L2 Empuraan Twitter reviews: நம்பிக்கையை காப்பாற்றினாரா பிரித்விராஜ்?; மோகன்லாலின் எம்புரான் படம் எப்படி இருக்கு?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  L2 Empuraan Twitter Reviews: நம்பிக்கையை காப்பாற்றினாரா பிரித்விராஜ்?; மோகன்லாலின் எம்புரான் படம் எப்படி இருக்கு?

L2 Empuraan Twitter reviews: நம்பிக்கையை காப்பாற்றினாரா பிரித்விராஜ்?; மோகன்லாலின் எம்புரான் படம் எப்படி இருக்கு?

Kalyani Pandiyan S HT Tamil
Published Mar 27, 2025 12:54 PM IST

L2 Empuraan Twitter reviews: எம்புரான் திரைப்படம் ஆங்கிலப் படம் பார்ப்பது போல இருந்தது. இது ஒரு சாதனை. முரளி கோபி நன்றாக எழுதியிருந்தார்.பிரித்வி அதை அற்புதமாக இயக்கியுள்ளார்.

L2 Empuraan Twitter reviews: நம்பிக்கையை காப்பாற்றினாரா பிரித்விராஜ்?; மோகன்லாலின் எம்புரான் படம் எப்படி இருக்கு?
L2 Empuraan Twitter reviews: நம்பிக்கையை காப்பாற்றினாரா பிரித்விராஜ்?; மோகன்லாலின் எம்புரான் படம் எப்படி இருக்கு?

மோகன்லாலின் என்ட்ரி மற்றும் காட்டுப்பகுதி சார்ந்த சண்டைக் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்ததாக சிலர் கூறியிருக்கின்றனர். இன்னும் சிலர், கதை சொல்லலில் குறைபாடு இருப்பதாகவும், கதை மிகவும் சாதாரணமாக முடிந்ததாகவும் விமர்சித்துள்ளனர்.

எல்2: எம்புரான் எக்ஸ் தள விமர்சனங்கள்

எக்ஸ் தளத்தில் ஒரு ரசிகர், ‘நல்ல வேகத்தில் செல்லும் ஸ்டைலிஷ் பொழுதுபோக்கு படமாக எம்புரான் வந்திருக்கிறது. கதையானது அரசியல் மற்றும் நடப்பு நிகழ்வுகளுடன் நெருக்கமாக உள்ளது. ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மோகன்லாலின் அற்புதமான என்ட்ரி வருகிறது. காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் இருக்கின்றன.

இன்னொருவர், ‘எம்புரான் நல்ல படம். லால் சாரின் அறிமுகம் மற்றும் காட்டுப்பகுதி சண்டைக் காட்சி உச்சகட்ட திரை அனுபவம்.’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

மோகன்லாலின் காட்சிகள்

மற்றொருவர், ‘எம்புரான் திரைப்படம் ஆங்கிலப் படம் பார்ப்பது போல இருந்தது. இது ஒரு சாதனை. முரளி கோபி நன்றாக எழுதியிருந்தார். பிரித்வி அதை அற்புதமாக இயக்கியுள்ளார். மஞ்சு வாரியரின் அற்புதமான தருணங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி. ஒட்டுமொத்தமாக, மிகவும் நல்ல படம் என்று எழுதி இருக்கிறார்.

ஒரு பயனர், ‘எம்புரான் முதல் பாதியின் பிரமாண்டம் அற்புதமாக இருந்தது. இந்தியாவில் எடுக்கப்பட்ட மிகப்பெரிய படமாக உணர வைத்தது. பின்னணி இசை காட்சிகளை மேம்படுத்துகிறது. எம்புரான் இரண்டாம் பாதியில் காட்டு சண்டை மிக சிறப்பாக இருந்தது. காட்சி மேம்பாடுகள், பின்னணி இசை அனைத்தும் உயர்ந்த தரத்தில் இருந்தன. எழுத்து இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.’ என்று பதிவிட்டு இருக்கிறார்.

மற்றொரு பயனர், ‘ஒட்டுமொத்தமாக சிறந்த திரையரங்கு அனுபவம். எதிர்பார்ப்புகள் இல்லாவிட்டால், இது ஒரு மிகப்பெரிய வெற்றிப் படமாக இருந்திருக்கும். இன்னும் மிகவும் நல்ல படம். பாருங்கள்’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இயக்குநரும், நடிகருமான பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'லூசிஃபர்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது 'L 2 எம்புரான்’.

இந்தத்திரைப்படத்தில் மோகன்லால், பிருத்விராஜ் சுகுமாறன், டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர் , சுராஜ் வெஞ்சரமூடு, சானியா ஐயப்பன், கிஷோர் ,சாய்குமார், சச்சின் கடேக்கர் என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.