Tamil Cinema News Live : - அடித்து ஓடிய 60 நாட்கள்.. விரட்டியடித்த விஜய் சேதுபதி.. - பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய 2 பேர் யார் யார்?
HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.
Sat, 07 Dec 202404:19 PM IST
அடித்து ஓடிய 60 நாட்கள்.. இரண்டு பேருக்கு செக்.. விரட்டியடித்த விஜய் சேதுபதி.. - பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறிய 2 பேர் யார் யார்?
Sat, 07 Dec 202411:43 AM IST
படம் வெளியான அன்றைய தினம், ஹிந்தியில் 72 கோடியும் தெலுங்கில் 92 கோடியும் புஷ்பா 2 திரைப்படம் வசூல் செய்து இருக்கிறது. இதற்கு முன்னதாக தெலுங்கில், ஆர் ஆர் ஆர் திரைப்படம் படம் வெளியான அன்றைய தினம் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.
Sat, 07 Dec 202410:13 AM IST
நான் ஆர்யாவை தியேட்டரில் வைத்து சந்தித்தேன். அவரைப் பார்த்ததும் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. அப்போது அவரது முதல் படம் பிரச்சினையில் சிக்கியிருந்த சமயம் - விஷ்ணு வர்தன்
Sat, 07 Dec 202409:40 AM IST
- இசக்கியுடன் வாழ ஷண்முகம் கண்டிஷன் போட, அதை கேட்டு முத்துப்பாண்டி என்ன முடிவு எடுக்கபோகிறார் என்ற எதிர்பார்ப்புகள் அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் காட்சிகள் இடம்பெறவுள்ளன.
Sat, 07 Dec 202409:39 AM IST
- நடிகை குஷ்பு தன் குடும்பத்தை பற்றியும் அவர்களுடனான உறவு முறை பற்றியும் கலா மாஸ்டர் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Sat, 07 Dec 202409:04 AM IST
- சொல்லப் போனால் சினிமாத் துறையில் நான் ஒரு பாதி ஆதரவற்றவனாகத் தான் இருக்கிறேன். அதுமட்டுமின்றி, இந்தத் துறைக்கு சம்மந்தம் இல்லாதவனாக இருந்திருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.
Sat, 07 Dec 202408:51 AM IST
- விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் தன்னை நிரபராதி என நிருபித்தவர் நடிகை புவனேஸ்வரி. தற்போது துறவற வாழ்க்கை வாழ்ந்து வருவதுடன் தனது வருமானத்தில் ஒரு பகுதியை தானம் செய்து வருவதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
Sat, 07 Dec 202408:34 AM IST
கார்த்தியின் மீது திரும்பிய சந்தேகம்.. கெடு வைத்த சாமுண்டீஸ்வரி, நடந்தது என்ன? - கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் பார்க்கலாம்.
Sat, 07 Dec 202407:46 AM IST
- நடிகை சோபிதா துலிபாலா கல்யாணம் ஆவதற்கு முன்பே வேறு ஒரு தொழிலதிபருடன் லிவிங் டு கெதர் ரிலேஷன்சிப்பில் இருந்தார் என பயில்வான் ரங்கநாதன் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
Sat, 07 Dec 202407:43 AM IST
- எனக்கு கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக கொடுத்த அவர் தற்போது என்னுடன் இல்லை என்று புஷ்பா 2 பார்க்க சென்று பலியான பெண் கணவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
Sat, 07 Dec 202406:30 AM IST
- பிரபல ஓடிடி தளங்களில் இந்த வாரம் இரண்டு தமிழ் படங்கள், நாக சைதன்யா, பார்வதி, பிரியா பவானி ஷங்கர் நடித்திருக்கும் திகில் வெப் சீரிஸ் வெளியாகியுள்ளன.
Sat, 07 Dec 202406:25 AM IST
- நாக சைதன்யா சோபிதா துலிபாலா திருமணத்தின் போது எனது அப்பா மிகவும் கோவமாக இருந்தார் எனக் கூறி சமந்தா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Sat, 07 Dec 202405:40 AM IST
- ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் விவாகரத்து செய்ய உள்ளனர் எனக் கூறப்பட்டு வந்த நிலையில் பார்ட்டியில் கலந்து கொண்டு இருவரும் போட்டோ எடுத்து வந்துள்ளனர்.
Sat, 07 Dec 202404:52 AM IST
- நில அபகரிப்பு தொடர்பாக நடிகை கெளதமி அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட ரமேஷ் சேனைக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது
Sat, 07 Dec 202404:31 AM IST
- இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கடும் மன உளைச்சலில் இருப்பதால் அவர் இனி சினிமாவில் இருந்து சில காலம் ஓய்வெடுக்க உள்ளதாக தகவல்கள் பரவிய நிலையில், அவரது மகள் கதீஜா மிகக் காட்டமாக பதிலளித்துள்ளார்.
Sat, 07 Dec 202403:52 AM IST
- நடிக்கும்போது எதையும் மனதில் நினைக்கமாட்டேன் என்றும், பிரிவு பற்றி வெளியில் உலாவும் வதந்தி குறித்தும் உடைந்து பேசிய ஜெயம் ரவியின் பேட்டியினைக் காணலாம்.
Sat, 07 Dec 202403:34 AM IST
- புஷ்பா 2 படம் பார்க்க வந்த பெண் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்திற்கு அல்லு அர்ஜூன் நிவாரணத் தொகை அறிவித்தது மட்டுமின்றி, படத்திற்கு புரொமோஷனும் செய்ததால் நெட்டிசன்கள் அவரை விமர்சித்துள்ளனர்.
Sat, 07 Dec 202403:10 AM IST
- கடந்த மாதம் ஓவியாவின் ஆபாச விடியோ ஒன்று வெளியாக படுவைரலான நிலையில், இப்போது அதைபோல் ஜீவா பட நடிகையின் அந்தரங்க விடியோ லீக்காகி இருக்கிறது.
Sat, 07 Dec 202402:28 AM IST
- கத்திக்குத்துடன் காணாமல் போன எழில் மீண்டும் வந்து கயலை சந்தித்து அவரிடம் நடந்த உண்மை அனைத்தையும் கூறுகிறார்.
Sat, 07 Dec 202402:15 AM IST
- டிக்கெட் விலை உயர்த்திய போதிலும் புஷ்பா 2 வசூல் இரண்டாவது நாளிலேயே பாதியாக குறைந்துள்ளது. படத்தின் டிக்கெட் விற்பனை நாடு முழுவதும் உள்ள மல்டிபிளக்ஸில் ஜிஎஸ்டியுடன் சேர்த்து ரூ. 200 முதல் ரூ. 2500 வரை விற்பனை செய்யப்படுகிறது.
Sat, 07 Dec 202402:05 AM IST
- ஆனந்திக்கு உதவியதால், வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட அன்புவை மீண்டும் வீட்டிற்குள் அனுமதிக்குமாறு மகேஷ் அன்பு அம்மாவிடம் கேட்டுக் கொள்கிறார்.
Sat, 07 Dec 202401:04 AM IST
- தமிழ் தொலைக்காட்சிகளில் இன்று டிசம்பர் 7ம் தேதி ஒளிபரப்பாகும் படங்களின் லிஸ்ட் இங்கே தரப்பட்டுள்ளது. உங்களுக்கு விருப்பமான படத்தை பார்த்து என்ஜாய் பண்ணுங்க.