழக்கம் இருக்கு.

ஜெயலலிதாவ பாக்க போனேன்

என்கிட்ட அவங்க சொல்லிருக்காங்க. நாம்ம ரெண்டு பேரும் பாக்க ஒரு சாயல்ல ஒரே மாதிரியே இருக்கோம்ன்னு. என்ன வீட்டுக்கு எல்லாம் கூப்டாங்க. ஆனா போக முடியல. அவங்க உடம்பு சரியில்லாம இருந்தப்போ அப்பல்லோ போனேன். அங்கயும் அவங்கள பாக்க முடியல. மன திருப்திக்காக கொஞ்ச நேரம் உக்காந்திட்டு வந்தேன்.

குழந்தை எல்லாம் பொய்

அதே மாதிரி ஜெயலலிதாவுக்கும்- சோபன் பாபுவுக்கும் ஒரு குழந்தை இருக்குன்னு சொல்றது எல்லாமே பொய். நானே சோபன் பாபுகிட்ட இத பத்தி பேசி இருக்கேன். அப்படி எல்லாம் எதுவும் இல்ல. நான் கேக்குறேன். அப்படி இவங்க ரெண்டு பேருக்கும் கொழந்த இருந்தா என்ன? ஜெயலலிதாவுக்கு பெர்சனல் லைஃப் இருந்தா தான் என்ன? அதமட்டும் ஏன் பெருசு படுத்துறாங்க.

நம்ம ஆளுங்களுக்கு நல்லா தெரியும்

ஒருவேளை ஜெயலலிதாவுக்கு குழந்தை இருந்தா அத அவங்க சொல்லிருப்பாங்க. அவங்க எவ்ளோ பெரிய தைரியமான பெண்மணி. அவங்ககிட்ட போய் கொழந்த இரு்ககான்னு கேட்டா ஆமா இருக்குன்னு தைரியமா சொல்லக் கூடிய ஆள். நம்ம ஆளுங்களுக்கு இல்லாத ஒன்ன இருக்குறதா சொல்றதுக்கு எல்லாம் நல்லா தெரியும்." என்றார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.