Tamil Cinema News Live : - மோகன் பாபு மன்னிப்பு.. பாடகிக்கு பாலியல் தொல்லை.. கொலை வழக்கில் நடிகர், நடிகைக்கு ஜாமீன்! டாப் சினிமா செய்திகள் இன்று
HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.
Fri, 13 Dec 202405:46 PM IST
- மோகன் பாபு மன்னிப்பு, பாடகிக்கு பாலியல் தொல்லை, கொலை வழக்கில் கன்னட நடிகர், நடிகைக்கு ஜாமீன், இளையாஜா பயோபிக் குறித்த அப்டேட் உள்பட டாப் சினிமா செய்திகள் இன்று எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்.
Fri, 13 Dec 202402:57 PM IST
- Allu Arjun: அல்லு அர்ஜுன் மீதான வழக்கில் திடீர் திருப்புமுனையாக உயிரிழந்த ரேவதி என்ற பெண்ணனி கணவர் தேவைப்பட்டால் வழக்கை வாபஸ் பெறுவேன் என தெரிவித்துள்ளது. அத்துடன் அல்லு அர்ஜுன் மீது எந்த தவறும் செய்யவில்லை என்று கூறியுள்ளார்.
Fri, 13 Dec 202401:38 PM IST
- நடிகர் சிம்பு நீதிமன்றத்தில் செலுத்திய ரூ. 1 கோடியை வட்டியுடன் திருப்பி வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேல்ஸ் நிறுவனத்துக்கு இடையிலான பிரச்னை முடிவுக்கு வந்ததை அடுத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
Fri, 13 Dec 202412:21 PM IST
- 14 நாள்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டில் அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Fri, 13 Dec 202411:54 AM IST
- சந்தியா திரையரங்கில் புஷ்பா 2 ப்ரீமியர் ஷோ பார்க்க வந்த பெண் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் தெலுங்கு சினிமாவின் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனுக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Fri, 13 Dec 202411:21 AM IST
- Allu Arjun Pushpa 2 Shirt: கைதின்போது புஷ்பா 2 டிசர்டை அல்லு அர்ஜுன் அணிந்திருந்தத நிலையில், இப்படிப்பட்ட சூழ்நிலையில் புரொமோஷன் வெறி அவருக்கு அடங்கவில்லை என ரசிகர்கள் பலரும் கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.
Fri, 13 Dec 202410:23 AM IST
- உலகத்தைக் காக்கும் ஈசன் புதிய அவதாரம் எடுத்து, பார்வதிக்கு நேரும் துன்பத்தை சிவன் எப்படி போக்கினார் என்பது சிவசக்தி திருவிளையாடல் வரும் வாரம் எபிசோடில் இடம்பெறவுள்ளது.
Fri, 13 Dec 202410:19 AM IST
எனக்கு வரலட்சுமி என்ற ஒரு கலைஞர்தான் மாசாணி அம்மனை அறிமுகப்படுத்தினார். இவன் பிறந்த நேரம். அவனுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அப்போது நீ அவளிடம் சென்று கேள். மாசாணி அம்மன் உனக்குத் தேவையானவற்றை செய்து கொடுப்பார் என்று கூறினார்.
Fri, 13 Dec 202408:59 AM IST
- சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட நெரிசல் பெண் உயிரிழந்த வழக்கில் டோலிவுட் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டுள்ளதாக வதந்தி பரவி வருகிறது. போலீசார் அவரை கைது செய்து சிக்கடப்பள்ளி காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றதாக தகவல்கள் வெளியான நிலையில், அல்லு அர்ஜுன் குழுவினர் இதனை மறுத்துள்ளனர்.
Fri, 13 Dec 202408:41 AM IST
நேற்றைய எபிசோடில், ரேவதி கண்டிஷன் உடன் கல்யாணத்துக்கு சம்மதம் சொன்ன நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
Fri, 13 Dec 202407:35 AM IST
Fri, 13 Dec 202407:13 AM IST
வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு அது நன்றாக தெரியும். என்னுடைய அப்பாதான் இவ்வளவு பெரிய இடத்தை வாங்கி போடச்சொன்னார். - மாளவிகா அவினாஷ்
Fri, 13 Dec 202407:04 AM IST
- சிங்கம் எப்போதும் சிங்கம் தான்.. ஒரே நாளில் தி கோட் திரைப்படம் செய்த இரண்டு சாதனை.. என்ன தெரியுமா?
Fri, 13 Dec 202405:30 AM IST
- பிரியப்பட்ட நாட்டுக்காரே.. சிம்பொனி நிறைவு செய்ததை மலையாளத்தில் பேசி அறிவித்த இளையராஜாவின் செய்தியைப் பற்றிப் பார்க்கலாம்.
Fri, 13 Dec 202405:02 AM IST
Fri, 13 Dec 202404:44 AM IST
- கன்னட மக்களுக்கு சொத்துக்களை எழுதிவைத்த குடும்பம்.. சிவராஜ்குமாரின் நிலை.. விஜய் இதை செய்யலாம்.. பத்திரிகையாளர் சங்கர்
Fri, 13 Dec 202403:27 AM IST
செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 14-வது சுற்றில் சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி பட்டம் வென்று இருக்கிறார் இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ்.
Fri, 13 Dec 202403:00 AM IST
- ஜுரம்னா கூட ரஜினி சார் சூட்டிங் வந்திடுவார்.. பாக்யராஜ் சார் ஆபிஸில் நடக்கும் டிஸ்கசன் என இயக்குநர் செந்தில்நாதன் பேட்டி அளித்துள்ளார்.
Fri, 13 Dec 202402:05 AM IST
- ஆலங்குடி சோமு எழுதிய இறந்தவனை சுமந்தவனும் இறந்திட்டான் - அதை இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான் என்ற பாடல் உருவான கதை குறித்து பார்க்கலாம்.
Fri, 13 Dec 202401:15 AM IST
- ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தளிக்கும் நடிகையாக மட்டுமல்லாமல் சிறந்த ஃபேஷன் ஐகானகாவும் ஜொலித்து வரும் தமிழ்நாட்டு பெண்ணாக ரெஜினா காசண்ட்ரா இருந்து வருகிறார். இவரது கண்ணக்குழி சிரிப்புக்கு என்ற தனி ரசிகர் கூட்டமும் இருக்கிறது.