வீக் எண்டை அதிர வைக்க ஓடிடி பக்கம் வரும் 2 மாஸ் படங்கள்.. கொண்டாட்டத்திற்கு கவுண்டவுன் ஸ்டார்ட்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  வீக் எண்டை அதிர வைக்க ஓடிடி பக்கம் வரும் 2 மாஸ் படங்கள்.. கொண்டாட்டத்திற்கு கவுண்டவுன் ஸ்டார்ட்..

வீக் எண்டை அதிர வைக்க ஓடிடி பக்கம் வரும் 2 மாஸ் படங்கள்.. கொண்டாட்டத்திற்கு கவுண்டவுன் ஸ்டார்ட்..

Malavica Natarajan HT Tamil
Published Apr 23, 2025 08:42 PM IST

ஓடிடியில் இன்னும் சில மணி நேரங்களில் இரண்டு பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன. இவற்றில் ஒன்று மலையாளம், மற்றொன்று தமிழ்த் திரைப்படம். அந்த படங்கள் என்ன, எங்கே பார்க்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

வீக் எண்டை அதிர வைக்க ஓடிடி பக்கம் வரும் 2 மாஸ் படங்கள்.. கொண்டாட்டத்திற்கு கவுண்டவுன் ஸ்டார்ட்..
வீக் எண்டை அதிர வைக்க ஓடிடி பக்கம் வரும் 2 மாஸ் படங்கள்.. கொண்டாட்டத்திற்கு கவுண்டவுன் ஸ்டார்ட்..

எல்2: எம்புரான் ஓடிடி ஸ்ட்ரீமிங்

அதிக வசூல் செய்த மலையாள திரைப்படமாக வரலாறு படைத்த எல்2: எம்புரான் டிஜிட்டல் பிரீமியருக்கு தயாராக உள்ளது. இந்த திரைப்படம் நாளை (ஏப்ரல் 24) முதல் ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. அதாவது புதன்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு மேல் இந்த திரைப்படம் ஓடிடியில் கிடைக்கும். இந்த திரைப்படத்தை சுற்றி எத்தனை சர்ச்சைகள் இருந்தாலும், பாக்ஸ் ஆபிஸில் டாப்பிற்கு சென்று சாதனை படைத்தது.

எம்புரான் பட சர்ச்சை

இந்த ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் முன்பு வந்த லூசிபர் திரைப்படத்தின் சீக்வெல்லாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மோகன்லால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் குஜராத் கலவரம் தொடர்புடைய காட்சிகளால் சர்ச்சை ஏற்பட்டது. பெரிய அளவில் எதிர்ப்பு மற்றும் விமர்சனங்கள் வந்ததால் படம் 24 வெட்டுக்களுடன் திரையரங்குகளில் மீண்டும் திரையிடப்பட்டது. இதனால் ஓடிடியில் இந்த திரைப்படத்தின் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

வீர தீர சூரன் ஓடிடி ஸ்ட்ரீமிங்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சியான் விக்ரம் நடித்த திரைப்படம் வீர தீர சூரன். இந்த திரைப்படமும் வெளியாவதற்கு முன்னே சர்ச்சையில் சிக்கி, திரைப்பட வெளியீட்டிற்கு தடை விதிக்கப்பட்டு பின் ரிலீஸ் அன்று மாலைக் காட்சிகள் தான் திரையிடப்பட்டது.

முதல் பாகம் இல்லாமலே 2 ஆம் பாகம்

இந்தப் படம் நாளை (ஏப்ரல் 24) முதல் அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. வழக்கமாக படத்தின் முதல் பாகத்திற்கு பின் 2 ஆம் பாகம் வெளியிடப்படும் நிலையில், இந்தப் படம் வித்தியாசமாக 2 ஆம் பாகத்திற்கு பின் முதல் பாகம் வெளியாகிறது. விக்ரமின் அதிரடியான நடிப்பும், ஜிவி பிரகாஷின் இசையும் படத்தை பார்க்க வருவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியதால் படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் பெற்றது.

வீர தீர சூரன் படக்குழு

இது ஒரு ஆக்ஷன் கிரைம் திரைப்படம். அருண் குமார் இயக்கியுள்ளார். விக்ரமுடன் எஸ்.ஜே.சூர்யா, சூரஜ் வெஞ்சரமூடு நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு திரையரங்குகளில் பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து விரைவில் படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்த திரைப்படம் இப்போது பிரைம் வீடியோவில் எப்படி கொண்டாடப்படுகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.