Actress Shobana: கல்யாணம் குடும்பம்ன்னு ஆசப்பட்டவ.. இந்த முடிவை எதிர்பாக்கல.. நடிகையின் அக்கா குமுறல்..
Actress Shobana: கல்யாணம், குடும்பம்ன்னு வாழ ஆசைப்பட்ட என் தங்கை இப்படி வாழ்க்கையை முடித்துக் கொள்வாள் என நினைக்கவில்லை என்று மறைந்த நடிகை ஷோபனாவின் அக்கா பேசியுள்ளார்.

Actress Shobana: மீண்டும் மீண்டும் சிரிப்பு, லொல்லு சபா, சில்லுனு ஒரு காதல், சிறுத்தை என தொட்ட இடமெல்லாம் ஹிட் கொடுத்த நடிகை தான் ஷோபனா. இவரை ஷோபனா எனத் தெரிந்தவர்களைக் காட்டிலும் செல்லத்தாயி எனச் சொன்னால் தான் தெரியும். அந்த அளவுக்கு அவரது கேரக்டர் பேசப்பட்டது.
அப்படிப்பட்ட நடிகை, தற்கொலை செய்து கொண்டார் என்றால் யாராலும் அவ்வளவு எளிதில் நம்ப முடியாது. அவர் தற்கொலை செய்யும் எண்ணத்திற்கு செல்ல காரணம் என்ன, அவர் வாழ்வில் நடந்தது என்ன என்பது பற்றி அவரது அக்கா அவள் விகடன் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
மீண்டு வர முடியல
அந்தப் பேட்டியில், "இன்னும் என்னோட தங்கை மறைவிலிருந்து என்னால மீண்டு வர முடியல. எனக்கு இருந்தது அவ மட்டும் தான். அவகிட்ட தான் எல்லாம் ஷேர் பண்ணுவேன். எங்க அம்மா அப்பா 2 பேருமே டிராமா ஆர்டிஸ்ட். எங்க அம்மா 5 வயசுலயே நடிக்க வந்துட்டாங்க. அவங்க ரொம்ப ஸ்ட்ரிட். பல அவார்டு எல்லாம் வாங்கிருக்காங்க. அவங்களோட கேரக்டர் அப்படியே என் தங்கை கிட்ட இருந்தது.
எல்லாம் உல்டா ஆச்சு
முதல்ல நான் தான் நடிக்க வந்தேன். எனக்கு சினிமாவுல பெரிய ஆளா வரணும்ன்னு ஆசை. ஆனா, என் தங்கைக்கு கல்யாணம் குடும்பம்ன்னு செட்டில் ஆகணும்ன்னு ஆசை. ஆனா, அது எல்லாம் அப்படியே உல்ட்டா ஆகிடுச்சு.
ஷோபனா முதல்ல சன் டிவியில தான் புரோகிராம் பண்ணிட்டு இருந்தாங்க. கவிதாலயா தான் அவங்களுக்கு மெயின். அதுல தான் ப்ரோகிராம் பண்ணிட்டு இருந்தாங்க. அப்போ, தான் சன் டிவி வெண்ணிற ஆடை மூர்த்தி சாரோட சேர்ந்து மீண்டும் மீண்டும் சிரிப்புல வாய்ப்பு கொடுத்தாங்க. இது பலரையும் ரசிக்க வச்சது.
ரொம்ப ஜாலியா இருப்பா
அப்புறம் அந்த சீரியல்ல ஒவ்வொரு ஆளா மாறி மாறி வர மக்கள் ம்ததில கொஞ்சம் சலிப்பு ஏற்பட்டது. அந்த சமயத்துல தான் லொல்லு சபா டீம் சோபாவ கூப்டாங்க. அந்த செட் அவளுக்கு இன்னொரு குடும்பம் மாதிரி. எல்லாரோடவும் அவ ரொம்ப ஜாலியா இருப்பா. அங்க தான் யோகி பாபு, சந்தானம் எல்லாம் இருந்தாங்க. யோகி பாபு வளர்ச்சியில அவ பெரிய நம்பிக்கை வச்சிருந்தா, அத அவரே பேட்டியலேயும் சொல்லிருந்தாங்க.
வடவேலு சாரோட ஜோடி
சில்லுனு ஒரு காதல் படத்துல வடிவேலு சாரோட பேர்ன்னு சொல்லும் போது அவங்க தயங்குனாங்க, அப்புறம் டைரக்டர் வந்து பேசி சமாதானம் செஞ்சதுக்கு அப்புறம் தான் நடிச்சாங்க.
அந்தப் படத்துல அவங்களோட கேரக்டர் ரொம்ப ரீச் ஆச்சு. உண்மையா படத்துல அந்த டயலாக்கே இல்ல,. இது வடிவேல் சாரும், ஷோபாவும் சேர்ந்து பண்ண காமெடி.
வாய்ப்பு வந்தும் முடியல
கோவை சரளாக்கு ஷோபான்னா ரொம்ப பிடிக்கும். தன்ன மாதிரி வருவான்னு ஆசைப்பட்டதா சொன்னாங்க. அதுக்கு அப்புறம் இவளோட நடிப்பு பிடிச்சு போய் ராகவா லாரன்ஸ் சார் காஞ்சனா படத்துல அண்ணி கேரக்டர் நடிக்க கூட்படாங்க. அவங்களால வர முடியாத காரணத்தால தேவதர்ஷினி பண்ணுனாங்க. அந்த சமயத்துல தான் இவங்ரளுக்கு ஹெஸ்த் இஸ்யூஸ் வந்தது. அதன் பின் தான் அவள் இறந்தாள்" என்றார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்