Tamil Cinema News Live : - ‘நான் அவர கல்யாணம் பண்ணாம இருந்திருக்கலாம்.. என்னால எவ்ளோ கஷ்டம்.. ’வருந்திய நயன்தாரா
HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.
Tue, 17 Dec 202404:58 PM IST
- நயன்தாரா விக்னேஷ் சிவனை திருமணம் செய்யாமலே இருந்திருக்கலாம் என பலமுறை யோசித்திருப்பதாக கூறியுள்ளார்.
Tue, 17 Dec 202403:44 PM IST
- பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் தீபக் மீது ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுவதாக நடிகர் சஞ்சீவ் கருத்து தெரிவித்துள்ளார்.
Tue, 17 Dec 202402:04 PM IST
- பிக்பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்ட டாஸ்க்கை விளையாடிக் கொண்டிருந்த ராணவ், அடிபட்டு வலியால் துடித்து கையில் கட்டுடன் வீட்டிற்குள் வந்துள்ளார்.
Tue, 17 Dec 202412:18 PM IST
தனது நிகழ்ச்சியில் அட்லீயை அவமதித்ததாக கடுமையாக ட்ரோல் செய்யப்பட்ட கபில் சர்மா, இப்போது சர்ச்சைக்கு பதிலளித்துள்ளார். அப்படி என்ன சொல்லியிருக்கிறார் கபில்?
Tue, 17 Dec 202411:54 AM IST
- கங்குவா திரைப்படம் தியேட்டரில் வெளியாகி பல விமர்சனங்களை சந்தித்த நிலையில், ஓடிடியில் அதிக பார்வையாளர்களை கடந்த படமாக உருமாறியுள்ளது.
Tue, 17 Dec 202411:43 AM IST
அடுத்த நாள் அவர் சென்ற பொழுது, ராஜா சார் அவரது வீட்டு சாமியாறைக்கு சென்று, அங்கிருந்து ஒரு சுருள் ஒன்றை எடுத்து வந்தார். அந்த சுருளை பிரித்த போது, அதில் கொல்லம் அமிர்தானந்தமயி அவர்களின் பெயர் இருந்தது. - விவேக் மனைவி!
Tue, 17 Dec 202411:13 AM IST
அந்த சமயத்தில் ஷங்கர் சார் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தார். இதற்கிடையே விவேக் சாருக்கு இப்படி ஆனது அவருக்கு பேரிடியாக அமைந்தது. விவேக் சார் இறப்புக்கு வீட்டிற்கு வந்த அவர், எல்லோரையும் போல தைரியமாக இருங்கள் என்று சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றார். - விவேக் மனைவி!
Tue, 17 Dec 202410:37 AM IST
- சூர்யா குடும்பத்தை பிடித்து ஆட்டும் ஏழரை சனியை விலக்க யாகம் நடத்த உள்ளனர் என பத்திரிகையாளர் பயில்வான் கூறியுள்ளார்.
Tue, 17 Dec 202410:08 AM IST
அந்த சமயத்தில் அவர் வெளியூருக்கெல்லாம் ஷூட்டிங் செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது. விமானத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்ற விதிமுறையும் அமலில் இருந்தது. - அருள்செல்வி!
Tue, 17 Dec 202409:19 AM IST
- டிடிவி தினகரன் பங்கேற்ற நிகழ்ச்சியில் கடவுளே அஜித்தே கோஷம் எழுந்தது பூதாகரமான நிலையில், தான் ஒரு அஜித் ரசிகன் என கூறியுள்ளார்.
Tue, 17 Dec 202408:38 AM IST
- வெற்றிமாறன் ஒரு ஆம்பள. அதனால் தான் தைரியமாக தமிழ் தேசிய போராளி பற்றிய கதையை படமாக எடுக்க முடிந்தது என பத்திரிகையாளர் சேகுவேரா கூறியுள்ளார்.
Tue, 17 Dec 202407:52 AM IST
சூலம் படத்திற்கு முன்னதாகவே நிழல்கள் படம் வெளியாகிவிட்டது. அந்தப்படத்தின் மூலம் கிடைத்த வெளிச்சமானது, வைரமுத்துவின் மீது விழ, பத்திரிகைகள் அவரிடம் சென்று பேட்டி கண்டது. அந்த பேட்டியில் வைரமுத்து தன்னை பாரதிராஜா தான் அறிமுகப்படுத்தினார் என்று கூறிவிட்டார். - பாலாஜி
Tue, 17 Dec 202407:47 AM IST
- ராம்சரண் படத்தில் ஏன் நடிக்கவில்லை என்பது குறித்து விஜய் சேதுபதி விளக்கம் அளித்துள்ளார். ராம்சரணின் 16-வது படத்தை, தெலுங்கு இயக்குநர் புச்சிபாபு சனா இயக்குகிறார். இவர், விஜய் சேதுபதியை வைத்து தெலுங்கில் உபென்னா திரைப்படத்தை இயக்கி ஹிட் கொடுத்தவர்.
Tue, 17 Dec 202406:41 AM IST
எனது படத்தின் ப்ரோமோஷனுக்கு நான் வரும் போது இதையெல்லாம் நான் ஏன் பேச வேண்டும்? ஒரு படம் வெற்றியாக இருந்தாலும் தோல்வியாக இருந்தாலும், மக்களுக்கு பிடிக்கும் என்ற நம்பிக்கையில் தான் எடுக்கப்படுகிறது என விஜய்சேதுபதி கூறியுள்ளார்.
Tue, 17 Dec 202405:39 AM IST
நாக சைதன்யா சோபிதா குறித்து சுவாரஸ்யமான கருத்துக்களை கூறினார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், சோபிதாவிடம் தன்னிடம் தெலுங்கில் பேச சொல்வேன் என்றார்.
Tue, 17 Dec 202405:36 AM IST
சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு கடைக்காரர் புடவை கொண்டு வந்திருக்க ரேவதிக்காக ஆளாளுக்கு ஒவ்வொரு புடவையை தேர்வு செய்து சொல்ல அது எதுவும் செட்டாகாத நிலையில் கார்த்திக் ஒரு புடவையை தேர்வு செய்து கொடுக்கிறான். - கார்த்திகை தீபம் அப்டேட்
Tue, 17 Dec 202405:21 AM IST
கயலை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் சரவண வேலு அவளை தேடி சென்னைக்கே வந்துவிட்டார்.
Tue, 17 Dec 202405:02 AM IST
45 நாட்களுக்குள் எப்படியாவது ஆனந்தியின் அக்கா கோகிலாவிற்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்கள் மும்மரமாக ஈடுபட்டு இருக்கிறார்கள்.
Tue, 17 Dec 202404:28 AM IST
- சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் ஸ்ரீலீலா நடிக்க உள்ளார். இதன் மூலம் முதன் முதலில் கோலிவுட்டிலும் அறிமுகமாக உள்ளார்.
Tue, 17 Dec 202403:48 AM IST
- அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் ஃபஹத் பாசில் நடித்த படம் வெளியானதிலிருந்து பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகளை முறியடித்துள்ளது. 12 நாளில் புஷ்பா 2 திரைப்படம் கைப்பற்றிய வசூல் குறித்து இதில் காண்போம்.
Tue, 17 Dec 202403:04 AM IST
Top 10 OTT Movies In India : ரெட் ஒன், கங்குவா, மெக்கானிக் ராக்கி, அக்னி, மட்கா, புஷ்பா தி ரைஸ், சார், ஸ்ட்ரீ 2, வேட்டையன் மற்றும் ப்ளடி பெகர் என அமேசான் பிரைம் வீடியோவில் சிறந்த 10 திரைப்படங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.
Tue, 17 Dec 202401:58 AM IST
- முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரும், அருண் பிரசாத்தின் காதலியுமான நடிகை அர்ச்சனா தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் கோபமாக ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.