ஏமாற்றம்.. ஆஸ்கர் ரேஸில் இருந்து விலகிய லபாட்டா லேடீஸ்.. மற்றொரு இந்தி படத்துக்கு வாய்ப்பு!
2025 ஆம் ஆண்டு ஆஸ்கா் விருதுக்கான சிறந்த வெளிநாட்டு திரைப்படப் பிரிவுக்கு இந்தியா சாா்பில் ஹிந்தி மொழியில் வெளியான லபாட்டா லேடீஸ் திரைப்படம் அனுப்பப்பட்டது.

உலக அளவில் திரையுலகின் படைப்புகளை அங்கீகரித்து கௌரவப்படுத்தும் உயரிய ஆஸ்கா் விருது ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளில் வழங்கப்படுகிறது. 97-ஆவது ஆஸ்கா் விருதுக்கு சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான பிரிவில் இந்தியாவின் அதிகாரபூா்வ நுழைவாக லபாட்டா லேடீஸ் திரைப்படம் தோ்வாகியது.
இயக்குநா் கிரண் ராவ் இயக்கத்தில் கடந்த மாா்ச் மாதம் வெளியான லபாட்டா லேடீஸ் திரைப்படம், ரசிகா்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. நடிகா் அமீா்கான், இயக்குநா் ராவ், ஜியோ நிறுவனம் ஆகியோரின் கூட்டு தயாரிப்பில் உருவான இப்படத்தில் பிரதிபா ரந்தா, ஸ்பா்ஷ் ஸ்ரீவஸ்தவா நிதான்ஷி கோயல், சாயா கடம் உள்ளிட்டவா்கள் நடித்துள்ளனா்.
லபாட்டா லேடீஸ் கதை
ஒரே ரயிலில் பயணம் செய்யும் புதிதாக திருமணமான இரண்டு பெண்கள் தவறுதலாக வெவ்வேறு மணமகன் இடங்களுக்கு சென்று விடுவதால் ஏற்படும் குழப்பங்களும், அதைத் தொடா்ந்து நடக்கும் நிகழ்வுகளுமே இப்படத்தின் கதை.