
Tamil Cinema News Live : - Top Cinema News: நடிகையான கும்பமேளா அழகி.. ஆஸ்கர் ரேஸில் இந்திய படம்.. தளபதி 69 அப்டேட் - இன்றைய டாப் சினிமா செய்திகள்
HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.
Fri, 24 Jan 202505:10 PM IST
- Top Cinema News Today: நடிகையான கும்பமேளா அழகி, ஆஸ்கர் ரேஸில் இந்திய படம், தளபதி 69 அப்டேட், 15 ஆண்டுள் கழித்து கன்னட சினிமாவில் நடிக்கும் நயன்தாரா உள்பட இன்றைய டாப் சினிமா செய்திகள்
Fri, 24 Jan 202503:59 PM IST
- Ganja Karuppu Complaint: ஊருக்கு சென்றிருந்த போது பூட்டப்பட்ட வீட்டை உடைத்து ஒயிட் வாஷ் செய்துள்ளார் என தனது ஹவுஸ் ஓனர் மீது குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் நடிகர் கஞ்சா கருப்பு. இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Fri, 24 Jan 202502:21 PM IST
- Actress Nayantara: தமிழ், தெலுங்கு, தாய் மொழி மலையாளம் என மாறி மாறி நடித்து வந்த நயன்தாரா 15 ஆண்டுகள் கழித்து கன்னட சினிமாவில் மீண்டும் நடிக்கிறார். இது அவரது இரண்டாவது கன்னட படமாக அமைகிறது.
Fri, 24 Jan 202512:31 PM IST
- SK25 Title Issue: தமிழ் திரையுலகினரிடம் கதை கான் பஞ்சமாக இருந்தது. இப்போது தலைப்புக்கும் அந்த சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. சிவகார்த்திகேயன் 25வது படத்துக்கு பராசக்தி தலைப்பை வைத்தால் போராட்டம் நடத்தப்படும் என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Fri, 24 Jan 202511:08 AM IST
- Malayalam Director B Unnikrishnan: மலையாள சினிமா தயாரிப்பாளரும், நடிகையுமான சாண்ட்ரா தாமஸ் அளித்த புகாரின் பேரில், மலையாள சினிமா இயக்குநர் பி.உன்னிகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Fri, 24 Jan 202509:50 AM IST
Prakash Raj: நடிகர் பிரகாஷ் ராஜ் தற்போது சினிமா, அரசியல் தவிர்த்து குழந்தைகள் மற்றும் அவர்களின் எதிர்காலம் குறித்த கசப்பான உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
Fri, 24 Jan 202509:33 AM IST
- Oscar Nominations 2025: சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருது பரிந்துரை லிஸ்டில் இடம்பிடித்திருந்த சூர்யாவின் கங்குவா, இறுதி பட்டியலில் இடம்பெறவில்லை. அத்துடன் இந்தியாவில் தயாரான குறும்படம் ஒன்றும் ஆஸ்கர் சிறந்த குறும்படம் பிரிவில் இடம்பிடித்துள்ளது.
Fri, 24 Jan 202509:22 AM IST
- Music Director D.Imman: இசையமைப்பாளர் டி.இமான் தனது பிறந்த நாளன்று தன் முழு உடல் உறுப்புகளையும் தானம் செய்துள்ளார்.
Fri, 24 Jan 202508:38 AM IST
- Actor Jeyaselan Died: தமிழ் சினிமாக்களில் பல படங்களில் சிறு கதாபாத்திரங்களில் தோன்றினாலும் ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்கும் விதமாக நடிப்பை வெளிப்படுத்தியவர் ஜெயசீலன். அவரத திடீர் மறைவு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Fri, 24 Jan 202507:59 AM IST
- Vidaamuyarchi: விடாமுயற்சி படத்திற்கு பின்னும் நாம் சேர்ந்து இன்னும் நிறைய படங்களில் பணியாற்றுவோம் என அஜித் சார் என்னிடம் சொன்னார் என்று இயக்குநர் மகிழ் திருமேனி கூறியுள்ளார்.
Fri, 24 Jan 202507:44 AM IST
- Bakiyalakshmi Serial : ஈஸ்வரி ராதிகாவிடம் கோபி கூப்பிட்டால் நீ வந்து விடுவாயா? அப்படியே வந்தாலும் மேடை ஏறி விடுவாயா? உனக்கு எங்கே போனது அறிவு என ராதிகாவிடம் கேள்வி கேட்கிறார். பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடு குறித்து பார்க்கலாம்
Fri, 24 Jan 202507:30 AM IST
Thalapathy 69: தளபதி 69 படத்தின் தலைப்பு குறித்த தகவல் சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் சொல்லப்பட்டு வருகிறது.
Fri, 24 Jan 202506:32 AM IST
- IT Raid: தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்கள் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் 3ம் நாளாக சோதனை மேற்கொள்வதால் படங்கள் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Fri, 24 Jan 202506:21 AM IST
- karthigai Deepam : கார்த்தியிடம் சிக்கிய ஆதாரம், அழிக்க நினைத்து கார்த்தியிடம் சிக்கும் மாயா கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்து இதில் பார்க்கலாம்.
Fri, 24 Jan 202506:11 AM IST
- Siragadikka Aasai : முத்துவுக்கு புது எதிரியாக இந்த போக்குவரத்து காவலர் என்ட்ரி கொடுக்கிறார். இவரால் இன்னும் என்னென்ன பிரச்சனைகள் வரப் போகிறது? கதை எந்த கோணத்தில் செல்ல போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.
Fri, 24 Jan 202506:00 AM IST
- Divya Kallachi: பிரபல யூடியூபரான திவ்யா கள்ளச்சி, சிறு குழந்தைகளை வைத்து பாலியல் தொழில் செய்து, பணம் பறித்து வருவதாக சமூக ஆர்வலர் சித்ரா குற்றம்சாட்டி உள்ளார்.
Fri, 24 Jan 202504:50 AM IST
- Game Changer Box Office : படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்களை கணித்து கூறும் Sacnilk.com வெளியிட்டுள்ள தகவல்படி, ராம் சரண் மற்றும் இயக்குநர் ஷங்கரின் கூட்டணியில் உருவான கேம் சேஞ்சர் திரைப்படம் 14ஆம் நாள் வசூலில் பின் தங்கியுள்ளது.
Fri, 24 Jan 202504:33 AM IST
- Samantha: நடிகை சமந்தா தான் ஏன் அதிகம் தமிழ் படங்களில் நடிப்பதில்லை என்பதற்கான காரணத்தை வெளிப்படையாகவே பேசி அதிர்ச்சி அளித்துள்ளார்.
Fri, 24 Jan 202504:09 AM IST
- நடிகர் ராஜ்கிரண் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றைபகிர்ந்துள்ளார். அதாவது தனது போட்டோவை காட்டி, ஒருவர் ஏமாற்ற முயல்வதாகவும் இதனால் ஜாக்கிரதையாக இருக்கும்படியும் அவர் எச்சரித்துள்ளார்.
Fri, 24 Jan 202503:06 AM IST
- Madhagajaraja Box Office: சுந்தர் சி - விஷால் கூட்டணியில் உருவான மதகஜராஜா படம் ரசிகர்களின் ஆதரவால் 50 கோடி ரூபாய் வசூலை பெற உள்ளது.
Fri, 24 Jan 202502:43 AM IST
- D.Imman: மைனா தந்த திருப்புமுனை.. பிரியங்கா சோப்ராவை தமிழில் பாடவைத்தவர்.. இசையமைப்பாளர் டி.இமானின் கதையினை அவரது பிறந்த நாளான இன்று பார்ப்போம்.
Fri, 24 Jan 202502:31 AM IST
- Kiccha Sudeep: சிறந்த நடிகர் விருதுக்காக பலரும் கனவு காணும் போது கன்னட நடிகர் கிச்சா சுதீப், தனக்கு வழங்கப்பட இருந்த சிறந்த நடிகர் விருதை ஏற்க மறுத்துள்ளார்.
Fri, 24 Jan 202501:52 AM IST
- Singappenne Serial: மகேஷ், ஹாஸ்டல் வார்டனை சந்திப்பதற்காக வந்ததை மித்ரா, மகேஷின் அம்மாவிடம் கூறியதால் அவர்கள் இருவருக்கும் என்ன பர்சனல் இருக்கிறது என விவாதித்து வருகின்றனர்.
Fri, 24 Jan 202501:19 AM IST
- Kayal Serial: ஷாலினியை கடத்தி வந்து கல்யாணம் செய்ததற்காக அன்பு மீது போலீசார் எஃப்ஐஆர் போட வந்ததை விக்னேஷ் தடுத்து நிறுத்துகிறான்.
Fri, 24 Jan 202501:10 AM IST
- HBD Riya Sen: தமிழ் சினிமா கண்டெடுத்த ஹீரோயின்களில் ஒருவராக இருந்து வரும் நடிகை ரியா சென், நிஜத்தில் அரச குடும்பத்தை சேர்ந்தவராக உள்ளார். கூரான பார்வையால் ரசிகர்களை கவர்ந்த கண்ணழகியாக திகழ்ந்தார்.