Sivaji Ganesan: 23ம் ஆண்டு நினைவு தினம்..வி.சி.கணேசன் டூ நடிகர் திலகம்.. சிவாஜி கணேசனின் பிளாஷ்பேக் பற்றி தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sivaji Ganesan: 23ம் ஆண்டு நினைவு தினம்..வி.சி.கணேசன் டூ நடிகர் திலகம்.. சிவாஜி கணேசனின் பிளாஷ்பேக் பற்றி தெரியுமா?

Sivaji Ganesan: 23ம் ஆண்டு நினைவு தினம்..வி.சி.கணேசன் டூ நடிகர் திலகம்.. சிவாஜி கணேசனின் பிளாஷ்பேக் பற்றி தெரியுமா?

Karthikeyan S HT Tamil
Published Jul 21, 2024 05:50 AM IST

Sivaji Ganesan Memorial Day: திரைத்துறையில் இருந்து அரசியல் களத்தில் நடிகர்கள் கோலோச்சி கொண்டிருந்த காலக்கட்டத்தில் நடிகர் சிவாஜி கணேசனும் அரசியல் களத்தில் இறங்க தவறவில்லை. 'தமிழக முன்னேற்ற முன்னணி' என்ற கட்சியை நிறுவினார். ஆனால், சினிமா களத்தில் வெற்றி கண்டவருக்கு அரசியல் களம் கைகொடுக்கவில்லை.

Sivaji Ganesan: 23ம் ஆண்டு நினைவு தினம்..வி.சி.கணேசன் டூ நடிகர் திலகம்.. சிவாஜி கணேசனின் பிளாஷ்பேக் தெரியுமா?
Sivaji Ganesan: 23ம் ஆண்டு நினைவு தினம்..வி.சி.கணேசன் டூ நடிகர் திலகம்.. சிவாஜி கணேசனின் பிளாஷ்பேக் தெரியுமா?

இந்திய சினிமாவின் பல்கலைக்கழகம் என ரசிகர்களால் இன்று வரை கொண்டாடப்படுபவர் நடிகர் சிவாஜி கணேசன். தமிழ் திரையுலகில் 'நடிகர் திலகம்' என அன்போடு அழைக்கப்படும் சிவாஜி கணேசன் 1927 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி விழுப்புரத்தில் பிறந்தார். சிவாஜிக்கு சிறுவயது முதல் நாடங்களில் அதிகமாக ஆர்வம் இருந்தது. மேடை நாடகத்தில் அதீத ஆர்வம் கொண்ட சிவாஜி கணேசனின் முதல் நாடகத்தின் பெயர் 'இராமாயணம்'. இதில் சீதை வேடத்தில் நடித்தார் சிவாஜி.

முதல் திரைப்படம் 'பராசக்தி'

திரையுலகில் வி.சி. கணேசனாக, அதாவது விழுப்புரம் சின்னய்யா கணேசனாக அறிமுகமாகி, பின்னர் சத்ரபதி சிவாஜி நாடகத்தில் நடித்தார். அதன்பிறகே 'சிவாஜி கணேசன்' என அன்போடு அழைக்கப்பட்டார் 'சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்' மூலம் கணேச மூர்த்தி, 'சிவாஜி' கணேசனாக மாறிய பிறகு அவரது முதல் திரைப்படமான 'பராசக்தி' 1952-ல் வெளியானது. கருணாநிதி திரைக்கதை, வசனம் எழுதிய அந்தப் படத்தின் மூலம்தான் சிவாஜி கணேசன் திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.

கலைஞரின் வசனத்தில் நீதிமன்ற கூண்டில் நின்று சிவாஜி பேசும் அனல் பறந்த வசனங்கள் அறிமுக படத்திலேயே அவருக்கான அடையாளமாக மாறியது. இன்று வரை கலைஞரின் வசனத்தை சிவாஜி பேசியது திரையுலகில் ஆச்சர்யம் அளிக்கும் வகையில்தான் உள்ளது.

நவரசங்களை வெளிப்படுத்திய சிவாஜி

இதைத்தொடர்ந்து வரிசையாக 'கர்ணன்', 'திருவிளையாடல்', 'வீர பாண்டிய கட்டபொம்மன்', 'மனோகரா', 'அன்னையின் ஆணை', 'அன்பு', 'இரத்ததிலகம்' என பல படங்களில் தனது நவரச நடிப்புத் திறனை வெளிப்படுத்தினார். வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன் என யாரை நினைத்தாலும் சிவாஜிதான் ரசிகர்கள் கண் முன்பு வந்து செல்வார்கள்.

அண்ணன் - தங்கை பாசம்

தமிழ் சமூகத்தை பொறுத்தவரை உறவுகள் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டு வருகிறது. அது சினிமாவானலும் சரி நிஜ வாழ்க்கை ஆனாலும் சரி இன்று வரை அதற்கான முக்கியத்துவம் குறைந்தது கிடையாது. அந்த வகையில் அண்ணன், தங்கை பாசத்துக்கு உதாரணமாக இன்றைக்கும் திகழ்கிறது 'பாசமலர்'.

ஒரு நாள் மேயர் சிவாஜி

ஒருமுறை அமெரிக்காவின் சார்பில் ஜனாதிபதி ஜான் கென்னடியின் மிக மிக முக்கிய விருந்தாளியாக கலாச்சார பரிமாற்றத்தின் கீழ் அமெரிக்காவிற்கு சிவாஜி சென்றார். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் அரை அடி நீளமுள்ள பெரிய சாவியை நயாக்ரா மேயர் சிவாஜியிடம் கொடுத்து நாளை காலை வரை ஒரு நாள் மேயராக நீங்கள் இருங்கள் என்றார். இந்திய மக்களின் சார்பில் அமெரிக்க நாட்டில் உள்ள நயாகராவில் சிட்டி மேயராக இருந்த இரண்டுபேர்தான். அதில் ஒருவர் பண்டிதர் ஜவஹர்லால் நேரு, மற்றொருவர் சிவாஜி கணேசன்.

சொவாலியே விருது

பிரான்ஸ் நாட்டில் ஆண்டுதோறும் மிகச் சிறந்த நடிகர்களுக்கு வழங்கப்படும் சொவாலியே விருது சிவாஜியை தேடி வந்தது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் சுமார் 300 படங்களில் நடித்துள்ளார். 1957ல் வெளிவந்த 'வணங்கா முடி' படத்திற்காக இவருக்கு மிகப்பெரிய கட்டவுட் வைக்கப்பட்டது. சிவாஜி நடித்த 'கப்பலோட்டியத் தமிழன்', 'இராஜராஜ சோழன்', 'வீரபாண்டிய கட்டபொம்மன்' உள்ளிட்ட பல திரைப்படங்கள் காண்போரின் மனதில் இன்றும் நிலைத்து நிற்கிறது.

திரைத்துறை டூ அரசியல்

திரைத்துறையில் இருந்து அரசியல் களத்தில் நடிகர்கள் கோலோச்சி கொண்டிருந்த காலக்கட்டத்தில் சிவாஜி கணேசனும் அரசியல் களத்தில் இறங்க தவறவில்லை. 'தமிழக முன்னேற்ற முன்னணி' என்ற கட்சியை நிறுவினார். ஆனால், சினிமா களத்தில் வெற்றி கண்டவருக்கு அரசியல் களம் கைகொடுக்கவில்லை. பெருந்தலைவர் காமராஜர் மீது அதீத பிரியம் கொண்டவர்.

விருதுகளை குவித்த சிவாஜி

சிவாஜி கணேசனின் நடிப்பு திறமையை பாராட்டி பத்ம ஸ்ரீ விருது, பத்மபூஷன் விருது, செவாலியே விருது மற்றும் தாதா சாகிப் பால்கே விருது உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டன. நூற்றாண்டுகளை கடந்த தமிழ் சினிமாவில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த சிவாஜி கணேசன் கடந்த 2001ஆம் ஆண்டு ஜூலை 21ம் தேதி உடல் நலக்குறைவால் இந்த உலகை விட்டு மறைந்தார். இந்த மகத்தான நாளில் மண்ணை விட்டு மறைந்தாலும் மக்கள் மனதை விட்டு நீங்காத நடிகர் திலகத்தின் புகழை போற்றுவோம்..!

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.