"சூப்பர் ஸ்டாரா இருந்தாலும் இதுதான் கதி.. இதெல்லாம் ஒரு சாபம்".. மனம் திறந்த லேடி சூப்பர் ஸ்டார்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  "சூப்பர் ஸ்டாரா இருந்தாலும் இதுதான் கதி.. இதெல்லாம் ஒரு சாபம்".. மனம் திறந்த லேடி சூப்பர் ஸ்டார்

"சூப்பர் ஸ்டாரா இருந்தாலும் இதுதான் கதி.. இதெல்லாம் ஒரு சாபம்".. மனம் திறந்த லேடி சூப்பர் ஸ்டார்

Malavica Natarajan HT Tamil
Nov 27, 2024 10:41 AM IST

நாம் எப்பேர்பட்ட சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் மலை உச்சிக்குப் போனால் கீழே விழுந்து தான் ஆக வேண்டும் என எதார்தத்தை பேசியுள்ளார் நடிகை விஜயசாந்தி.

"சூப்பர் ஸ்டாரா இருந்தாலும் இதுதான் கதி.. இதெல்லாம் ஒரு சாபம்".. மனம் திறந்த லேடி சூப்பர் ஸ்டார்
"சூப்பர் ஸ்டாரா இருந்தாலும் இதுதான் கதி.. இதெல்லாம் ஒரு சாபம்".. மனம் திறந்த லேடி சூப்பர் ஸ்டார்

கோடியில் சம்பளம்

அந்த காலகட்டத்திலேயே கோடியில் சம்பளம் வாங்கிய ஒரே நடிகையாக இருந்த விஜயசாந்தி, பின்னாளில் தமிழ், தெலுங்கு என தென்னிந்திய படங்களிலும் இந்தி சினிமாவிலும் சுமார் 40 வருட காலம் கோலோச்சினார்.

நடிகையாக மட்டும் இல்லாமல் இவர் படங்களை தயாரித்தும் வந்தார். இதைத்தொடர்ந்து அரசியலில் இறங்கிய இவர் முதலில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். பிந் தல்லி தெலங்கானா, பாஜக என பல கட்சிகளில் மாறி எம்பியாகவும் இருந்தார்,

இவர், ரியல் எஸ்டேட் அதிபர் மற்றும் தயாரிப்பாளரான எம்.வி.ஸ்ரீனிவாஸ் பிரசாத்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், இவர் அவள் விகடன் யூடியூப் சேனல் ஒன்றிக்கு பேட்டி அளித்து, தன் சினிமா மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசியுள்ளார்.

20 வயதில் திருமணம்

சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது என் 20 வயதில் நான் திருமணம் செய்தேன். அவர் வைஜெயந்தி ஐபிஎஸ் படத்தின் தாயாரிப்பாளரும் கூட. அவர் மிகவும் அமைதியானவர், வெளியில் பெரிதாக எதுவும் வரமாட்டார். அவர் வேலை என்னமோ அதில் தான் குறியாக இருப்பார். நாங்க ரெண்டு பேரும் சரியான ஜோடி.

நாங்க ரெண்டு பேரும் பந்தல் போட்டு, மேடை போட்டு ஜாம் ஜாம்ன்னு கல்யாணம் பண்னியிருந்திருக்கலாம். ஆனால் அப்படி செய்யவில்லை.

நான் காதல் திருமணம் தான் செய்தேன். எங்க காதல் எல்லாம் படபடவென 6 மாதத்திற்குள் முடிந்தது. பின் சிம்பிளாக கல்யாணம் செய்தோம். என் வேலை நடிக்குறது. அப்புறம் வீடு. அதில் மட்டும் நான் கவனமாக இருந்தேன்.

சினிமாவில் இருந்து வெளியேற நினைத்தேன்

ஒரு காலத்தில் நான் சினிமாவிலிருந்து வெளியேறிவிடலாம் என நினைத்தேன். ஆனால் அவர், அப்படி செய்யக்கூடாது. கடவுள் உனக்கு திறமை கொடுக்கும் போது வீட்டிலேயே இருக்க கூடாது எனக் கூறினார். அதன்பின் தான் நான் அவர் தயாரிப்பில் வைஜெயந்தி ஐபிஎஸ் படம் நடித்தேன்.

அப்பா அம்மாவின் இழப்பு

எனக்கு அப்பா அம்மா ரெண்டு பேரும் இல்லை. அப்போ என் வாழ்வில் முக்கிய முடிவு எடுக்க வேண்டிய இடத்தில் நான் இருந்தேன். நான் என் கணவரை சரியான சமயத்தில் தேர்ந்தெடுத்தேன். அப்போ நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். சினிமாவிலும், அரசியலிலும் அவர் தான் எனக்கு துணையாக இருக்கிறார்.

கதாநாயகிகளின் சாபம்

இங்கு பல கதாநாயகிகளின் வாழ்க்கை டைவர்ஸில் முடிகிறது. அது சாபமா எனத் தெரியவில்லை. எல்லாம் குடும்ப வாழ்க்கையில் ஈகோ பார்ப்பதால் தான். இருவருக்குமான புரிதல் இருந்தால் இப்படி நடக்காது. இருவரும் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும். குடும்ப வாழ்க்கையில் நீ பெருசா நான் பெருசா என போட்டிப் போட்டால் வாழ்க்கை நிலைக்காது எனக் கூறினார்.

பார்ட்டிகளில் விருப்பம் இல்லை

நான் என் அப்பா அம்மாவை இழந்த பின் என் வாழ்க்கையில் எப்படி இருக்க வேண்டும் என முடிவெடுத்தேன். எனக்கு ஒழுக்கமா இருப்பது ரொம்ப முக்கியம். சினிமாவில் நான் எந்த பார்ட்டியிலும் பங்கேற்றது இல்லை. விருது விழாவில் கூட பங்கேற்றது இல்லை.

நான் என்னசெய்யனும் நான் எப்படி இருக்க வேண்டும் என எனக்கு தெரியும். அதை நானே செய்து கொள்வேன். எனக்கு யாரும் தேவையில்லை.

சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் சரிவு நிச்சயம்

சினிமாவில் நடிகையாக இருந்தாலும் நடிகராக இருந்தாலும் வளர்ந்து மலை உச்சிக்கு சென்று சூப்பர் ஸ்டார் ஆகிவிடுவோம். அதன் பின் என்ன செய்வோம். அங்கிருந்து குதிக்க வேண்டியது தான். அப்படி நாம் மலையிலிருந்து விழுந்தால் கூட அதை நாம் பாசிட்டிவ்வாக தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

நீங்கள் கீழே விழுவதை மிகவும் கடினமாக எதிர்கொண்டால் மன அழுத்தம் தான் வரும். வெற்றி வரும் போது, நமக்கு தேவையானதை செய்து கொள்ள வேண்டும். வெற்றி மட்டும் தான் வாழ்க்கையை தீர்மானிக்கும் என்றால் அவர் வாழ்வதே கஷ்டம் ஆகிவிடும். இதை ஏற்றுக் கொள்ள மறுப்பதால் தான் பலரது வாழ்வு காணாமல் போகிறது.

ஒரு வெற்றி கொடுத்தால் பல தோல்விகளை கடவுள் கொடுப்பார். வெறும் வெற்றியை மட்டும் கொடுத்தால் நம்மை கட்டுப்படுத்த முடியாது என அவருக்கு தெரியும்.

பூச்சியத்தில் இருந்து தொடக்கம்

அப்பா, அம்மாவை இழந்து பூச்சியத்தில் இருந்து என் வாழ்க்கையை தொடங்கியதால் எனக்கு வாழ்க்கை புரிந்தது. பணத்தின் மதிப்பும் தெரிந்தது. வாழ்க்கையில் விழுந்த அடிகளை கடந்து போகத் தெரியும்.

நான் நினைத்ததை நடத்தி முடிக்கும் வரை நான் போராடுவேன். நான் அதைத் தான் என் வாழ்வில் செய்தேன். தெலங்கானா மக்களுக்கு எதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன் அதை செய்து முடிக்கும் வரை போராடினேன் எனக் கூறினார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.