தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Kushbu Latest Interview About Regarding The Conflict Between Karthi And Himself After Varusham 16 Movie

Kushbu VS Karthi: நட்பிற்குள் நடந்த சலசலப்பு.. ‘அந்த சண்டையாலதான் நாங்க சேர்ந்து நடிக்கவே..’ - குஷ்பு ஓப்பன் டாக்!

Kalyani Pandiyan S HT Tamil
Mar 13, 2024 06:57 AM IST

அவரிடம் சென்று படத்தில் குஷ்பு தான் கதாநாயகி என்று சொன்னால், அவர் கதாநாயகியை மாற்றுங்கள் என்று சொல்வார். என்னிடம் யாராவது வந்து கார்த்திக் படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டால், இல்லை இல்லை வேண்டாம் நீங்கள் வேறு கதாநாயகியை பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிடுவேன்

குஷ்பு கார்த்தி சண்டை!
குஷ்பு கார்த்தி சண்டை! (wikipedia)

ட்ரெண்டிங் செய்திகள்

அவர் பேசும் போது, “  நாங்கள் நடிகர் கார்த்தியை முரளி என்றுதான் அழைப்போம். அப்போது நான் ஒரு குறிப்பிட்ட பார்லருக்கு அடிக்கடி செல்வேன். அங்கு முரளியும் வருவார். அங்குதான் அவரை நான் முதல் முறையாக பார்த்தேன். 

அப்போது அவர் நடித்த அக்னி நட்சத்திரம், மௌன ராகம் உள்ளிட்ட திரைப்படங்கள் மிகவும் பிரபலமாக இருந்தன. இதனால் அவரை பார்த்த அந்த கணம், நான் அப்படியே உறைந்து போய் நின்றேன். எங்களது நட்பு அங்கிருந்துதான் தொடர்ந்தது. 

முதல் முறையாக நாங்கள் வருஷம் 16 திரைப்படத்தில் தான் ஒன்றாக இணைந்து நடித்தோம். எனக்கு அவருடன் இணைந்து வேலை செய்வது என்பது மிகவும் ஈசியாக இருந்தது. காரணம் நாங்கள் முன்னரே ஒருவருக்கொருவர் நன்றாக பழக்கமாகி இருந்தோம்

வருஷம் 16 திரைப்படத்திற்குப் பிறகு நாங்கள் பெரிதாக எந்த திரைப்படங்களிலும் ஒன்றாக இணைந்து பணியாற்ற வில்லை. கிழக்கு வாசல் திரைப்படத்தில் மட்டும் இணைந்து நடித்தோம். அந்த இடைவெளிக்கு, ஒரு சண்டை காரணமாக அமைந்தது. இதனால் நாங்கள் இணைந்து நடிப்பதை தவிர்த்து வந்தோம். 

அவரிடம் சென்று படத்தில் குஷ்பு தான் கதாநாயகி என்று சொன்னால், அவர் கதாநாயகியை மாற்றுங்கள் என்று சொல்வார். என்னிடம் யாராவது வந்து கார்த்திக் படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டால், இல்லை இல்லை வேண்டாம் நீங்கள் வேறு கதாநாயகியை பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிடுவேன்

அதன் பின்னர் விக்னேஸ்வர் திரைப்படத்தில் தான் நாங்கள் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்தோம். அதற்கு காரணம் அந்த படத்தின் இயக்குனர் ரகு. ரகு எங்களிடம் இது நண்பர்களுக்கு இடையே வந்திருக்கும் பிரச்சினை, இதனையும், தொழிலையும் போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள் என்று சமாதானப்படுத்தினார்.

இதனையடுத்து நான் அப்படி என்றால் நீங்கள் முரளியிடம் சென்று சம்மதம் வாங்கி வாருங்கள் என்று சொன்னேன். முரளியோ, என்னிடம் சம்மதம் வாங்கி வாருங்கள் என்று சொல்லி இருக்கிறார். இதனையடுத்து இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசுங்கள் என்று சொல்லி எங்களை உட்கார வைத்து பேச வைத்தார்கள். அதன் பின்னர்தான் நாங்கள் விக்னேஸ்வர் திரைப்படத்தில் இணைந்து நடித்தோம். அங்கு ஆரம்பித்த நட்பானது இன்று வரை தொடர்கிறது. கார்த்தி எனக்கு எப்போதுமே மிகவும் ஸ்பெஷல் தான். கார்த்தியிடம் ஒரு விதமான மாய சக்தி இருக்கிறது” என்று பேசினார். 

முன்னதாக, பிரபல நடிகையான குஷ்பு தன்னுடைய கணவர் குறித்தும், தங்களுக்குள் இருந்த காதல் குறித்தும் அண்மையில் கலாட்டா சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பேசி இருந்தார்.

இது குறித்து அவர் பேசும் போது, “நான் இங்கு ஒன்றை பெருமையாக சொல்லிக் கொள்கிறேன். எனக்கு அருமையான கணவரும் அழகான மகள்களும் கிடைத்திருக்கிறார்கள்.

என்னுடைய அப்பா எனக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் கொடுத்ததை, நான் சுந்தர் சி யிடம் காதலிக்க தொடங்கிய போதே சொல்லிவிட்டேன். இன்றும் வீட்டில் அவரும், என்னுடைய மகள்களும் என்னை கலாய்த்து தள்ளுவார்கள். அப்போது நான் போன் செய்தால் சுந்தர் சி.. இப்போதுதான் உன்னை பற்றி பேசிக் கொண்டிருந்தோம் என்று சொல்வார். மேலும் வெளியில் தான் நீ புலி; வீட்டில் நீ வெறும் எலி என்று கிண்டல் அடிப்பார்.

என்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளிடமும், நண்பர்களிடமும் நான் கீழ்படிந்து தான் செல்ல வேண்டும். நான் கொஞ்சம் மேலே பறக்க முயன்றாலும் அவர்கள் கொட்டி விடுவார்கள். அது எனக்கு பணிவுடன் இருக்க கற்றுத் தருகிறது.

சுந்தர் சி குணத்தில் எனக்கு அப்படியே எதிரானவர். அவர் பெரிதாக பேசவே மாட்டார். இருக்கக்கூடிய இடமே தெரியாது கோபம் வந்தால் மட்டும் தான் சத்தம் போடுவார். அந்த கோபமும் எப்போதாவதுதான் வரும். அவருக்கு ட்ராவல் சுத்தமாக பிடிக்காது.

வீடு உண்டு அலுவலகம் உண்டு என்ற ரீதியில் தான் அவரது வாழ்க்கை இருக்கும். ஆனால் நான் அப்படி இல்லை. இருப்பினும் நாங்கள் ஒருவருக்கொருவர் அட்ஜஸ்ட் செய்து கொள்கிறோம். அவருக்கு ரொமன்ஸ் பெரிதாக வராது.

ஆனால் இன்று வரை எங்களுக்கு உண்டான அந்த ரொமான்ஸ் நிலைத்து நிற்கிறது. காரணம் நாங்கள் அதற்காக நிறைய உழைத்திருக்கிறோம். அப்போது அடிக்கடி கடிதம் எழுதுவது, அட்டைகள் வாங்கிக் கொடுப்பது, அவரிடம் பேசுவதற்காக போனுக்காக மணிக்கணக்காக காத்திருப்பது உள்ளிட்ட பலவற்றை செய்திருக்கிறோம்.

நான் அவருக்கு இரண்டு சூட்கேஸ் நிறைய காதல் அட்டைகளை அனுப்பி இருக்கிறேன். ஆனால் அவரோ 3 காதல் அட்டைகளை மட்டும்தான் அனுப்பி இருக்கிறார். இன்றைய காதலில் பெரிதாக உண்மை இருந்தது போல எனக்கு தெரியவில்லை. காரணம் என்னுடைய விஷயத்தில் இவர் காதலிக்கும் பொழுதே, ரொமான்ஸாக நடந்து கொண்டிருப்பது போல நடித்து இருந்தால் கல்யாணத்திற்கு பிறகும் எனக்கு அவர் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கும். ஆனால்,அவர் அவராகவே இருந்தார். அதனால் எனக்கு கல்யாணத்திற்கு பின்னர் ஏமாற்றம் ஏற்படவில்லை” என்று பேசினார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்