ஜார்ஜியா குளிரில் சம்பவம் செய்ய காத்திருக்கும் லெஜண்ட்.. தெறிக்கும் பிண்ணனி இசையில் கூலாக வரும் தலைவர்..
லெஜண்ட் சரவணன் நடிக்கும் 2வது பட்ததிற்கான படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று வரும் நிலையில், அதற்கான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பெரும் தொழிலதிபர் லெஜண்ட் சரவணன். இவர், ஆரம்பத்தில் தனது கடையின் விளம்பரத்தில் நடித்து பேமஸ் ஆன நிலையில், படத்திலும் நடிக்க ஆர்வம் காட்டினார்.
லெஜண்ட் படம்
கோடிக்கணக்கான சொத்துக்கு அதிபதியான இவரே, படத்தையும் தயாரித்தார். அஜித்தின் உல்லாசம் படத்தையும், பல முன்னணி நிறுவனங்களுக்கு விளம்பரப் படம் எடுத்துக் கொடுத்து வந்த ஜேடி மற்றும் ஜெர்ரி லெஜண்ட் சரவணனை வைத்து படம் எடுக்க முன்வந்தனர்.
இதையடுத்து, கீர்த்திகா திவாரி, ஊர்வசி ரவுத்தோலா, ராய் லக்ஷ்மி, யாஷிகா ஆனந்த், பிரபு, விவேக், மன்சூர் அலிகான், லிவிங்ஸ்டன், சுமன், ராகுல் தேவ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே லெஜண்ட் படத்தில் நடித்திருப்பர்.
பிரபலமடைந்த லெஜண்ட் சரவணன்
இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த அனைத்து பாடல்களுமே மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. படம் வசூல் ரீதியில் பெரிதாக வெற்றி பெறவில்லை என்றாலும், லெஜண்ட் சரவணன் என்ற பெயர் பட்டி தொட்டியில் உள்ள குழந்தைகளுக்கும் பரிட்சையமானது.
இந்நிலையில், லெஜண்ட் சரவணன் தனது அடுத்த பட வேளைகளில் இறங்கினார். முதல் படத்திலேயே சினிமாவில் முக்கிய ஒளிப்பதிவாளர்கள், வெளியீட்டு நிறுவனங்கள், எடிட்டர்களுடன் கைகோர்த்தவர் இந்த முறை பெரிய இயக்குநருடன் கை கோர்த்துள்ளார்.
மெகா கூட்டணியில் லெஜண்ட்
எதிர்நீச்சல், கொடி, பட்டாஸ் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான இயக்குநர் துரை செந்தில்குமாருடன் இணைந்து தனது 2வது படத்திற்கான அறிவிப்பை சில நாட்களுக்கு முன் வெளியிட்டார்.
அந்த அறிவிப்பில், கதாநாயகியாக பாயல் கபாடியா நடிப்பதாகவும், ஷியாம், ஆண்ட்ரியா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், ஜிப்ரான் இசையமைக்க உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
தூத்துக்குடியில் படப்பிடிப்பு
இந்தப் படத்தின் பூஜை கடந்த செப்டம்பர் மாதம் நிறைவடைந்த நிலையில், முதல்கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்றது. அப்போது, தான் இந்தப் படத்தில் எவ்வித மேக்கப்பும் இல்லாமல் நடிக்க உள்ளதாக அறிவித்திருந்தார். அத்துடன் இவருடன் நடிக்கும் சக நடிகர்களும் மேக்கப் போடமாட்டார்கள் எனத் தெரிவித்திருந்தார். இதைக் கேட்ட சினிமா பிரியர்களுக்கு பயங்கர அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில், முதல் படத்தில் இவருக்கு போடப்பட்ட மேக்கப்புகள் ரசிகர்கள் மத்தியில் பல கிண்டல்களுக்கு உள்ளானது.
ஜார்ஜியாவில் சம்பவம்
இந்நிலையில், லெஜண்ட் சரவணன் தனது 2வது படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்களை அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவின் மூலம் படப்பிடிப்பு தற்போது ஜார்ஜியாவில் நடைபெற்று வருவது தெரிகிறது.
மேலும், லெஜண்ட் சரவணன் வெளியிட்ட வீடியோவில் பயங்கரமான பின்னணி இசையுடன் சரவணன் நடந்து செல்வது போன்ற வீடியோவை வெளியிட்டிருக்கிறார். இது சண்டைக்காட்சியாக இருக்கலாம் எனத் தெரிகிறது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்