Aparna Balamurali: அபர்ணா பாலமுரளியிடம் தவறாக நடந்த மாணவர் சஸ்பெண்ட்!
அபர்ணா பாலமுரளியிடம் அத்துமீறி நடக்க முயன்ற மாண்வர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Aparna Balamurali
சினிமா நட்சத்திரங்களிடம் ரசிகர்கள் அத்துமீறி நடந்து கொள்ளும் செய்திகளை அடிக்கடி பார்த்து வருகிறோம். அதன் படி படப்பிடிப்பு நடக்கும் இடங்களிலும், விழாக்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும் நட்சத்திரங்கள் எதிர்கொள்ளும் மோசமான அனுபவங்களை அவர்களே பல்வேறு பேட்டிகளில் பகிர்ந்துள்ளனர். அதற்கு மற்றொரு சான்றாக அண்மையில் கல்லூரி விழாவில் பங்கேற்ற நடிகை அபர்ணாவிடம் மாணவர் ஒருவர் எல்லை மீறும் வீடியோ வெளியானது.
