Rajinikanth: ‘அந்த காந்தம் இன்று இரவு வரும்’ - ரஜினிகாந்த் போஸ்டரை பகிர்ந்த மகள்..வைரலாகும் பதிவு!
லால் சலாம் படத்தின் அப்டேட் இன்று வெளியாக இருப்பதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்து இருக்கிறார்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கி வரும் மூன்றாவது படம் லால் சலாம். விஷ்ணு விஷால், விக்ராந்த் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப் படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.
ஏற்கனவே தனது இளைய மகள் செளந்தர்யா இயக்கிய கோச்சடையான் படத்தில் நடித்த ரஜினிகாந்த், தற்போது மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கும் படத்தில் நடித்து இருக்கிறார் என்பது இதில் குறிப்பிடத்தக்கது. இந்தத்திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு 34 நாட்கள் நடந்து முடிந்தது. இது தொடர்பான வீடியோவை ஐஸ்வர்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார்.
லைகா புரொடக்ஷன் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த நிலையில் இந்தத்திரைப்படத்தின் அப்டேட்டானது இன்று இரவு வெளியாகும் என்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார் ஐஸ்வர்யா. இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் இன்ஸ்டாகிராம் பதிவில், “ தி மேன், தி மனிதன், அந்த காந்த சக்தி இன்று இரவு வருகிறது” என்று பதிவிட்டு இருக்கிறார்.
