Actress Death: ஏவிஎம் ராஜனின் மனைவி புஷ்பலதா மரணம்.. தென்னிந்திய மக்களை மகிழ்வித்த நடிகைக்கு ரசிகர்கள் இரங்கல்..
Actress Death: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடப் படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை புஷ்பலதா காலமானார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Actress Death: கோயம்புத்தூரை சேர்ந்த புஷ்பலதா, கொங்கு நாட்டு தங்கம் எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து அவர் சாரதா , பார் மகளே பார் , நானும் ஒரு பெண் , கல்யாண ராமன் என பெயர் சொல்லும் படங்களில் நடித்தார்.
ஏவிஎம் ராஜனுடன் திருமணம்
பின், இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களிலும், துணை வேடத்திலும் நடித்தார். இவர், சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே, நடிகரும் தயாரிப்பாளருமான ஏவிஎம் ராஜனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். புஷ்பலதா, கத்தோலிக்க கிருத்துவராக இருந்த போதும் அவர், முருகன் மீது அதீத பக்தியும் பாசமும் கொண்ட ஏவிஎம் ராஜனை காதலித்தார். கரம் பிடித்தார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
கிருத்துவ மத சேவை
100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், தொடர்ந்து கிருத்தவ மதத்திற்கு சேவை ஆற்றி வந்ததாகவும், முருக பக்தனாக இருந்த ஏவிஎம் ராஜனனும் பின்னாளில் கிருத்தவ மத்திற்கு மாறியதாகவும் கூறப்படுகிறது.
தயாரிப்பில் தோல்வி
புஷ்பலதா சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்த சமயத்தில் சில படங்களை தயாரித்ததாகவும், அந்தப் படங்கள் சரியாக ஓடாத காரணத்தால் அவர் தனது சொத்தை எல்லாம் விற்க நேர்ந்தது எனவும் பலரும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், 87 வயதான புஷ்பலதா உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை அறிந்த இவரது ரசிகர்களும் சினிமாத் துறையினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்