Lagaan: சூட்டிங் ஸ்பாட்டில் மின்சாரம் கிடையாது.. செஸ் ஆடினார் அமீர்கான்.. லகான் பட உதவி இயக்குநர் அபூர்வா லக்கியா பேட்டி
Lagaan: அமீர்கான் நடித்த லகான் படத்தின் படப்பிடிப்பின் போது அசுதோஷ் கோவரிகரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் அபூர்வா லக்கியா . படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர்களும் மற்ற குழுவினரும் எதிர்கொண்ட விஷயங்கள் பற்றி பேசினார்.

Lagaan: 2001-ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான 'லகான்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அமீர்கான் முக்கிய ஹீரோவாக நடித்த இந்தப் படத்தை அஷுதோஷ் கோவரிகர் இயக்கினார்.
தற்போது நன்கு அறியப்பட்ட திரைப்பட இயக்குநராக மாறியுள்ள அபூர்வா லக்கியா அப்போது அசுதோஷிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர்.
சமீபத்தில் ஒரு நேர்காணலின்போது பேசிய அபூர்வா லக்கியா, ’'லகான்' படத்தின் படப்பிடிப்பின் போது, படக்குழுவினர் மின்சாரம் இல்லாமல், கடினமான சூழ்நிலைகளில் தங்களை எவ்வாறு மகிழ்வித்துக் கொண்டனர் என்பது சுவாரஸ்யமானது. அமீர் கானுக்கு சலிப்பு ஏற்பட்டபோது, குஜராத்தில் இருந்து சில செஸ் சாம்பியன்களை ஷூட்டிங் செட்டுக்கு அழைத்து வந்தனர். அப்போது அவர்கள் படப்பிடிப்பு இடைவேளையின்போது அமீர் கான் மற்றும் படக்குழுவினருடன் செஸ் விளையாடினர்.
இடையில் பல சீட்டு விளையாட்டுகளும் இருந்தன. அப்போது சுவாரஸ்யத்தை உருவாக்க நடிகர்கள் தங்கள் மனதை உருவாக்க ஏதாவது செய்ய வேண்டியிருந்தது’’எனக் கூறினார்.
லகான் படப்பிடிப்பின்போது இயக்குநருக்கு நடந்த மூட்டு விலகல்:
லகான் படத்தின் படப்பிடிப்பு நடக்கும்போது, இயக்குநர் அசுதோஷ் கோவரிகரின் அர்ப்பணிப்பு குறித்தும், காலில் மூட்டு விலகல் ஏற்பட்ட பிறகு மருத்துவமனையில் தங்கியிருந்தபோதும் சில காட்சிகளை அவர் இயக்கிய விதம் குறித்தும் அவரது அன்றைய உதவி இயக்குநரும் தற்போதைய இயக்குநருமான அபூர்வா லக்கியா பேசியிருக்கிறார்.
அதில் குரு இயக்குநர் அசுதோஷ் பற்றி சிஷ்ய இயக்குநர் அபூர்வா லக்கியா கூறுகையில், "சில புகைப்படங்களில், நீங்கள் கவனித்தால், லகான் படக்குழுவினரை எங்கள் இயக்குநர் அசுதோஷுக்கு பதிலாக நான் நின்று வழிநடத்தி காட்சிகளை எடுத்திருப்பது தெரியவரும்.
எங்கள் இயக்குநர் அசுதோஷ் மருத்துவமனையில் இருந்தபோதும், பெரிய அளவிலான காட்சிகள் படமாக்கப்பட்டன. அசுதோஷ் அங்கு வந்து நடிகர்களுடன் நேரடியாக பேச மாட்டார். நான் அவருக்கு உதவியாக இருந்து அவரது தகவலை படக்குழுவினரிடம் கடத்தி வேலை வாங்கினேன்’’ என்று அபூர்வா கூறினார்.
மேலும் அவர், ‘’ படப்பிடிப்பின்போது, இரவில் நடந்த ஒரு கிரிக்கெட் போட்டியை நாங்கள் எடிட் செய்ய வேண்டியிருந்தது. அப்போது படப்பிடிப்பின்போது மக்கள் தீப்பந்தங்களை ஏந்தி உதவினர். லகான் படத்தின் படப்பிடிப்பில் நடிகர்கள் என்ன பாடுபட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். அத்தனை சிரமங்களுக்கும் பிறகு தான் 'லகான்' படம் உருவானது’’ என்றார், அப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய அபூர்வா லக்கியா.
மேலும் படிக்க: வெள்ளத்தில் சிக்கிய அமீர் கான்
மேலும் படிக்க: அமீர் கான் நடிக்க மறுத்த படம்
மேலும் படிக்க: அமீர் கான் எடுத்த பிரேக்
லகான் படத்தின் கதை என்ன?
லகான் படத்தின் கதை 1893ஆம் ஆண்டின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி இருந்தபோது விவசாயிகள் அதிக வரி செலுத்த வேண்டியிருந்த கதையை இந்தப் படம் விவரித்தது. ஆங்கிலேயர்களின் வரி முறையிலிருந்து விடுபட கிரிக்கெட் போட்டி விளையாடும் புவன் என்ற நபராக அமீர் கான் நடித்தார்.
இப்போது புவனும் அவரது குழுவும் இந்த போட்டியில் வெற்றி பெற்றால், அவர்கள் வரியிலிருந்து விடுபடுவார்கள். ஆனால், அவர்கள் தோற்றால், அவர்கள் பல மடங்கு வரியை பிரிட்டிஷ் அரசுக்கு செலுத்த வேண்டியிருக்கும். இதனை மையக்கருவாக வைத்து திரைக்கதை அமைத்து படம் எடுத்திருப்பார், இயக்குநர் அசுதோஷ்.
இப்படம் ரிலீஸுக்குப் பின் பல்வேறு விருதுகளைக் குவித்தது. சிறந்த அயல்நாட்டு படத்திற்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழாவிலும் பரிந்துரை செய்யப்பட்டது.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்