Tamil Cinema News Live : - சமந்தாவுக்கு புதிய பார்ட்னர்.. ரஜினிக்கு 3.5 உயர சிலையுடன் கோயில், சீனாவில் கலக்கும் மகராஜா! டாப் சினிமா செய்திகள் இன்று
HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.
Wed, 11 Dec 202406:20 PM IST
- சமந்தாவுக்கு புதிய பார்ட்னர், ரஜினிக்கு 3.5 உயர சிலையில் கோயில், சீனாவில் கலக்கும் மகராஜா, 20 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டும் ஏ சான்றிதழ் பெற்ற படம் உள்பட டாப் சினிமா செய்திகள் இன்று எவை என்பதை பார்க்கலாம்
Wed, 11 Dec 202404:29 PM IST
- Samantha Instagram: அடுத்த ஆண்டில் நேர்மையான, அன்பான பார்ட்னர் அமையும் என்கிற ஜோதிட கணிப்பை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார் சமந்தா. பாலிவுட் நடிகருடன் அவர் காதலில் விழுந்திருப்பதாகவும் தகவல்கள் உலா வருகின்றன.
Wed, 11 Dec 202402:25 PM IST
- திருமண வைபோகம் டிசம்பர் 10ஆம் தேதியே தொடங்கிய நிலையில், மணப்பெண் கீர்த்தி சுரேஷ் இன்ஸ்டாவில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். மணப்பெண்ணாக மாறுவதற்கு முன் மேக்கப்புக்கு தயாராக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
Wed, 11 Dec 202412:21 PM IST
- விமான டிக்கெட் கொடுத்து வரவழைத்து பாலிவுட் நடிகரை கடத்திய கும்பல், அவரை 12 மணி நேரம் வரை டார்ச்சர் செய்துள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. சினிமா பாணியில் கடத்தல் கும்பலிடமிருந்து எஸ்கேப் ஆகியுள்ளார் பாதிக்கப்பட்ட நடிகரான முஷ்டாக் கான்.
Wed, 11 Dec 202410:30 AM IST
- வைகுந்தத்தில் நாராயணர் - லட்சுமி விவாகம் நடைபெற இருக்க, அதை தடுக்க முயற்சிக்கிறான் அசுரன் ஹயக்ரீவன். இதன் பின்னர் நடந்தது என்ன என்பதை காட்டும் விதமாக லட்சுமி நாராயணா நமோ நமஹ இந்த வார எபிசோட் காட்சிகள் இடம்பெறவுள்ளன.
Wed, 11 Dec 202409:10 AM IST
- மகா அசுரன் vs மோகன் இடையே மோதல் நடக்க, மோகினியை காப்பாற்றும் முயற்சியில் நடக்கப்போவது என்ன? என்கிற பரபரப்பு மிகுந்த காட்சிகளுடன் மோகினி ஆட்டம் ஆரம்பம் இந்த வார எபிசோட் காட்சிகள் இடம்பெறவுள்ளன.
Wed, 11 Dec 202409:04 AM IST
- இளையராஜா பயோபிக் திரைப்படம் கருத்து வேறுபாடு காரணமாக ட்ராப் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Wed, 11 Dec 202408:15 AM IST
- லக்கி பாஸ்கர் திரைப்படம் ஓடிடியில் வெளியான பின், அப்படத்தின் வசனங்கள் பல இண்டெர் நெட் முழுவதும் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.
Wed, 11 Dec 202408:02 AM IST
- நடிகர் மோகன் பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயர் ரத்த அழுத்தம் காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
Wed, 11 Dec 202407:26 AM IST
- கணவரிடமிருந்து விவாகரத்து வேண்டும் என நினைக்கும் பெண்கள் எல்லாம் ஒருமுறை இந்தப் படத்தை மட்டும் பார்க்க வேண்டும் என பயில்வான் ரங்கநாதன் அறிவுரை வழங்கி உள்ளார்.
Wed, 11 Dec 202407:09 AM IST
இந்த வருடத்தில் கூகுளில் அதிக நபர்கள் செர்ச் செய்த முதல் 10 திரைப்படங்கள் பட்டியல் குறித்து பார்க்கலாம்.
Wed, 11 Dec 202406:56 AM IST
- பிக் பாஸ் வீட்டில் தற்போது 15 போட்டியாளர்கள் எஞ்சி உள்ளனர். நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில், திடீர் ட்விஸ்டாக இந்த வாரம் மிட் வீக் எவிக்ஷன் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Wed, 11 Dec 202406:07 AM IST
ஆனந்தம் படத்தில் நடித்த பாவா படப்பிடிப்பு தளத்தில் அப்பாஸ் செய்த விஷயத்தைப் பற்றி பேசி உள்ளார்.
Wed, 11 Dec 202405:52 AM IST
- புஷ்பா பட விழாக்களில் குவியும் ரசிகர்களை நடிகர் சித்தார்த் கிண்டல் செய்யும் தொனியில் பேசிய வீடியோ தற்போது வைரலாகிறது.
Wed, 11 Dec 202405:49 AM IST
மகாராஜா படம் சீனா மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று, வசூலிலும் நல்லாவே கல்லா கட்டி வருகின்றது. சீனாவில் மக்கள் தந்த வரவேற்பினால் இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.
Wed, 11 Dec 202404:58 AM IST
- நாக சைதன்யாவை கரம்பிடிக்கும் முன்னதாக, கல்யாண குஷியில் நடிகை சோபிதா துலிபாலா நடனமாடிய வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.
Wed, 11 Dec 202404:09 AM IST
- மகாகவி பாரதியாரின் பிறந்தநாளை ஒட்டி பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Wed, 11 Dec 202403:11 AM IST
- அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான புஷ்பா 2 தி ரூல் திரைப்படத்தின் 6ம் நாள் வசூல் விவரங்கள் இதோ..
Wed, 11 Dec 202403:09 AM IST
- லக்கி பாஸ்கர் படம் பார்த்து மாணவர்கள் நான்கு பேர் மாயமானது பற்றி ஹாஸ்டல் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் நான்கு மாணவர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Wed, 11 Dec 202402:42 AM IST
- கிராமத்தில் இருந்து வந்த ஆனந்திக்கு கார்மெண்ட்ஸ் துணிகளை தைக்க தெரியாது என கருணாகரன் கூறியதால் ஆத்திரமடைந்த ஆனந்தி வேகவேகமாக துணிகளை தைத்து வருகிறாள்.
Wed, 11 Dec 202402:25 AM IST
- ரசிகர்களுக்கு நடிகர் அஜித்குமார் வேண்டுகோள், மன்சூர் அலிகான் மகன் கைது விவகாரம்புதிதாக கைது செய்யப்பட்ட 2 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல் என இன்றைய டாப் 10 சினிமா செய்திகளை பார்க்கலாம்.
Wed, 11 Dec 202401:55 AM IST
- செய்தி சேகரிப்பதற்காக நடிகர் மோகன் பாபு வீட்டுக்கு சென்ற செய்தியாளர்களை விரட்டி விரட்டி கடுமையாக தாக்கிய மோகன் பாபு மற்றும் அவருடைய பாதுகாவலர்கள்.
Wed, 11 Dec 202401:34 AM IST
- கயலை என்னிடமிருந்து கடவுளால் கூட பிரிக்க முடியாது என நினைத்தேன். ஆனால் நான் கடவுளாக நினைக்கும் என் அம்மா எங்களைப் பிரிக்க இப்படி எல்லாம் செய்வார்கள் என நினைக்கவில்லை என எழில் ஆத்திரத்தில் கத்துகிறான்.
Wed, 11 Dec 202412:50 AM IST
- இயக்குனர் பீம் சிங் இயக்கத்தில், 1965-ஆம் ஆண்டு வெளியான பழனி திரைப்படத்தில் இடம்பெற்ற அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே பாடல் உருவான கதை குறித்து பார்க்கலாம்.