ஷாக்.. மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை தற்கொலை.. இதுதான் காரணமா? போலீசார் தீவிர விசாரணை!
மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்ட ஒழுங்கு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து ஒய்வுபெற்ற காமராஜ், தனது மகள் சித்ரா இறந்ததால் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. திருவான்மியூரில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சித்ராவின் தந்தை காமராஜ் மன உளைச்சலில் இருந்த நிலையில் இன்று காலை சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள அவருடைய வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். உடலை கைப்பற்றிய திருவான்மியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மன உளைச்சலில் இருந்த காமராஜ்
சித்ராவின் தந்தையான காமராஜ் அபிராமபுரம் காவல் உதவி ஆய்வாளராக இருந்து கடந்த 2019 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார் சென்னை திருவான்மியூர் ராஜாஜி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை அவரது வீட்டுக்கு வந்த உறவினர்கள் வீட்டின் கதவை தட்டியுள்ளனர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் கதவை திறக்கவில்லை. நீண்ட நேரம் திறக்காதால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை உடைத்து பார்த்த போது மின்விசிறியில் காமராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இந்த சம்பவம் தொடர்பாக திருவான்மியூர் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சின்னத்திரை நடிகையாக இருந்த சித்ரா ஏற்கனவே தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவருடைய தந்தை அதேமாதிரி தற்கொலை செய்து உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீரியல் நடிகை சித்ரா
சீரியல் நடிகை சித்ரா 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி , தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு காரணம் கணவர் ஹேமந்த்தும், ஹேமந்தின் நண்பரான இமானுவேல் என பரபரப்பான குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனையடுத்து விசாரணை நடைபெற்று ஹேமந்த் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
சித்ராவை, ஹேம்நாத், அடித்து துன்புறுத்தியதாகவும் அது தாள முடியாமல் சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.சித்ராவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரின் தந்தை வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை, திருவள்ளூர் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் நிரபராதி என்று திருவள்ளூர் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி ரேவதி தீர்ப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வழங்கினார்.
இந்நிலையில் தற்போது மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்