Ajith Kumar: 'அஜித்துக்காக மாறிய கதை.. வாலி படத்தின் கதை உருவான கதை..' மறைந்த நடிகர் பகிர்ந்த தகவல்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ajith Kumar: 'அஜித்துக்காக மாறிய கதை.. வாலி படத்தின் கதை உருவான கதை..' மறைந்த நடிகர் பகிர்ந்த தகவல்

Ajith Kumar: 'அஜித்துக்காக மாறிய கதை.. வாலி படத்தின் கதை உருவான கதை..' மறைந்த நடிகர் பகிர்ந்த தகவல்

Malavica Natarajan HT Tamil
Published Feb 08, 2025 08:57 PM IST

Ajith Kumar: அஜித் குமார் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான வாலி படத்தின் கதை உருவான விதம் குறித்து மறைந்த நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். அதனை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்,

Ajith Kumar: 'அஜித்துக்காக மாறிய கதை.. வாலி படத்தின் கதை உருவான கதை..' மறைந்த நடிகர் பகிர்ந்த தகவல்
Ajith Kumar: 'அஜித்துக்காக மாறிய கதை.. வாலி படத்தின் கதை உருவான கதை..' மறைந்த நடிகர் பகிர்ந்த தகவல்

இன்று உலகம் முழுவதும் தனக்கான ரசிகர்களை வைத்திருக்கும் அஜித்திற்கு இந்த வாலி படம் எப்படி கிடைத்தது. இயக்குநருக்கு வாய்ப்பு கொடுத்து தூக்கி விட்டு, இன்று தென்னிந்திய சினிமாவின் மாபெரும் ஆளுமையாக எஸ்.ஜே.சூர்யா இருக்க காரணமாக அமைந்தது எப்படி என்பதை மறைந்த நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து சில மாதத்திற்கு முன் டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருப்பார்,

பாதியில ஓடுறது தான் குவாலிட்டி

அதில், " ஆசை படத்துல கடைசி அசிஸ்டண்ட்டா சேர்ந்தவரு தான் எஸ்.ஜே.சூர்யா. இன்னைக்கும் ஆசை படத்தோட கார்ட்ல எஸ்.ஜே. சூர்யா பேர் கடைசியா இருக்கும். அவரு ஒரு படமும் ஒர்க் பண்ணல. பாதி படம் தான் பண்ணிருப்பாரு. அதுக்கு அப்புறம் லிவிங்ஸ்டன் சுந்தர புருஷன் படம் பண்றாரு அங்க போயிட்டாரு. ரொம்ப கஷ்டப்பட்டு ஆசை படத்துல வாய்ப்பு வாங்கி படம் முடியுறதுக்கு முன்னேயே அங்கிருந்து ஓடிட்டாரு.

ஆனா, சுந்தர புருஷன் படத்துல பாட்டு எல்லாம் எழுதுனாரு. அப்படி இருந்தும் அந்த படத்துலயும் பாதியிலயே ஓடிப் போயிட்டாரு. இது தான் டைரக்டருக்கான குவாலிட்டின்னு நான் நெனைக்குறேன். ஒரு படம் கூட முழுசா பண்ணாம ஓடி போனா தான் அவருக்கு வாய்ப்பு வரும் போல. இப்படி ஓடிப் போய் ஜேடி & ஜெர்ரி எடுத்த உல்லாசம் படத்துல போய் சேருராரு. இது அமிதாப் பச்சன் புரொடக்ஷன் கம்பெனி. அங்க போயும் ரொம்ப டெடிகேட்டிவ்வா வொர்க் பண்ணாரு. அவரு அங்கன்னு இல்ல, ஆசை படத்துல இருந்தே ரொம்ப டெடிகேட்டிவ்வா தான் வொர்க் பண்ணுவாரு.

அர்ப்பணிப்பான ஆள்

அர்ப்பணிப்புன்னா அப்படி ஒரு அர்ப்பணிப்பு. கிழக்கு சீமையிலே படத்துல கூட டைரக்டர் ஆபிஸ்லயே தான் இருப்பாரு. வத்தலகுண்டுல ஷீட்டிங் எல்லாம் போயிட்டு இருந்தப்போ குஷி படத்தோட ஸ்கிரிப்ட் எல்லாம் அங்க தான் கெடந்தது. வாலி படம் பண்ணுனதுக்கு அப்புறம் டைரக்டர்கிட்ட அழுது தான் குஷி ஸ்கிரிப்ட் எல்லாம் வாங்கிட்டு வந்தாரு.

அஜித் கேட்ட கேள்வி

ஆளு ரொம்ப சிம்பிளானவரு. தன்னோட உடல், பொருள், ஆவி எல்லாத்தையும் வேலையில தான் போடுவாரு. அத அஜித் உன்னிப்பா கவனிச்சாரு. ஆசை, உல்லாசம்ன்னு ரெண்டு படத்துல எஸ்.ஜே. சூர்யாவோட வேலைய அஜித் கவனிச்சிட்டே இருக்காரு.

அப்போ தான் அஜித் எஸ்.ஜே. சூர்யாவ கூப்பிட்டு நீ எப்போ டைரக்டரா ஆகப்போறன்னு கேட்ருக்காரு. எனக்கு தெரியல சார். நீங்க எல்லாம் ஹீரோவா நடிச்சா சீக்கிரம் டைரக்டர் ஆகிடலாம்ன்னு சொல்றாரு. உடனே அஜித் நான் நடிக்குறேன். நீ பண்ணுன்னு சொல்லிட்டாரு.

அஜித்தின் ஆசையால் மாறிய கதை

அப்புறம் கதை எல்லாம் ரெடி பண்ணிட்டியான்னு கேட்ருக்காரு. ஒரு கதை இருக்கு சார்ன்னு சொல்றாரு எஸ்.ஜே. சூர்யா. ஆனா அந்த கதை அஜித் சாருக்கு சூட் ஆகல. வேற ஏதாவது ஒரு கதை சொல்லுன்னு சொல்றாரு. அந்த சமயத்துல தான் உல்லாசம் படம் மாதிரியே டபுள் ஹீரோ கதை ஒன்னு அஜித் சாருக்கு சொல்லிருக்காரு. அப்போ நடந்த டிஸ்கஷன்ல டபுள் ஹீரோவ சிங்கிள் ஹீரோவா மாத்தி, டூயல் ரோல் பண்ணிக்கலாம்ன்னு அஜித் சார் சொல்றாரு. எனக்கு டூயல் ரோல் பண்ணனும்ன்னு ஆசைனும் சொல்றாரு.

வாலி படத்தின் அடித்தளம்

அப்டி அவரு டூயல் ரோல் கேட்டதால வந்தது தான் வாலி படத்துக்கான அடித்தளம். அப்புறம் கதை கொஞ்ச கொஞ்சமா கிரியேட் ஆகுது. அண்ணன் தம்பி ரெண்டு பேரு. பாக்க ஒரே மாதிரி இருப்பாங்க. ஆனா இங்க ஒரு டிராமா கிரியேட் ஆகலயேன்னு எஸ்.ஜே. சூர்யா யோசிச்சிட்டே இருக்காரு. அப்போ நடந்த டிஸ்கஷன்ல தான் சூர்யாவோட பிரண்ட் செந்தில் ஒரு ஐடியா தராரு. அப்புறம் ரெண்டு பேரும் மாறி மாறி கதைய டிஸ்கஷ் பண்ண, ஒருத்தர வில்லனாக்கிடலாம்ன்னு முடிவு பண்றாங்க.

இதுக்கு அப்புறம் கதை கொட்டுது. அண்ணன் கெட்டவன், தம்பி நல்லவன், ஆனாலும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு இது எல்லாம் பத்தல.

கேரக்டரை செதுக்கிய எஸ்.ஜே.சூர்யா

என்ன பண்ணலாம் என்ன பண்ணலாம்ன்னு யோசிச்சிட்டே இருக்கும் போது, அண்ணன் கெட்டவன் இருக்கான் இல்ல அவன் ஊமை அப்படின்னு சொல்லிட்டாரு. அவனுக்கு காதும் கேக்காது. யாராவது பேசுனா அவங்க என்ன பேசுறாங்கன்னு புரிஞ்சிப்பான். பயங்கர திறமைசாலின்னு சீன் ரெடி பண்றாங்க. அண்ணன் பாத்து இம்ப்ரஸ் ஆன பொண்ண தம்பி கொண்டு வந்து நிப்பாட்டுறான். அதுனால அவனுக்குள்ள உறங்கிட்டு இருந்த மிருகம் வெளிய வருது. அப்படி அமைஞ்சது தான் வாலி படத்தோட கதை" என நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து பேசியிருக்கிறார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.