LIVE UPDATES
Tamil Cinema News Live : - லேட்டானாலும் சம்பவம் பண்ண காத்திருக்கும் அஜித்! அடுத்த இயக்குனர் இவர் தான்! வெளியான தகவல்!
HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.
Wed, 01 Jan 202503:35 PM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: லேட்டானாலும் சம்பவம் பண்ண காத்திருக்கும் அஜித்! அடுத்த இயக்குனர் இவர் தான்! வெளியான தகவல்!
- 2025 ஆம் ஆண்டில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்கள் என இரண்டு படங்கள் இருப்பதை தொடர்ந்து அஜித் மற்றொரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இது குறித்தான தகவல் தற்போது வைரல் ஆகியுள்ளது.
Wed, 01 Jan 202503:10 PM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: இரண்டாவது முறை தாயாகப் போகிறாரா இலியானா? குட் நீயுசை பகிர்ந்து மகிழ்ச்சி! ரசிகர்கள் வாழ்த்து!
- இலியானா கர்ப்பம்: இலியானா மீண்டும் தாயா? புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட சமீபத்திய வீடியோ அது குறித்தான அறிவிப்பை வெளியிட்டது போலத் தெரிகிறது. இந்த புத்தாண்டிலேயே அவர் மற்றொரு குழந்தையை பெற்றெடுக்கப் போகிறார் என்று தெரிகிறது.
Wed, 01 Jan 202502:33 PM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: ‘என்னுடன் தங்குவார்கள்.. என்னை நேசிப்பார்கள்.. நேசிக்கிறேன்’ அன்ஷிதா வெளியிட்ட பதிவு!
- ‘அனைவருக்கும் நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன், என் வாழ்க்கையின் அனைத்து இழப்புகள், துயரங்கள் மற்றும் எதிர்மறைகள் இந்த புதிய ஆண்டுடன் மங்கிவிடும் என்று நான் நம்புகிறேன். ஒரு அற்புதமான ஆண்டுக்கான நம்பிக்கையுடன் நான் 2025ல் அடியெடுத்து வைக்கிறேன்’
Wed, 01 Jan 202501:12 PM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: இந்த வருஷமும் நாங்க தான்டா! இட்லி கடை போஸ்டரை வெளியிட்ட தனுஷ்! அப்போ இனி அதகளம் தான்!
- தனுஷின் இயக்கத்தில் வெளியான இரண்டாவது படமான ராயன் படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த போதிலும் வசூல் ரீதியாக மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனை அடுத்து அவரது இயக்கத்தில் மற்ற படங்கள் குறித்து அறிவிப்பும் வெளியாக தொடங்கின.
Wed, 01 Jan 202501:03 PM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: ‘பிள்ளையார் பட்டி வந்த சசிக்குமார்.. பிள்ளைகளுடன் சூழ்ந்த பக்தர்கள்..’ நெகிழ்ந்து போன சூப்பர் தருணம்!
- முகம் சுழிக்காமல், சசிக்குமார் அனைவரிடத்திலும் பண்பாக நடந்து கொண்டதால், அவரை அங்கிருந்த பக்தர்களும் உற்சாகப்படுத்தினர். சிலர் தங்களின் குழந்தையை சசிக்குமாரிடம் கொடுத்து, அவரிடம் பெயர் வைக்குமாறும் கேட்டுக் கொண்டனர்.
Wed, 01 Jan 202512:30 PM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: 2025 தமிழ் சினிமா! காத்திருப்பும் எதிர்பார்ப்புகளும்! ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் திரைப்படங்கள்!
- 2025 ஆம் ஆண்டு வெளியாக உள்ள படங்களின் பட்டியல் மற்றும் அதிகம் எதிர்பார்ப்பு உள்ள படங்களின் பட்டியல் பின்வருமாறு.
Wed, 01 Jan 202512:15 PM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: பழைய சிவா அண்ணாவாக வருவேன்! கேன்சர் ப்ரீ ஆகி விட்டேன்! வீடியோ வெளியீட்டு குஷி படுத்திய சிவராஜ்குமார்!
- கன்னட நடிகர் சிவராஜ்குமார் புத்தாண்டை முன்னிட்டு தனது ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தியை தெரிவித்துள்ளார். எனக்கு இப்போ கேன்சர் குணமடைந்து விட்டது. இன்னும் சில மாதங்களில் பழைய சிவண்ணாவாக மீண்டும் உங்களிடம் வருவேன்" எனத் தெரிவித்துள்ளார்.
Wed, 01 Jan 202511:51 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: 'திமிர்பிடித்த' நாக வம்சி! அதுவே என்னோட கதை! லக்கி பாஸ்கர் பட இயக்குனரை வெளுத்து வாங்கிய ஹன்சல் மேத்தா!
- இயக்குனர் நாக வம்சியின் லக்கி பாஸ்கர் தனது ஊழல் தொடர்களான ஸ்கேம் 1992 மற்றும் ஸ்கேம் 2003 ஆகியவற்றிலிருந்து "தாராளமாக காப்பி அடிக்கப்பட்ட படம்" என்று ஹன்சல் மேத்தா கூறினார்.
Wed, 01 Jan 202511:19 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: நெகட்டிவிட்டிய தள்ளி வைங்க! விக்கியின் புத்தாண்டு வாழ்த்து! புர்ஜ் கலிபாவில் கொண்டாட்டம்!
- விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா அவர்களது புத்தாண்டு கொண்டாடத்தை புர்ஜ் கலிபாவின் முன் கொண்டாடியதாக போட்டோ வெளியிட்டுள்ளனர். இந்த போட்டோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Wed, 01 Jan 202510:32 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: விலகிய விடாமுயற்சி! தெறிக்க விடப்போகும் கேம் சேஞ்சர்! டிக்கெட் விலை எகிறுமா? கலக்கத்தில் தெலுங்கு ரசிகர்கள்!
- கேம் சேஞ்சர் திரைப்படம்: கேம் சேஞ்சர் மீது அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. ஷங்கர் இயக்கிய இப்படம், தமிழ் மார்க்கெட்டிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் ஒரு கேம் சேஞ்சர் படம் தற்செயலாக ஒன்று சேர்ந்துள்ளது.
Wed, 01 Jan 202509:21 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: 92 விருதுகள்! கின்னஸ் புத்தகத்தில் இடம்! ரிரீலிஸ் ஆகப் போகும் ஹிரித்திக் ரோஷனின் முதல் படம்! பிறந்தநாளில் ட்ரீட் தான்!
- ஹிருத்திக் ரோஷனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது முதல் படம் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இப்படம் 92 விருதுகளை வென்று கின்னஸ் புத்தகத்தில் தனது பெயரை பதிவு செய்தது.
Wed, 01 Jan 202508:58 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: நியூ இயர் ட்ரீட் கொடுத்த செல்வராகவன்.. நீண்ட நாள் காத்திருப்புக்கு கிடைத்த விடை!
- இயக்குநர் செல்வராகவன் 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு அவரது ரசிகர்களுக்கு நியூ இயர் ட்ரீட் கொடுத்துள்ளார்.
Wed, 01 Jan 202508:15 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: சினிமாவில் இருந்து ஓய்வெடுத்த உமா ரமணன்! பிடிவாதம் பிடித்த பேரரசு! அடுத்தடுத்து பாடிய 2 பாடல்கள்!
- இந்த இரண்டு பாடல்களும் உமா ரமணனின் கேரியரில் மிகவும் வித்தியாசமான டிரெண்டிங் பாடல்களாகும். இதனையடுத்து இந்த ஆண்டு உமா ரமணன் நம்மை விட்டு பிரிந்தாலும் நமது மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
Wed, 01 Jan 202507:46 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: 'தலைகீழா நின்னு தண்ணி குடிச்சாலும் பாலிவுட்டால இது முடியாது' பெட்டியை கட்டிய டைரக்டர்..
- பாலிவுட்டால இதெல்லாம் எப்போவும் முடியாது அதனால் நான் இனி தென்னிந்திய படங்களில் நடிக்க உள்ளதாக பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் கூறியுள்ளார்.
Wed, 01 Jan 202506:30 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: கிழித்து தொங்கவிடப்பட்ட ட்ரெண்டிங் அக்காக்கள்.. பல பெண்கள் வாழ்க்கையில் விளையாடும் கொடூரம்..
- பணம் சம்பாதிக்கும் நோக்கில் சில பெண்கள் செய்யும் வேலை, பல ஏதும் அறியாத பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கிறது என ட்ரெண்டிங் அக்காக்களை ராஜேஸ்வரி பிரியா கண்டித்துள்ளார்.
Wed, 01 Jan 202504:55 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: ஏறி இறங்கும் வாத்தியார்.. 12ம் நாளில் விடுதலை 2 வசூல் என்ன? .. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்..
- விடுதலை 2 படம் வெளியாகி 12 நாட்கள் முடிவடைந்த நிலையில், படம் 52.35 கோடி ரூபாய் வசூலைக் குவித்துள்ளதாகத் தெரிகிறது.
Wed, 01 Jan 202504:05 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: VidaaMuyarchi :‘வாழு வாழ விடு.. அவங்க பொருளை எடுத்து அவங்களையே போட்ட தருணம்.. விடாமுயற்சியால் தவிக்கும் தமிழ் சினிமா!
- தற்போது சின்ன படங்களுக்கு நல்ல ஜாக்பாட் content நன்றாக இருந்தால் பொங்கல் விடுமுறைக்கு நன்றாக ஓடும். நேற்று இரவே பல படங்களின் தயாரிப்பாளர்கள், தங்களது வினியோகஸ்தர்களிடம் பேச தொடங்கிவிட்டனர்.
Wed, 01 Jan 202503:59 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: கயல் தலைமையில் நடந்த அன்பு கல்யாணம்.. வேதவள்ளியால் இனி வெடிக்கப்போகும் பிரச்சனை என்ன? கயல் சீரியல் அப்டேட்
- நீயும், தேவியும் காதலித்து தான கல்யாணம் செஞ்சீங்க இப்போ நான் கல்யாணம் பண்ணுனா உங்களுக்கு வலிக்குதா என கயலிடம் அவர் தம்பி அன்பு கோவமாக பேசியுள்ளார்.
Wed, 01 Jan 202502:24 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: பொங்கல் ரேஸில் இருந்து தள்ளிப் போன விடாமுயற்சி.. திட்டம் போட்டு அஜித்தை காலி செய்தனரா? பொங்கும் ரசிகர்கள்..
- நடிகர் அஜித் குமாரை தயாரிப்பு நிறுவனமான லைகா திட்டம் போட்டு காலி செய்ததாக அவரது ரசிகர்கள் பொங்கி வருகின்றனர்,
Wed, 01 Jan 202501:18 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: 'முடிச்சு விட்டாங்க போங்க'.. ஆட்டம் பாட்டம்ன்னு போயிட்டு இருந்த மகேஷை ஆஃப் பண்ணிய ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்
- மகேஷின் பிறந்தநாள் விழாவில் ஆனந்தி, தான் அன்புவை விரும்புவதாக மகேஷிடம் சொல்லி கதறி அழுதுள்ளாள்.
Wed, 01 Jan 202512:30 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: விரட்டி அடித்தவர்கள் முன் விருட்சமாய் வளர்ந்து நின்ற நடிகை.. மொழி, விருதுகளை கடந்து வென்ற வித்யா பாலன் பிறந்தநாள் இன்று!
- தமிழ் சினிமாவில் இருந்து ராசி இல்லாத நடிகை என விரட்டி அடித்தவர்கள் முன் தேசிய விருது, பத்மஸ்ரீ விருது, பிலிம்ஃபேர் விருதுகளை குவித்து வெற்றி நடை போட்ட நடிகை வித்யா பாலனின் பிறந்தநாள் இன்று.
Wed, 01 Jan 202512:00 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: ஒவ்வொரு பிரேமிலும் நடிக்கும் நடிப்பு அரக்கன்.. வில்லன், காமெடியன் என அனைத்திலும் பிளந்துகட்டிய கலாபவன் மணி பிறந்தநாள்..
- தனக்கு கிடைக்கும் சின்ன கதாப்பாத்திரம் தொடங்கி, அனைத்திலும் தன் முத்திரையை பதித்த நடிப்பு அரக்கன் கலாபவண் மணியின் பிறந்தநாள் இன்று.