Kutty Padmini: கால் மேல் கால் போட்டு உட்கார்ந்த ஜெயா;அதிர்ந்த சிவாஜி; ஜமுனாவை ஓட விட்ட சுயமரியாதை! -ஜெ.வின் சம்பவங்கள்!
இதைப்பார்த்த சிவாஜி என்னை அழைத்து, என்ன…அவர் காலை கீழே போட மாட்டாரா?… பெரிய மகாராணியா? என்று கேட்டார். உடனே நான் இல்லை அங்கிள் அவரது குணமே அப்படியானதுதான் என்று சொன்னேன்.
ஜெயலலிதாவிற்கும், நடிகை ஜமுனாவிற்கும் இடையே நடந்த சண்டை குறித்து, நடிகை குட்டி பத்மினி அவள் கிளிட்ஸ் சேனலுக்கு பேசி அண்மையில் பேசி இருந்தார்.
அந்த பேட்டி இங்கே!
அவர் பேசும் போது, “ஜெயலலிதா அம்மா முதன் முறையாக .அப்போதுதான் சிவாஜி உடன் இணைந்து நடிக்கிறார். அந்த திரைப்படம் மோட்டார் சுந்தரம். சிவாஜி அப்போதே மிகப்பெரிய ஸ்டார்.
அந்தப்படத்தில் சிவாஜியின் மகளாக நடிக்கதான் ஜெயலலிதா கமிட் செய்யப்பட்டிருந்தார். படப்பிடிப்பிற்குள் சிவாஜி நுழையும் போது, ஜெயலலிதா கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருந்தார்.
இதைப்பார்த்த சிவாஜி என்னை அழைத்து, என்ன…அவர் காலை கீழே போட மாட்டாரா?… பெரிய மகாராணியா? என்று கேட்டார். உடனே நான் இல்லை அங்கிள் அவரது குணமே அப்படியானதுதான் என்று சொன்னேன்.
ஆனால் சிவாஜி ஜெயலலிதா அம்மாவின் அருகில் சென்ற உடன், ஜெயா அம்மா எழுந்து நின்று வணக்கம் சொன்னார். அதன் பின்னர் ஜெயலலிதா வேண்டுமென்றே இவ்வாறு செய்பவர் அல்ல என்பது அவருக்கு புரிந்தது.
ஒருமுறை ஒரு தெலுங்கு திரைப்படத்தில் ஜெயலலிதாவும் ஜமுனா அம்மாவும் இணைந்து நடித்தனர். அப்போது அவர்கள் இருவருக்கும் பெரிய சண்டை வந்தது. ஜமுனா அம்மா காட்சிக்கு ஒத்திகை வேண்டும் என்று கேட்கிறார் ஆனால் ஜெயலலிதாவோ எனக்கு ஒத்திகை வேண்டாம் என்று சொல்கிறார்.
அது எப்படி நீங்கள் சொல்வீர்கள் என்று ஜமுனா அம்மா கேட்க, ஜெயலலிதாவோ உங்களுக்கு வேண்டுமென்றால் நீங்கள் செய்து கொள்ளுங்கள் என்று கறாராக சொல்லி விட்டார்.
இதையடுத்து கோபத்தில் கொந்தளித்த ஜமுனா அம்மா ஜெயலலிதா படத்தில் இருந்தால் நான் நடிக்க மாட்டேன் என்று கோபித்துக் கொண்டு சென்று விட்டார்.
இதையடுத்து இயக்குநர், ஜெயலலிதாவிடம் சென்று இந்த விஷயத்தை சொல்கிறார். அதற்கு ஜெயலலிதா ‘ஐ டோன்ட் நோ’ எனக்கு நீங்கள் சம்பளம் கொடுத்து இருக்கிறீர்கள். நான் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிட்டேன். அதனால் நான் என்னுடைய வேலையை சரியாக செய்து கொடுத்துவிட்டு தான் செல்வேன் என்று சொல்லி, அவர் எப்போது ரெடியாகிறாரோ அப்போது சொல்லுங்கள் நான் வருகிறேன் என்று சொல்லி சென்று விட்டார்.
அதன் பின்னர் என் டி ராமராவ் பிரச்சினையில் தலையிட்டு, இருவருக்கும் இடையே சமரசம் பேசி தொடர்ந்து அவர்கள் நடித்தார்கள்” என்று பேசினார்.
டாபிக்ஸ்