L2 Empuraan: ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ மொத்த வசூலை முறியடிக்க வாய்ப்பு.. மோதி பார்க்கும் மோகன்லால்! - தற்போதைய வசூல் என்ன?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  L2 Empuraan: ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ மொத்த வசூலை முறியடிக்க வாய்ப்பு.. மோதி பார்க்கும் மோகன்லால்! - தற்போதைய வசூல் என்ன?

L2 Empuraan: ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ மொத்த வசூலை முறியடிக்க வாய்ப்பு.. மோதி பார்க்கும் மோகன்லால்! - தற்போதைய வசூல் என்ன?

Kalyani Pandiyan S HT Tamil
Published Apr 01, 2025 08:22 PM IST

மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கிய எம்புராண் திரைப்படம், சர்ச்சைகளுக்கு மத்தியிலும் வசூல் சாதனை படைத்து வருகிறது.

L2 Empuraan: ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ மொத்த வசூலை முறியடிக்க வாய்ப்பு.. மோதி பார்க்கும் மோகன்லால்! -  தற்போதைய வசூல் என்ன?
L2 Empuraan: ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ மொத்த வசூலை முறியடிக்க வாய்ப்பு.. மோதி பார்க்கும் மோகன்லால்! - தற்போதைய வசூல் என்ன?

மார்ச் 27 ஆம் தேதி வெளியான இந்தப் படம், 5 நாட்களில் உலகளவில் 200 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இப்படியே சென்றால், மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்ற மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் வசூலை சீக்கிரமே முறியடித்து விடும் என்பது தெரிய வந்திருக்கிறது.

எம்புரான் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ்

இது குறித்தான அறிவிப்பை எம்புரான் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஆஷீர்வாத சினிமாஸ் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறது.

பாக்ஸ் ஆபிஸ் தகவல்களை வெளியிடும் sacnilk தளம் வெளியிட்ட தகவல்களின் படி, எம்புரான் படம் 5 நாட்களில் இந்தியாவில் 70.15 கோடி ரூபாய் நிகர வசூலையும், 82 கோடி ரூபாய் மொத்த வசூலையும் ஈட்டியுள்ளது. உலகளவில் பார்க்கும் போது 200 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. 2019 ம் ஆண்டு வெளியான எம்புரானின் முதல்பாகமான லூசிபர் உலகளவில் மொத்தமாக 127 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மலையாளத்தில் வெளியாகி உலகளவில் ஏகோபித்த வரவேற்பை பெற்ற மஞ்சும்மல் பாய்ஸ் படம் மொத்தமாக 240 கோடி வசூல் செய்திருந்தது. ஆகையால், இந்தப்படத்தின் வசூலை எம்புரான் படம் விரைவில் முறியடுத்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு விக்கி கெளஷலில் நடிப்பில் வெளியான சாவா 45 நாட்களில் 798.10 கோடி ரூபாய் வசூலித்தது. சங்கிராந்திகி வாஸ்துனம் உலகளவில் 255.2 கோடி ரூபாய் வசூலித்தது.

சர்ச்சை காரணமாக எம்புராண் படத்தின் சில காட்சிகள் நீக்கம்

எம்புரான் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், 2002 குஜராத் கலவரத்தைக் காட்டும் காட்சிகள் காரணமாக சர்ச்சையில் சிக்கியது. இந்த சர்ச்சையைத் தொடர்ந்து 'மனதைப் புண்படுத்தும்' 2 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாகத் தயாரிப்பாளர் அந்தோணி பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். மேலும் இந்த நடவடிக்கை அழுத்தம் அல்லது அச்சுறுத்தலின் காரணமாக எடுக்கப்படவில்லை என்றும் விளக்கி இருந்தார்.

இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் அவர் கூறியதாவது, “ நாம் ஒரு சமூகத்தில் வாழ்கிறோம். யாரையும் புண்படுத்தும் எண்ணம் எங்களுக்கு இல்லை. யாராவது படத்தால் மனம் வருந்தினால், தயாரிப்பாளர்கள், இயக்குநர் மற்றும் நடிகர்களாக நாம் அந்தக் குறையைச் சரி செய்ய வேண்டும்” என்று பேசினார்.

மோகன்லால் மன்னிப்பு

இது குறித்து மோகன்லால் தனது பதிவில், ‘என் அன்பான ரசிகர்களில் பலருக்கு எம்புரான் படத்தில் இடம்பெற்றுள்ள சில அரசியல் மற்றும் சமூகக் கருப்பொருள்கள் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என எனக்குத் தெரியவந்துள்ளது. ஒரு கலைஞராக, என் படங்களில் எந்த அரசியல் இயக்கம், சித்தாந்தம் அல்லது சமயம் மீதும் வெறுப்பைத் தூண்டும் காட்சிகள் இடம்பெறக் கூடாது என்பது என் கடமை.

பொறுப்பேற்கும் மோகன்லால்

எனவே, எம்புரான் குழுவும் நானும், என் அன்பான ரசிகர்களுக்கு ஏற்பட்ட வருத்தத்திற்கு மிகவும் வருந்துகிறோம். படத்தின் பின்னணியில் உள்ள அனைவரும் இதற்குப் பொறுப்பு என்பதை உணர்ந்து, படத்தில் இருந்து அத்தகைய கருப்பொருள்களை நீக்க முடிவு செய்துள்ளோம்," என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.