L2 Empuraan: சுரேஷ் கோபி பெயர் நீக்கம்.. 24 இடங்களில் கை வைத்த தணிக்கை குழு..எம்புரானில் செய்யப்பட்ட திருத்தங்கள் இங்கே!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  L2 Empuraan: சுரேஷ் கோபி பெயர் நீக்கம்.. 24 இடங்களில் கை வைத்த தணிக்கை குழு..எம்புரானில் செய்யப்பட்ட திருத்தங்கள் இங்கே!

L2 Empuraan: சுரேஷ் கோபி பெயர் நீக்கம்.. 24 இடங்களில் கை வைத்த தணிக்கை குழு..எம்புரானில் செய்யப்பட்ட திருத்தங்கள் இங்கே!

Kalyani Pandiyan S HT Tamil
Published Apr 01, 2025 09:01 PM IST

L2 Empuraan: மோகன்லால் நடித்த பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கிய எல்2 எம்புரான் படத்தில், 'உணர்வுகளை புண்படுத்தாத' வகையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அவை என்னென்ன என்பதைப் பாருங்கள்.

L2 Empuraan: சுரேஷ் கோபி பெயர் நீக்கம்.. 24 இடத்தில் கை வைத்த தணிக்கை குழு..எம்புரானில் செய்யப்பட்ட திருத்தங்கள் இங்கே!
L2 Empuraan: சுரேஷ் கோபி பெயர் நீக்கம்.. 24 இடத்தில் கை வைத்த தணிக்கை குழு..எம்புரானில் செய்யப்பட்ட திருத்தங்கள் இங்கே!

முன் வந்த படக்குழு

பிரச்சினை பெரிதாகி போக, சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்க படக்குழு முன் வந்தது. இதனையடுத்து படம் மீண்டும் தணிக்கைக்குழுவிடம் சென்றது. அங்கு செய்யப்பட்ட மாற்றங்களின் படி, படத்தில் 24 இடங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. படத்தில் இருந்து 2 நிமிடங்கள் 8 வினாடிகள் அளவிலான சர்ச்சைக்குரிய காட்சிகள் மொத்தமாக நீக்கப்பட்டு இருக்கின்றன.

பிரபல ட்ரேடர் ஒருவர், மத்திய தணிக்கை வாரியம் (CBFC) அங்கீகரித்த 24 மாற்றங்கள் மற்றும் நீக்கப்பட்ட காட்சிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

எல்2 எம்புரான் படத்தின் தயாரிப்பாளர்கள் இந்த மாற்றங்களுக்குப் பிறகு படத்திற்கான புதிய சான்றிதழ் பெற்றுள்ளனர்.

இந்தப் பட்டியலில், நடிகர் மற்றும் அரசியல்வாதியான சுரேஷ் கோபி மற்றும் கூடுதல் ஆணையர் வருமான வரித்துறை அதிகாரி ஜோதி மோகன் ஐஆர்எஸ் ஆகியோரை குறிப்பிடும் நன்றி தெரிவிப்பு, நீக்கப்பட்டு இருக்கின்றன. இந்த சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்திருந்த சுரேஷ் கோபி இது ஒரு வியாபாரம் என்று குறிப்பிட்டு இருந்தார்.

திருத்தங்கள் என்னென்ன?

ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை குறிப்பிடும் காட்சியில் 'சில வருடங்களுக்கு முன்பு' என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளாது. ஒரு மத அமைப்பின் முன் வாகனங்கள் செல்லும் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. மசூத் (சத்யஜித் சர்மா) மற்றும் ஜெயத் மசூத் (பிரித்விராஜ்), பாலராஜ் (அபிமன்யு சிங்) மற்றும் முன்னா (சுகந்த் கோயல்) ஆகியோர் இடையேயான உரையாடல்கள் மாற்றப்பட்டுள்ளன.

பாலராஜின் சில காட்சிகள் நீக்கப்பட்டு, பின்னர் அவர் பயன்படுத்தும் பெயரான பஜரங்கி, பால்தேவ் என்று மாற்றப்பட்டுள்ளது. மேலும், பெண்களுக்கு எதிரான வன்முறையைக் காட்டும் காட்சிகள், ஒரு காரில் உள்ள பெயர் பலகை, தொலைக்காட்சி செய்திகளைக் காட்டும் காட்சிகள் மற்றும் மத அமைப்பை குறிப்பிடும் காட்சி உள்ளிட்டவை நீக்கப்பட்டுள்ளன.

மோகன்லால் மன்னிப்பு

இது குறித்து மோகன்லால் தனது பதிவில், ‘என் அன்பான ரசிகர்களில் பலருக்கு எம்புரான் படத்தில் இடம்பெற்றுள்ள சில அரசியல் மற்றும் சமூகக் கருப்பொருள்கள் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என எனக்குத் தெரியவந்துள்ளது. ஒரு கலைஞராக, என் படங்களில் எந்த அரசியல் இயக்கம், சித்தாந்தம் அல்லது சமயம் மீதும் வெறுப்பைத் தூண்டும் காட்சிகள் இடம்பெறக் கூடாது என்பது என் கடமை.

பொறுப்பேற்கும் மோகன்லால்

எனவே, எம்புரான் குழுவும் நானும், என் அன்பான ரசிகர்களுக்கு ஏற்பட்ட வருத்தத்திற்கு மிகவும் வருந்துகிறோம். படத்தின் பின்னணியில் உள்ள அனைவரும் இதற்குப் பொறுப்பு என்பதை உணர்ந்து, படத்தில் இருந்து அத்தகைய கருப்பொருள்களை நீக்க முடிவு செய்துள்ளோம்," என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.