Tamil News  /  Entertainment  /  Kuttypadmini Latest Interview About Kamal Haasan Srividya Love And Her Cancer Treatment

Kuttypadmini: கைவிட்ட சாய்பாபா..கடைசியில் வந்த கமல்; ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி?’.. - ஸ்ரீவித்யாவை கேன்சர் கொன்ற கதை!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 10, 2024 08:22 AM IST

ஸ்ரீவித்யாவிற்கு நன்றாக நடனமாட தெரியும், நன்றாக பாடத் தெரியும்; அதில் கமல்ஹாசனுக்கு ஆர்வம் இருந்தது. இதனால் அவர்கள் இரண்டு பேருக்கும் இடையேயான உரையாடல் மிக இயல்பாக நடந்தது.

குட்டி பத்மினி!
குட்டி பத்மினி!

ட்ரெண்டிங் செய்திகள்

அவர் பேசும் போது, “ ஸ்ரீவித்யா கமலை காதலித்துக் கொண்டிருந்த பொழுது, அவர் வாணி கணபதியை காதலித்துக் கொண்டிருந்தார் கூடவே, இன்னும் சில கதாநாயகிகள் கமலை காதலித்து வந்தார்கள். 

அதற்கு காரணம் இருக்கிறது. அந்த சமயத்தில் மிகவும் அழகான அதே நேரத்தில் சினிமா பற்றிய தகவல்களை அதிகமாக தெரிந்து வைத்திருந்தவர் கமல்ஹாசன். இன்னொன்று அவர் எல்லோரிடமும் மிகவும் இயல்பாக சிரித்து பேசுவார். அந்த நேரத்தில் கட்டிப்பிடித்து நடிப்பது தொடர்பான காட்சிகள் நிறைய வர ஆரம்பித்தன. 

ஸ்ரீவித்யாவிற்கு நன்றாக நடனமாட தெரியும், நன்றாக பாடத் தெரியும்; அதில் கமல்ஹாசனுக்கு ஆர்வம் இருந்தது. இதனால் அவர்கள் இரண்டு பேருக்கும் இடையேயான உரையாடல் மிக இயல்பாக நடந்தது. ஆனால் அந்த காதல் கைகூடாமல் போனது. அவர் ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவரோ ஸ்ரீவித்யாவின் சொத்துக்கள் முழுவதையும் அபகரித்து விட்டார். ஆண்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. 

ஸ்ரீவித்யா இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அவரை சந்திப்பதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவர் அப்போது மிகவும் சோர்வாக, நைட்டியில் இருந்தார்.

உடனே நான் அவரிடம் என்ன உடம்பு சரி இல்லையா என்று கேட்டேன். அதற்கு அவர் அதெல்லாம் ஒன்றும் இல்லை;இன்னும் இரண்டு நாட்களில் செத்து விடுவேன் என்றார்.

உடனே நான் பதறி என்னாச்சு என்று கேட்டேன். அதற்கு அவர், தனக்கு கேன்சர் வந்திருக்கிறது என்றும் அதன் இறுதி கட்டத்தில் தான் இருப்பதாகவும், அதிகபட்சமாக இரண்டு மூன்று நாட்கள் தான் உயிரோடு இருப்பேன் என்று சொல்லி இருக்கிறார்கள் என்று சொல்லி, என்னுடைய கையை பிடித்து  ‘எனக்கு ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது’ என்று அழ ஆரம்பித்து விட்டார். 

அதை பார்த்து நானும் அழுது விட்டேன். அவருக்கு சாய்பாபா மீது பக்தி அதிகம். அதனால் பாபா நன்றாகிவிடும் நன்றாக விடும் என்று சொன்னாரே.. ஆனால் அவர் கைவிட்டு விட்டாரே என்று அவர் சொன்னார். அடுத்த நாள் தான் அவரை கமல்ஹாசன் வந்து பார்த்தார். அடுத்த மூன்று நாட்களில் அவர் இறந்து விட்டார்” என்று பேசினார். 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.