Tamil Cinema News Live : - "என்னடா பன்னிருக்கீங்க.."பக்கா தெலுங்கு மோடில் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் - ரேஸ் வேகத்தில் ராம் சரணின் கேம் சேஞ்சர் டீஸர்
HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.
Sat, 09 Nov 202404:12 PM IST
பிரமாண்ட இயக்குநர் முதல் முறையாக இயக்கியிருக்கும் நேரடி தெலுங்கு படம் ராம் சரணின் கேம் சேஞ்சர் உருவாகியுள்ளது. ரேஸ் வேகத்தில் பாக்கா தெலுங்கு மோடில் இருக்கிறது படத்தின் டீஸர்.
Sat, 09 Nov 202403:08 PM IST
- தனுஷ், சூர்யா படங்களில் நடித்திருக்கும் வித்யா பிரதீப், மருத்துவராகவும் உள்ளார். நிறைமாத கர்ப்பிணி ஆகியிருக்கும் அவர் கர்ப்ப வயிறுடன் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
Sat, 09 Nov 202412:10 PM IST
- சுந்தரி சீரியலில் நடித்து வரும் துணை நடிகை மீனா மெத்தபெட்டமைன் என்று போதை பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் மால் அருகே பவர்புஃல்லான போதை பொருளுடன் இருந்த நடிகையை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். இந்த விவகாரத்தில் மேலும் பல நடிகைகளுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது
Sat, 09 Nov 202410:29 AM IST
- விலங்குகள் தத்தெடுப்பது பற்றி பேசியதோடு, அதற்கு நிதி வழங்க பலரும் முன் வர வேண்டும் என்று கூறிய நிக்கி கல்ராணி, மாடு எங்களுக்கு தெய்வம் போன்றது, அதை சாலையில் விட வேண்டும் என கையெடுத்து கும்பிட்டுள்ளார்.
Sat, 09 Nov 202409:36 AM IST
- கடந்த வாரம் தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட சீரியல் மக்கள் மத்தியில் பெற்ற வரவேற்புகளின் அடிப்படையில் டிஆர்பி புள்ளிப் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன் அடிப்படையில், முதல் 10 இடங்களைப் பெற்ற சீரியல்களைப் பற்றி இங்கு பார்ப்போம்.
Sat, 09 Nov 202409:10 AM IST
- நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது ரஜினி காந்த்தின் கூலி படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
Sat, 09 Nov 202408:13 AM IST
- நடிகை குஷ்பு தன் காதல் மற்றும் திருமண வாழ்க்கை குறித்தும், கல்யாண மேடையில் நடிகர் கார்த்திக் செய்த சம்பவம் குறித்தும் பேசியுள்ள வீடியோ வைரலாகியுள்ளது.
Sat, 09 Nov 202407:51 AM IST
பாடிக்கொண்டிருக்கும் போதே தீபாவின் உயிர் பிரிந்தது. அதைப்பார்த்த கார்த்திக் கதறி அழுதான்! - முடிவுக்கு வந்த கார்த்திகை தீபம் சீரியல்
Sat, 09 Nov 202407:19 AM IST
நடிகர் தனுசுக்கு ரெட் கார்டு, புதிய படங்களை தொடங்காமல் வேலை நிறுத்தம் என்று அரசியல் செய்ய ஆரம்பித்து விட்டார். - கே.ஆர்.
Sat, 09 Nov 202407:06 AM IST
- நடிகை நயன்தாராவின் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படமாக உருவாகியுள்ள நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரிடேலின் டிரைலரை நெட்பிளிக்ஸ் தளம் வெளியிட்டுள்ளது.
Sat, 09 Nov 202406:46 AM IST
பிக் பாஸ் 8 ஆவது சீசனில் கடந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்பதால் இந்த முறை டபுள் எலிமினேஷன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Sat, 09 Nov 202406:36 AM IST
முன் பின் பாராத மனிதரிடம் கோபப்படுவதிற்கு காரணம் மதம்தான் என்று அஜித் பேசியது அழகாக இருந்தது. அவருக்கு என்னுடைய பாராட்டுகள்! - சத்யராஜ்!
Sat, 09 Nov 202406:07 AM IST
- கார்த்திகை தீபம் சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்த ஆர்த்திகாவை சீரியலில் இருந்து வேண்டுமென்றே தூக்கி விட்டதாக அவர் தற்போது குற்றம்சாட்டியுள்ளார்.
Sat, 09 Nov 202405:02 AM IST
ரஜினியை சந்தித்த பாடலாசிரியர் வைரமுத்து அது குறித்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
Sat, 09 Nov 202404:50 AM IST
- திரைப்படங்களில் பெரும்பாலும் பெண்களின் கதாப்பாத்திரத்தை தற்போது வரை ஆண்கள் தான் முடிவு செய்கின்றனர் என சமந்தா கருத்து தெரிவித்துள்ளார்.
Sat, 09 Nov 202403:32 AM IST
- இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு காட்சிகள் அமரன் படத்தில் இருப்பதாகக் கூறி படத்திற்கு எதிர்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், படத்தின் வசூல் நேற்று அதிகரித்துள்ளது.
Sat, 09 Nov 202402:52 AM IST
சஞ்சு சாம்சன் தமிழ் இவ்வளவு சரளமாக பேசுவதற்கு காரணம் இருக்கிறது. அந்த காரணம் என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.
Sat, 09 Nov 202402:50 AM IST
- அழகன் யார் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்பும் ஆனந்தி, அன்புவிடம் தன்னை இன்று ஒருநாளாவது என் போக்கில் விடுங்கள் என கறார் காட்டி பேசியுள்ளார்.
Sat, 09 Nov 202402:06 AM IST
- தமிழ் தொலைக்காட்சிகளில் இன்று நவம்பர் 9ம் தேதியான இன்று சட்டம் தன் கடமையைச் செய்யும் எனப் பேசும் தமிழன் முதல் நெஞ்சுக்கு நீதி வரை திரையிடப்படவுள்ள அனைத்து படங்களின் தொகுப்பை இங்கு காணலாம்.
Sat, 09 Nov 202401:26 AM IST
- தன்னிடம் சவால் விட்ட கயலை எப்படியாவது பழி வாஙக வேண்டும் என நினைத்து, கயலின் குடும்பத்திற்கு குடைச்சல் கொடுத்து வருகிறார் சிவசங்கரி.
Sat, 09 Nov 202412:30 AM IST
ஓடிடி தளங்களுக்கு இடையேயான போட்டியை சமாளிப்பது எப்படி என்று ஜீ5 தலைமை வணிக அதிகாரி மனிஷ் கல்ரா பேட்டி கொடுத்திருக்கிறார்.