Tamil Cinema News Live : - ‘மாஸ்டர் மேக்கர் வெற்றிமாறன்..சினிமாவின் மீது பேரன்பு கொண்ட உங்களுக்கு’ - விடுதலை 2 - வை விமர்சனம் செய்த தனுஷ்!
HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.
Mon, 23 Dec 202404:50 PM IST
மாஸ்டர் மேக்கர் வெற்றிமாறன் சிறப்பான படைப்பைக்கொடுத்திருக்கிறார். இளையராஜா இசையை மிகவும் ரசித்தேன். எல்லா நடிகர்களும், கலைஞர்களும் அவர்களுக்கு கொடுத்த பாத்திரத்தை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்! - தனுஷ்
Mon, 23 Dec 202403:28 PM IST
அந்தச் சிறுவன் பற்றி ஒவ்வொரு சில மணிநேரங்களுக்கும் ஒருமுறை அப்டேட் கேட்டுட்டு இருக்கேன். அவனுடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுட்டு இருக்கிறதா தகவல் வருகிறது. அது தான் நான் சந்தோஷப்படுற ஒரு விஷயம்.
Mon, 23 Dec 202402:37 PM IST
பட்டாம் பூச்சி வீடியோ, ஸ்ம்மிங் ஃபுல் முன்னால் ஆனந்தமாக இருப்பது, வீடியோ டாய்ஸ்களுடன் கேம் விளையாடும் வீடியோ, காதலனின் புகைப்படம் உள்ளிட்டவை இடம் பெற்று இருக்கிறது.
Mon, 23 Dec 202401:27 PM IST
ஒவ்வொரு இந்தியருக்கும் டிஜிட்டல் இணைப்பு மற்றும் பொழுதுபோக்கில் புரட்சியை இத்திட்டம் ஏற்படுத்துகிறது. புதுச்சேரிக்குப் பிறகு, பீடிவி 2025 ஜனவரியில் உத்தரபிரதேசம், பீகார் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.
Mon, 23 Dec 202412:19 PM IST
கடந்த பாகம் முழுக்க முழுக்க குமரேசன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த சூரியை சுற்றி இருந்த நிலையில், இந்த பாகம் முழுக்க, முழுக்க வாத்தியார் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த விஜய் சேதுபதியை சுற்றி அமைந்திருக்கிறது.
Mon, 23 Dec 202410:39 AM IST
ராமாயணத்தின் தழுவலான நிதேஷ் திவாரியின் படத்தில் சாய் பல்லவி சீதையாக நடிக்கிறார். மேலும் ரன்பீர் கபூர் ராமனாகவும், யஷ் ராவணனாகவும் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
Mon, 23 Dec 202410:34 AM IST
- தோழர் கேகே கதாபாத்திரத்தில் நடிகர் கிஷோர் நடித்து இருந்தார். இதில் மிகவும் நேர்த்தியாகவும், சிறப்பாகவும் பொருந்தி இருந்த கிஷோரின் நடிப்பால் தோழர் கேகேவாகவே அதில் வாழ்ந்தார். இருப்பினும் இந்த கதாபாத்திரத்திற்காக முதலில் தேர்வு செய்யப்பட்டவர் நடிகர் பிரகாஷ் ராஜ் தானாம்.
Mon, 23 Dec 202409:51 AM IST
- சத்தீஸ்கர் மாநிலத்தின் தகுதியான மகளிர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் நடிகை சன்னி லியோன் பெயரில் பஸ்தார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் கடந்த 10 மாதங்களாக பணம் பெற்று வந்தது தெரியவந்துள்ளது.
Mon, 23 Dec 202408:50 AM IST
- சமீபத்தில் திருமானமான கீர்த்தி சுரேஷ், ஆண்டனி தட்டில் ஜோடிக்கு நடிகர் சூரி வாழ்த்து தெரிவித்து போட்டோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.
Mon, 23 Dec 202408:48 AM IST
- தமிழ் சினிமாவின் இயக்குநர் சிகரமும் தனது ஆசானுமான கே. பாலச்சந்தரின் நினைவு நாளை ஒட்டி நடிகர் கமல் ஹாசன் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
Mon, 23 Dec 202407:52 AM IST
- இயக்குநர் ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்தில் நடித்ததற்கு ராம் சரணுக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என புஷ்பா பட இயக்குநர் சுகுமார் பாராட்டி உள்ளார்.
Mon, 23 Dec 202407:42 AM IST
- உத்தரப்பிரேதச மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் காதலன் புஷ்பா 2 படம் பார்க்க அழைத்து செல்லாததால் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Mon, 23 Dec 202407:31 AM IST
- தெலுங்கு சினிமாவில் படம் பண்ண வேண்டும் என பலமுறை முயற்சித்தும் அது கைகூடாமல் போனதாக இயக்குநர் ஷங்கர் கூறியுள்ளார்.
Mon, 23 Dec 202406:16 AM IST
- விஜய் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்றான சிறக்கடிக்க ஆசையின் முக்கியமான தருணமான மனோஜ் மற்றும் ரோகிணி குடும்பத்தினரிடம் மாட்டிக்கொள்ளக் கூடிய நிகழ்வு நடக்கப் போகிறது.
Mon, 23 Dec 202405:28 AM IST
- நடிகை நயன்தாரா பிரபுதேவாவை கல்யாணம் செய்ய நினைத்தது குறித்தும் தற்போது விக்னேஷ் சிவனை கல்யாணம் செய்து கொண்டது குறித்தும் நடிகர் பயில்வான் கருத்து தெரிவித்து பேசியுள்ளார்.
Mon, 23 Dec 202405:25 AM IST
- இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.
Mon, 23 Dec 202404:26 AM IST
- முத்துக்குமரன், தன் பெற்றோர் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். ஒரு பேரிச்சை பழத்தை வைத்து, தன் தாய் மீதான பாசத்தை பகிர்ந்து கொண்டார். இதில், மஞ்சரி, தன்னுடைய மகன் மற்றும் தாய், தன் துணை பற்றி பேசி, உடைந்து அழுதார். அவரின் பேச்சு, போட்டியாளர்களையும் கலங்கும்படியாக இருந்தது
Mon, 23 Dec 202403:51 AM IST
- புஷ்பா 2 திரைப்படம் வெளியான சமயத்தில் ஏற்பட்ட உயிரிழப்பால் அல்லு அர்ஜூன் வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் புஷ்பா 2 படத்தின் வசூல் நிலவரம் என்ன என்பதை பார்க்கலாம்.
Mon, 23 Dec 202403:51 AM IST
- இந்த 2024 ஆம் ஆண்டு மலையாள சினிமா உலகிற்கு ஒரு மாபெரும் வெற்றியான ஆண்டாகும். குறிப்பாக மலையாள இண்டஸ்ட்ரியில் குறைந்த பட்ஜெட் படங்கள் பெரிய அளவில் ஹிட் ஆகியுள்ளன. இந்த வருட வசூலில் டாப்-10 மலையாள படங்கள் எவை என இங்கு பார்ப்போம்.
Mon, 23 Dec 202403:28 AM IST
- விடுதலை பாகம் 2 திரைப்படம் வெளியாகி 3 நாட்கள் ஆன நிலையில், அதன் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
Mon, 23 Dec 202403:06 AM IST
- ஆனந்தியிடமிருந்து அன்பை நிரந்தரமாக பிரிக்க நினைத்து, அன்புவை அவரது உறவுக்கார பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க அவரது அம்மா முடிவு செய்துள்ளார்.
Mon, 23 Dec 202402:41 AM IST
- அல்லு அர்ஜுன் வீட்டில் கல் வீசியதை தொடர்ந்து பதற்றம் நிலவியது. ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டை சிலர் தாக்கி தக்காளிகளை வீசினர். இருப்பினும், இந்த சம்பவத்தில் உஸ்மானியா பல்கலைக் கழகத்தை சேர்ந்த மாணவ அமைப்பினர் தான் ஈடுபட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Mon, 23 Dec 202402:34 AM IST
- தன் தம்பி அன்பிற்கும் வேதவள்ளியின் மகள் ஷாலினிக்கும் விரைவில் கல்யாணம் செய்ய உள்ளதாக கயல், வேதவள்ளி வீட்டிலேயே போய் சொல்லி உள்ளார்.
Mon, 23 Dec 202402:02 AM IST
- தமிழ் தொலைக்காட்சிகளில் இன்று (டிசம்பர்-23)இயக்குனர் சங்கரின் ஜென்டில்மேன் முதல் நடிகர் ரஜினியின் பொல்லாதவன் வரை என பல கிளாசிக் திரைப்படங்கள் இன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. அதன் பட்டியலை இங்கு காண்போம்.
Mon, 23 Dec 202401:56 AM IST
- 90ஸ் சினிமாக்களின் ஐட்டம் டான்ஸர், கவர்ச்சி பாவையாக வலம் வந்தவர் விசித்ரா. அப்போது சில்க் கால்ஷீட் இல்லன்னா என்ன விசித்ரா இருக்கிறார் என சொல்லும் அளவுக்கு ஐட்டம் டான்ஸராக கவர்ச்சி குத்தாட்டம் போட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
Mon, 23 Dec 202401:25 AM IST
- ஏழாவது சீசனின் டைட்டில் வின்னரான அர்ச்சனா குறிப்பிட்ட போட்டியாளரின் ரசிகர்களால் அவதூறான பேச்சுகளுக்கு ஆளாவதாக காவல் நிலையத்தில் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அந்த சீசனின் சக போட்டியாளரான மாயாவிற்கும் அர்ச்சனாவிற்கும் எக்ஸ் தளத்தில் வார்த்தை சண்டை தொடங்கியுள்ளது.