HBD Kajal Aggarwal : ‘இசை மழையில் நனைய தயாரா’.. முன்னணி நடிகை காஜல் அகர்வால் பிறந்தநாள் இன்று!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Kajal Aggarwal : ‘இசை மழையில் நனைய தயாரா’.. முன்னணி நடிகை காஜல் அகர்வால் பிறந்தநாள் இன்று!

HBD Kajal Aggarwal : ‘இசை மழையில் நனைய தயாரா’.. முன்னணி நடிகை காஜல் அகர்வால் பிறந்தநாள் இன்று!

Divya Sekar HT Tamil
Jun 19, 2023 06:40 AM IST

இன்று காஜல் அகர்வால் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள்,ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகை காஜல் அகர்வால் பிறந்தநாள் இன்று
நடிகை காஜல் அகர்வால் பிறந்தநாள் இன்று

நடிகை காஜல் அகர்வால் திரைத்துறையில் கியூன் ஹோ கயா நாஎன்ற படத்தின் மூலம் தான் என்டரி கொடுத்தார். இப்படத்தில் ஐஷ்வர்யா ராயின் தோழியாக நடித்தார். கடந்த 2004ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார். பின்னர், கடந்த 2007ஆம் ஆண்டு லட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலமாகத் தெலுங்குத் திரைத்துறையில் அறிமுகமானார்.

அதன்பிறகு கடந்த 2008ஆம் ஆண்டு இவர் நடித்த பழனி என்ற திரைப்படம் தமிழில் வெளியானது. இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்தது. கடந்த 2009ஆம் ஆண்டு இவர் நடித்த மகதீரா என்ற படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. இவருக்கு அத்திரைப்படத்திற்காக பிலிம்பேர் விருது பரிந்துரை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இவர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சிறு வேடத்தில் சரோஜா திரைப்படத்திலும் பிறகு பாரதிராஜாவின், பொம்மலாட்டம் திரைப்படத்தில் நடித்தார். அதன்பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த தாலிங்கு, பிருந்தாவனம், மிட்டர். பெருபெட்டு, பிசினசு மேன், ஜில்லா போன்ற திரைப்படங்களும் வெற்றிபெற தற்போது, தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நட்சத்திரமாகத் ஜொலிக்கிறார்.

சூர்யாவுடன், மாற்றான் திரைப்படத்திலும், ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய்யுடன் துப்பாக்கி திரைப்படத்திலும் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

ஆல் இன் ஆல் அழகு ராஜா படத்தில் சித்ரா தேவி பிரியா கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருப்பார். குறிப்பாக இசை மழையில் நனைய தயாரா என்ற டைலாக் செம ஹிட். தனுஷ் உடன் இவர் நடித்த மாரி, ஜீவா உடன் இவர் நடித்த கவலை வேண்டாம், அஜித்துடன் இவர் நடித்த விவேகம், விஜய்யுடம் இவர் நடித்த மெர்சல் என அனைத்து படங்களுமே இவரை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது என்றே சொல்லலாம்.

இவர் தனது நீண்டகால நண்பரான கௌதம் கிட்ச்லுவை 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.இந்த ஜோடிக்கு 2022 ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. இந்த தம்பதியினர் தங்கள் மகனுக்கு நீல் கிட்ச்லு என்று பெயரிட்டு உள்ளனர். தொடர்ந்து காஜல் அகர்வால் தனது மகனின் படங்களை சமூக ஊடகங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் அவர் நடித்து வருகிறார்.

இன்று காஜல் அகர்வால் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.