நான் கான்களுக்கெல்லாம் கான்.. நூற்றாண்டுக்கே சிறந்தவன்.. சாதனை மேல் சாதனை செய்த அந்த நடிகர் யார் தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  நான் கான்களுக்கெல்லாம் கான்.. நூற்றாண்டுக்கே சிறந்தவன்.. சாதனை மேல் சாதனை செய்த அந்த நடிகர் யார் தெரியுமா?

நான் கான்களுக்கெல்லாம் கான்.. நூற்றாண்டுக்கே சிறந்தவன்.. சாதனை மேல் சாதனை செய்த அந்த நடிகர் யார் தெரியுமா?

Malavica Natarajan HT Tamil
Jan 07, 2025 07:30 AM IST

பாலிவுட்டை ஆட்சி செய்துவரும் 3 கான் நடிகர்களை பின்னுக்குத் தள்ளி பல சம்பவங்களை செய்துள்ள நடிகரைப் பற்றி தெரியுமா உங்களுக்கு? இன்று அவரது பிறந்தநாள்.

நான் கான்களுக்கெல்லாம் கான்.. நூற்றாண்டுக்கே சிறந்தவன்.. சாதனை மேல் சாதனை செய்த அந்த நடிகர் யார் தெரியுமா?
நான் கான்களுக்கெல்லாம் கான்.. நூற்றாண்டுக்கே சிறந்தவன்.. சாதனை மேல் சாதனை செய்த அந்த நடிகர் யார் தெரியுமா?

இர்பான் கான்

ஆனால், அந்த துயரைத் தாங்கிக் கொண்டு நமக்கு ஒரு கதவு மூடப்பட்டு மறு கதவு திறக்கப்ட்டிருக்கிறது என்பதை அறிந்து நடப்பவர் சிலரே. அப்படி சினிமாவில் தனக்காக திற்க்கப்பட்ட கதவை கெட்டியாக பிடித்துக் கொண்டு ஒவ்வொரு படியாக முன்னேறி 21ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த இந்திய நடிகராக முன்னேறியவர் தான் இர்பான் கான்.

நடிப்பில் திரும்பிய கவனம்

ராஜஸ்தானை சேர்ந்த இர்பான் கானின் குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்ததால், கிரிக்கெட் உலகில் அவருக்காக காத்திருந்த இடத்தை பிடிக்க முடியாமல் போனது. பின் அதை எண்ணி எண்ணி வாழ்க்கையை அழித்துக் கொள்ளாமல் தன் கவனத்தை நாடகம் நடிப்பதன் பக்கம் திருப்பினார்.

அடித்தளம் போட்ட படம்

பின், அதனை முறையாக கற்க வேண்டும் என்பதற்காக கல்லூரியில் சேர்ந்து படித்து முடித்து சலாம் பாம்பே எனும் திரைப்படத்தில் நடித்தார். 1987ம் ஆண்டு வெளியான இந்தப் படம் தான் இர்பான் கானின் சினிமா வாழ்க்கைக்கு அடித்தளம்.

முதலில் இந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருந்த இர்பானை தவிர்க்க முடியாத சில காரணத்திற்காக துணை கதாப்பாத்திரமாக மாற்றப்பட்டாராம். இதனால் மனமுடைந்த இர்பான் விடிய விடிய அழுதுள்ளார். பின், சினிமாவில் எந்த கதாப்பாத்திரமானாலும் அதில் தன் திறமையை எடுத்துக் காட்டி நடிக்க வேண்டும் என முடிவு செய்தார்.

திறமைக்கு சான்றான படங்கள்

அதன் விளைவாகத் தான், மக்பூல் மற்றும் ஸ்லம்டாக் மில்லியனர் முதல் தி நேம்சேக், லைஃப் இன் எ மெட்ரோ, தி லஞ்ச்பாக்ஸ், லைஃப் ஆப் பை மற்றும் ஜுராசிக் வேர்ல்ட் வரை, அவரது திரைப்படவியல் அவரது அசாதாரண திறமைக்கு சான்றாக நிற்கிறது

பின் தொலைக்காட்சி தொடர்கள், மேடை நாடகம் என கிடைக்கும் அனைத்து வேலைகளையும் செய்தார். ஒவ்வொரு பாத்திரத்தையும் அதன் ஆழம் அறிந்து கொண்டு நடிக்கும் அவரது குறிப்பிடத்தக்க திறனுக்காக அழர் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களில் ஒரு சிறப்பு இடத்தைப் பெற்றார்.

விருதுகள்

இதையடுத்து அவரது படங்கள் எல்லாம் ஆஸ்கார் பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றன. மேலும், இந்தியாவில் சினிமா துறைக்கு அளிக்கப்படும் உரிய விருதான் பத்மஸ்ரீ விருது, தேசிய விருதுகளை வென்றார். மேலும் பாலிவுட்டில் மட்டும் நடித்துக் கொண்டிருந்தவரை ஹாலிவுட் சினிமாக்கள் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றது.

நோலனுக்கே நோ சொன்ன நடிகர்

அதிலும் குறிப்பாக பலரது இதயத்தில் இடம் பிடித்திருக்கும் கிறிஸ்டோபர் நோலன் பலமுறை அழைத்தும், தான் ஒப்புக்கொன்ட படங்களை முடிக்காமல் நடிக்க வரமாட்டேன் என்ற முடிவில் தீர்க்கமாக இருந்தார்.

இவரது அசாத்திய திறைமையால், இந்திய சினிமாவில் 20 ஆண்டுக்கும் மேலாக அமைதியாக தன் ஆட்டத்தை தனித்து விளையாடி வந்தார். கோலிவுட்டின் பேர் சொல்லும் 3 கான்களான ஷாருக் கான், சல்மான் கான், ஆமிர் கான்களை நடிப்பால் புறம் தள்ளி முன்னேறிக் கொண்டிருந்தார்.

எடுத்துக்காட்டாய் மாறிய நடிகர்

இதனால், அவர் திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என வெறியோடு காத்திருந்த பல நடிகர்களுக்கு ஊக்கம் அளிப்பவராக மாறினார். எடுத்துக்காட்டாக தென்னிந்திய ரசிகர்களால் கொண்டாடப்படும் தனுஷ் மற்றும் பகத் பாசில் போன்றோருக்கு குருவாக அமைந்தவர் இர்பான் கான் தான். இவரை பின்பற்றியே தான் நடிக்க வந்ததாக பகத் பாசில் கூறியும் இருக்கிறார்.

இப்படி மக்கள் மனங்களை வென்ற மகா நடிகன் இர்பான், குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

இந்நிலையில், அவரின் தனது 57வது பிறந்தநாளை தற்போது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்,

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.