பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்ட்.. ஒரே மாதத்திற்குள் ஓடிடி பக்கம் வந்த எல்2: எம்புரான்.. எங்கு? எப்போது தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்ட்.. ஒரே மாதத்திற்குள் ஓடிடி பக்கம் வந்த எல்2: எம்புரான்.. எங்கு? எப்போது தெரியுமா?

பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்ட்.. ஒரே மாதத்திற்குள் ஓடிடி பக்கம் வந்த எல்2: எம்புரான்.. எங்கு? எப்போது தெரியுமா?

Malavica Natarajan HT Tamil
Published Apr 18, 2025 07:15 AM IST

பாக்ஸ் ஆபிஸில் பல ரெக்காராட்டுகள் செய்த எல்2: எம்புரான் படம் வெளியான ஒரு மாதத்திற்குள்ளாகவே ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இதந் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்ட்.. ஒரே மாதத்திற்குள் ஓடிடி பக்கம் வந்த எல்2: எம்புரான்.. எங்கு? எப்போது தெரியுமா?
பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்ட்.. ஒரே மாதத்திற்குள் ஓடிடி பக்கம் வந்த எல்2: எம்புரான்.. எங்கு? எப்போது தெரியுமா?

எல் 2: எம்புரான் ஓடிடி ரிலீஸ் தேதி

பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில், அவரோடு சேர்ந்து முன்னணி வேடத்தில் மோகன்லால் நடித்த திரைப்படம் எல் 2: எம்புரான். மார்ச் 27 அன்று திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் 250 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இது வரும் வியாழக்கிழமை (ஏப்ரல் 24) முதல் ஜியோஹாட்ஸ்டார் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. இந்தப் படம் ஜியோஹாட்ஸ்டார் ஓடிடியில் படத்தின் ரிலீஸிற்கு பிறகு ஒரு மாதத்திற்குள்ளாகவே ஓடிடியில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்ரஹாம் உலகம்

இந்தத் தகவலை ஓடிடி நிறுவனம் தனது எக்ஸ் அக்கவுண்ட் மூலம் வெளியிட்டுள்ளது. “ஆப்ரஹாம் உலகம் இங்கே தொடங்குகிறது. எல் 2: எம்புரான் ஏப்ரல் 24 முதல் ஜியோஹாட்ஸ்டார் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும்” என்ற தலைப்பில் இந்தத் திரைப்படத்தின் டிஜிட்டல் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. இந்தப் படம் மலையாளத்துடன், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது.

எல் 2: எம்புரான் பட சர்ச்சை

எல் 2: எம்புரான் திரைப்படம் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 2019 இல் வெளியான லூசிஃபர் திரைப்படத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் வெளியானது. முதல் நாளிலிருந்தே பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூலைப் பெற்ற இந்தப் படம் அதே நேரத்தில், பல விவாதங்களுக்கும் உள்ளானது. 2002 ஆம் ஆண்டு நடந்த குஜராத் கோத்ரா கலவரத்தை இந்தத் திரைப்படத்தில் காட்டியதற்காக பெரும் விவாதம் எழுந்தது. இதனால், திரைப்படத்தில் முன்னணி வேடத்தில் நடித்த மோகன்லால் மன்னிப்பு கேட்க வேண்டியதாயிற்று.

மறு தணிக்கை

அத்துடன் எம்புரான் திரைப்படம் மறு தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு படத்தில் இருந்து 24 காட்சிகள் நீக்கப்பட்டன. இதனால் விவாதம் சற்று சமாதானமானது. இருப்பினும், தமிழ்நாட்டில் முல்லை பெரியாறு அணை குறித்து படத்தில் தெரிவித்த கருத்துகளுக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இது சட்டப்பேரவை வரை சென்றது.

பாக்ஸ் ஆபிஸ் வெற்றி

ஆனால் விவாதங்கள் எவ்வளவு இருந்தாலும், பாக்ஸ் ஆபிஸில் இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனால், அதிக வசூல் செய்த மலையாளத் திரைப்படமாக எல் 2: எம்புரான் சாதனை படைத்தது. கடந்த ஆண்டு மஞ்சுமேல் பாய்ஸ் படைத்த சாதனையை இந்தத் திரைப்படம் முறியடித்தது. இப்போது ஏப்ரல் 24 முதல் ஜியோஹாட்ஸ்டார் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. ஓடிடியில் இந்தத் திரைப்படத்திற்கு எப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

எம்புரான் படக்குழு

இந்த படத்தில் மோகன்லால், பிருத்வி ராஜ் சுகுமாரனுடன் இணைந்து மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், அபிமன்யு சிங், சாய்குமார், சூரஜ் வெஞ்சாரமூடு, பாசில், சச்சின் கேட்கர், சானியா அய்யப்பன் மற்றும் கேம் ஆஃப் த்ரோன்ஸ் புகழ் ஜெரோம் ஃப்ளின் ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்ரீ கோகுலம் மூவிஸ், ஆசிர்வாத் சினிமாஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் ஆகியவற்றின் பேனரின் கீழ் ஆண்டனி பெரும்பாவூர் மற்றும் கோகுலம் கோபாலன் ஆகியோர் இணைந்து படத்தை தயாரித்தனர். சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்ய, தீபக் தேவ் இசையமைத்துள்ளார்.